Certain aspects of Sandhyavandana

ஸந்த்யாவந்தனம்.

ஆசமனம்:

இந்த ஆசமனம் தைத்ரீய ஷாகையில் ப்ரும்ம யக்ஞத்திற்காக வேதங் கூறியதை பின் பற்றி மஹரிஷிகளால் விதிக்கப்பட்டது.

கேசவ நாராயண என்று கட்ட விரலால் வலது,இடது கன்னங்களையும் ,மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும், விஷ்ணோ

மதுஸூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்கையும், த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதரா ஹ்ருஷீகேச

என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா என்று கூறி எல்லா விரல்களாலும் சிரசிலும்

தொட வேண்டும்.

எந்த கர்மாவையும் ஸங்கல்பம் செய்து கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். விநாயகரை நாடி தலையில் குட்டி கொள்ளுதல். ப்ராணாயாமம் செய்தல்

பின்னர் வலது துடை மீது ,இடது கை கீழும் வலது கை மேலும் வைத்துக்கொண்டு கால தேஸங்களை கூறி இப்பயனுக்காக இந்த கர்மாவை செய்கிறேன் என்பதே சங்கல்பத்தின் கருத்து.

ப்ராணாயாமம்.

நமது சரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவை அடக்குவது ப்ராணாயாமம் என்ப்படும்.ப்ரதி தினம் நம் முயற்சி இல்லாமல் 21700 மூச்சு விட்டு கொண்டு

இருக்கிறோம்.தங்கத்திலிருக்கும் தோஷம் தீயில் வைத்து ஊத ஊத செல்கிறது. ப்ராணா யாமம் செய்ய செய்ய நம் பாபம் அகலுகிறது.கல்ப ஸூத்ரமும்

கர்மாகளிடையே "ப்ராயஸ்சித்தம் ப்ராணாயாமம்" என்று இதை ப்ராயஸ்சித்தமாக வர்ணிக்கிறது தர்ம ஸாஸ்த்ரமும் தினமும்16 முறை ப்ராணாயாமம் முறையாக

செய்பவர் ஸகல பாபமும் அகன்று சுத்தமாவர் என்கிறது.

ஆதலால் சந்த்யா வந்தனத்திலும் ஜபத்திலும் இது விதிக்கபட்டுள்ளது.அதற்குறிய மந்த்ர ஜபத்துடன் மூச்சை அடக்குவது ஸகர்ப்ப ப்ராணாயாமம்

. ஜபம்

தியானம் இல்லாமல் மூச்சை மாத்ரம் அடக்குவது அகர்ப்ப ப்ராணாயாமம்.கர்ம அங்கமாக செய்யும் போது சகர்பமாகவும், மனதை அடக்க அகர்பமும்

செய்யலாம்.வலது மூக்கை கட்டை விரலால் பிடித்துக்கொண்டு இடது மூக்கால் உள்ளே வாயுவை இழுப்பது பூரக ப்ராணாயாமம்.

இரு மூக்கையும் அடைத்து மூச்சே விடாமலிருப்பது கும்பகம்.இடது மூக்கை மோதிர விரலால் பிடித்துக்கொண்டு வலது மூக்கால் காற்றை வெளியே விடுவது

ரேசகம் எனபடும். இந்த பூரகம். கும்பகம், ரேசகம் மூன்றும் சேர்ந்தே ஒரு ப்ராணாயாமம் எனப்படும். பூரகத்திலும் ரேசகத்திலும் மெதுவாக ஸப்தம் கேளாமல்

வாயுவை இழுத்து விட வேண்டும்.

