Thirumaandurai temple

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
(15)
🌹 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர். 🌹
(நேரில் சென்று தரிசித்தது போல….)
""""""""""""""""""""""’"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
🌹 திருமாந்துறை.🌹
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

இறைவன்: ஆம்ரவனேஸ்வரா், சுந்தரத்னேஸ்வரா், மிருகண்டீஸ்வரா், ஆதிரத்னேஸ்வரா்.

இறைவி: அழகம்மை, வாலாம்பிகை.

தீா்த்தம்: காயத்ரி நதி.

தலமரம்: மாமரம் (ஆம்ரம்)

சோழ நாட்டில் வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களிலா, 58-வது தலமாகப் போற்றப்படுகிறது.

இருப்பிடம்: லால்குடிக்குப் பக்கத்தில் இருக்கிறது. திருச்சி-லால்குடி சாலையில் உள்ள தலம். திருச்சியிலிருந்து 15. கி.மீ தொலைவில் இருக்கிறது.

பெயர்க் காரணம்:
மாமரத்தின் கீழ் இறைவன் வெளிப்பட்டமையால் மாந்துறை எனவாயிற்று.

இது வடகரை மாந்துறை என்று அழைக்கப்படுகிறது.

கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடிக்குப் பக்கத்தில் உள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது.

அஃது வைப்புத் தலம்.

இத்தலத்தின் பெயர்கள்-ஆம்ரனம், பிரம்மானந்தபுரம், மிருகண்டீசுரபுரம் என்பன.

தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர் 2-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே.

கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜ கோபுரம்.

இக்கோபுரம் பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.

எதிர் புறத்தில் நந்தி மண்டபம் இருக்கிறது.

கோபுரத்தைக் கடந்து செல்லும் போது அழகிய நீண்ட பிரகாரம் காணப்படுகிறது.

ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கு திசையில் தலவிருட்சமான மாமரம் உள்ளன.

கோபுரத்தின் முன்னால் காவல் தெய்வம் உள்ளது.

வாயிலைக் கடந்து உள்ளே புகுந்தால் பிரகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், இலக்குமி, நவக்கிரகங்கள், பைரவர், சந்நிதிகள் உள்ளன.

கோஷ்டமூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சியருள் புரிகின்