பூரக ப்ராணாயாமத்தில் நாபியின் நடுவில் ப்ரஹ்மாவையும் கும்பகத்தில் ஹ்ருதயத்தில் விஷ்ணுவையும் ரேசகத்தில் நெற்றியில் சிவனையும் த்யானம் செய்ய

வேண்டும்.ப்ராணாயாமம் செய்யும்போது , ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் மடக்கிகொண்டு கட்டை விரலாலும் , மோதிர,சுண்டு விரல்களால் மூக்கை

பிடித்துகொண்டு ப்ராணாயாமம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ப்ராணாயாமம் முடிந்த பின் வலது காதை தொட வேண்டும். வலது காதில் கங்கை இருப்பதால்

கையை சுத்தம் செய்து கொள்கிறோம்.

ப்ராணாயாமத்தில் முதலில் ப்ரணவம்.பிறகு ஏழு வ்யாஹ்ருதிகள். பிரகு காயத்ரி. அதன் பிறகு காயத்ரி ஸிரஸ். என்ற நான்கு மந்த்ரங்கள்

கூறுகிறோம்.ப்ரணவம் சுத்த ப்ருஹ்மத்தையும், ஏழு வ்யாஹ்ருதீகள் ப்ரணவத்துடன் கூறப்படுவதால் பரமனால் படைக்கப்பட்டு பரமணாகவே உள்ள ஏழு

லோகங்களையும், தலையை இழுத்தால் வாலும் வருவது போல் கீழே உள்ள பாதாளாதி ஏழு லோகங்களும் ஆக 14 லோகங்களையும்

காயத்ரியை கூறுவதன் மூலமாக நமது புத்திக்கு, ஷக்தி அளித்து தூண்டுபவரான பரமாத்மாவையும் காயத்ரீ ஸிரஸ் மூலம் ஜலமாகவும், ஜ்யோதிஸாகவும்,

ரஸமாகவும்,முவ்வுலகமாயுள்ள பரப்ருஹ்மத்தையே த்யானம் செய்கிறோம்.

அன்றன்று மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் செய்த பாபங்களை அகற்றுகிற்து இந்த கர்மா .பாபம் அகன்ற பிறகு தான் கர்மாக்ளை செய்தால்

அது பூர்ண பலன் தரும்.பாபங்களை அகற்றி புண்யத்தை தரும் புண்ய கர்மா சந்த்யா.நாம் அடைந்த உயர்ந்த ஜன்மாவிலிருந்து தாழ்ந்த ஜன்மாவை அடையாத படி

நம்மை ரக்*ஷிக்கிரது ஸந்த்யை. எனும் இந்த நித்ய கர்மா.

இதன் கருத்தையும் மந்த்ர அர்த்தத்தையும் உணர்ந்து அநுஷ்டாணம் செய்தால் சித்த சுத்தி, ஞானம்.ஷாந்தி மோக்ஷம் முதலிய சிற்ந்த பலன்களை பெறலாம்.

காயத்ரியும் அர்க்கியம் விட்ட பின் விதிக்கபட்டுள்ள அஸெள ஆதித்யோ ப்ரும்மா என்ற உபாஸனமும் மோக்*ஷ பலன் தருகிறது.

""அக்னிஸ்ச"" ""ஆபஹ"" ""ஸூர்யஸ்ச"" என்பவைகளில் கடைசியில் ஸ்வாஹா என்கிறோம். அது கர்ம ஆசாரத்திற்கு வழிக்காட்டியாம். ப்ராணாயாமம்

யோகத்திற்கு வழி காட்டி. அர்க்யமளித்தல் பக்தியின் ஒரம்சம். ""அஸோ ஆதித்ய:"" என்ற த்யானம் க்ஞானத்திற்கு வித்து .பிறவி கடலை தாண்ட வைப்பவை.

பேரின்பத்திற்கு ஸாதநமாக ஸந்த்யை அமைந்துள்ளது.

குமார ஸம்பவத்தில் பரமசிவனும் ஸந்த்யை செய்ததாக வர்ணிக்கிறார். ராமர். க்ருஷ்ணர். முனிவர்கள். யுத்த ஸமத்திலும் கெளரவர் சந்த்யா காலத்தில் யுத்தத்தை

நிருத்தி விட்டு சந்த்யை செய்துவிட்டு பிறகு இரவிலும் யுத்தம் தொடர்ந்தனர். தீட்டு வந்த போது கூட செய்ய வேண்டிய கர்மா ஸந்த்யை. சுத்தனோ அசுத்தனோ

காலத்தில் ஸந்த்யை செய்ய வேண்டும்.

காலம் கடந்து விட்டது.இனி செய்து பயனில்லையே என் விட்டுவிடக் கூடாது. அடுத்த வேளை செய்ய வேண்டிய சந்தியா கர்மா வரை விட்டு போனதை செய்ய

வேண்டும். நோய் வாய் பட்டு படுக்கையில் படுத்திருந்தால் அவனுக்காக அவனது நெருங்கியவர் அந்தந்த காலத்தில் சந்த்யை செய்து நோயாளி கையில் சிறிது

ஜலம் விட வேண்டும்.

ஒருவனை ஊருக்கு வழி கேட்கிறோம். அவன் வழியை கூறியவுடன் அவனுக்கு நன்றி கூறுவது நாகரீகம்.. உலகிலும் நம் உடலிலும் உள்ள அசுத்தங்களை

அகற்றுகிறார் சூரியன். ஜீவ கலையை ஊட்டுகிறார். மழையை அளிக்கிறார் .இருளை நீக்கி ஒளியை அளிக்கிறார்.. அத்தகைய சூரியனுக்கு நன்றி செலுத்துவதே

ஸந்த்யை.

நமக்கு சந்த்யா காலத்தில் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும் என்பது பகவானது ஆக்ஞை. அதை விட்டு விட்டு மற்றதை செய்தால் அவர் கோபத்திற்கு

ஆளாகிறோம். ஏற்ற காலத்தில் விதை விதைத்தால் நற்பலன் உண்டு.ஒரு ராகம் பாட ஒரு காலம் உண்டு. நீதி ஸ்தலத்தில் குறித்த காலத்தில் நாம் இல்லை

என்றால் வழ்க்கு தள்ளி போட படும். அல்லது எதிரிக்கு ஸாதகமாக தீர்ப்பு சொல்லப்படும். வங்கியில் குறிப்பிட்ட காலத்தில் தான் செல்ல முடியும். வண்டியில்

தெருவில் செல்லும் போது சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்துகிறோம் .

இங்ஙனம் மனிதர் இயற்றிய சட்டத்திற்கு உட்பட்டு வேலை செய்கிறோம். நமது இஹபர நன்மைக்காக பரமாத்மா இட்ட கட்டளையான ஸந்த்யையை விடலாமா?

போதாயன ரிஷி கூறுகிறார்: : பராசக்தியான ஸந்த்யை உலகை படைத்தது. மாயையை கடந்தது .நிஷ்கலமானது ஈஸ்வரியானது. கேவல சக்தியானது.

மும்மூர்த்திகளிடமிருந்து உண்டானது.

மூன்று காலத்திலும் வெவ்வேறு ரூபமாக (அந்த்ந்த காலத்தில் அந்தந்த ரூபிணியாக)த்யானம் செய்து ஒவ்வொரு வேளையிலும் ஏக ரூபமாய் இருப்பதாகவும்

த்யானம் செய்ய வேண்டும். இதற்கு தான் ஸந்த்யை என்று பெயர். சிறிய மனதால் த்யாநம் செய்ய முடியாது. ஆதலால் முதலில் ஸூர்யனையும். ஸூர்ய

மன்டலத்தில் காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி, சமஷ்டி காயத்ரி என்றும் பல வாறாக த்யானம் செய்ய வேண்டும்.

ஒன்றையே மூண்று வேளையிலும் நித்யம் த்யானம் செய்தால் அதே மனதில் தங்கிவிடும் ஒன்று ஒன்றாக த்யானம் செய்தால் ஒன்றில் நிலைக்காமல் த்யான

சக்தி வ்ருத்தியாகும் .நாள் ஆக ஆக இந்த உருவங்ளையும் விட்டு விட்டால் மனம் ஒன்றையும் நினையாமல் அசைவற்று நிற்கும்.மநோ வ்ருத்திகள் ஒழிந்தால்

தான் க்ஞானம் நிலைத்து நிற்கும்..முக்தி உண்டாகும்.படி படி யாக மோக்ஷ ஸாதநமே.

ஸந்த்யா வந்தனத்திற்கு பாஹ்ய அங்கம்: ஸ்நாநம்; பஞ்சகச்சம் அணிதல்; புண்ட்ரம் தரித்தல்; சுத்தமான பூணல். குடுமி; ; பூர்வாங்கம்: ஆசமனம், சங்கல்பம்,

மார்ஜனம், ப்ராசனம்;ப்ரோக்*ஷனம், ஜப ஸங்கல்பம் ;ப்ராணாயாமம்; உத்திர அங்கம்; நவகிரஹாதி தர்பணம்;ப்ரானாயாமம். திக் வந்தனம்.ஸந்த்யா கர்மாவின் ஜீவ

நாடி=அர்க்ய ப்ரதானம், அஸாவாதித்யோ என்று செய்யும் த்யானம்; காயத்ரீ ஜபம், உபஸ்தானம்.

எதையும் " இதை எதற்காக செய்கிறோம்; என்ன பயன் பூஜிக்கபடும் தெய்வம் எது அது எத்தகைய குணமுள்ளது." என்பவைகளை நன்கறிந்து செய்ய வேண்டும்.

ஆசமனம்: மூன்று முறை ஜலத்தை ப்ரும்ம தீர்த்தத்தால் உட்கொண்டு இரு முறை உதட்டை துடைத்து கேசவாதி நாமாக்களை கூறி குறிப்பிட்ட அவயவங்களை

தொடுவது ஆசமனம். எனப்படும். கை விரல்களின் நுனியால் ஜலம் விடுவது தேவ தீர்த்தம். கட்டை விரல் பக்கமாக விடுவது பித்ரு தீர்த்தம்.அடிப்புரத்தால்

விடுவது ப்ரும்ம தீர்த்தம். சுண்டு விரல் பக்கமாக விடுவது ரிஷி தீர்த்தம்.

ஒவ்வொரு கர்மாவின் ஆரம்பத்தி லும் முடிவிலும் ஆசமனம் அவஸ்யம் செய்ய வேண்டும். ஆசமனத்தில் பல வகை உண்டு. அவரவர் முனோர்கள் செய்து வந்த

படியே செய்யவும். புதிதாக ஒன்றை ஆரம்பிக்கக் கூடாது. ஜலத்தில் நின்று க்கொண்டு ஆசமனம் செய்தால் முழங்கால் மறையும் அளவிற்கு ஜலத்தில் நிற்க

வேண்டும். இடது கையால் ஜலத்தை தொட வேண்டும். வலது கையால் ஆசமனம் செய்யவும்.

குளம் நதிகளில் உட்கார்ந்து செய்வதானால் வலது காலை கரையில் வைத்து கொண்டு உட்கார்ந்து இடது காலை ஜலத்தில் வைத்துகொண்டு இடது கையால்

ஜலத்தை தொட்டுக்கொண்டே வலது கையால் ஆசமனம் செய்ய வேண்டும். வீட்டில் செய்வதானால் இரு கால்களையும் குத்திட்டுகொண்டு இரு

முழங்கைகளையும் அதற்குள் வைத்துகொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

சுண்டு விரலையும் மோதிர விரலையும் நீட்டி விட்டு மற்ற மூண்று விரல்களையும் சிறிது வளைத்தால் உள்ளங்கை குழிவாக இருக்கும்.அதில் ஜலத்தை

எடுத்துக்கொண்டு அந்த ஜலம் இருதயம் வரை போகும் அளவு உட் கொள்ள வேண்டும்.முதலில் அருந்தியது உட்சென்ற பிறகே மற்றுமிருமுறை உட் கொள்ள

வேண்டும் மூன்றையும் சேர்த்துக் குடிக்கலாகாது.. அந்த ஜலம் ஒரு உளுந்து முழுகும் அளவு இருக்க வேன்டும்.

அந்த ஜலம் உஷ்ணமாகவோ நுரை உள்ளதாகவோ உப்பு அல்லது வேறு எந்த ரசம் கலந்ததாகவோ இருக்ககூடாது. குழாயில் அல்லது மேலிருந்து விழும் நீரால்

ஆசமனம் செய்ய கூடாது. ஸமுத்திர ஜலத்தால் ஆசமனம் செய்ய கூடாது தர்பணம் செய்யலம்.வைதீக ஸத் கர்மாக்களை ஆரம்பிக்கும் போது ஆசமனம்

செய்தால் அது இந்திரியங்களை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் அதை செய்ய யோக்யதையை உண்டு பண்ணுகிறது. பிறர் ஆசமனம் செய்த மிகுதி ஜலத்தால் ஆசமனம் செய்ய கூடாது.

யஞ்ஞோபவீதம்:

பருத்திப் பஞ்சைக் கொண்டு நூற்ற நூலை மூண்று இழைகளாக ச்சேர்த்து கொண்டு , சுத்தமான இடத்தில் அமர்ந்து , வலது கையின் நான்கு விரல்களை சேர்த்துகொண்டு

( நான்கு அங்குல சுற்றளவு உள்ளதாக வைத்துக்கொண்டு அதில் அந்த நூலை 96 தடவை சுற்றினால் அது பூநூல் அல்லது ஷன்னவதி எனப்படும்.

அதை அப்லிங்கமான ஆபோஹிஷ்டா, ஹிரண்யவர்ணா, பவமான: என்ற மந்த்திரங்களால் ப்ரோக்*ஷித்து சுத்தி செய்ய வேண்டும். பிறகு காயத்திரி மந்த்ரம் உச்சரித்த வண்ணம் த்ரிகுணிதம் செய்தல் வேண்டும்.

அதாவது மூன்றாக மடித்து முறுக்கி ,பிறகு உள்ளங்கையில் மூண்று முறை அடித்து பிறகு வலம்புரி முடிச்சு ((ஆத்தி முடிச்சு)) போடவேண்டும்.

இவ்வாறு செய்யப்பட்ட பூநூல் தொப்புள் வரையிலும் நீளமுள்ளதாக இருக்கவேண்டும். .குறைவாக இருந்தால் ஆயுள் குறைவு. அதிகமாக இருந்தால் செய்யும் கர்மாக்களுக்கு பலன் குறைவு.

இவ்வாறு தயாரித்த பூநூலை சுத்தமான இடத்தில் வைத்து நவதந்து தேவதைகள்=ஓங்காரம், அக்னி; பக; சோமன்; பித:ர:: ப்ரஜாபதி: விஷ்ணு: தர்ம: ஸகல தேவதா: கிரந்தி தேவதைகள்.

இவர்களைஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் உத்வயம் என்ற மந்திரத்தால் ஸூர்யனுக்கு காண்பித்து விட்டு, பவித்ரமான இடத்தில் எடுத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.

உபவீதம் ப்ருஹ்மசாரிக்கு ஒன்று. த்ரிதண்டி ஸந்யாஸிகளுக்கு ஒன்று .க்ருஹஸ்தனுக்கு இரண்டு. உத்தரீயார்த்தம் தரித்து கொள்வது மூன்றாவது உபவீதம்..

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to Certain aspects of Sandhyavandana

  1. Umaravichandran says:

    Very useful. Very Very happy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s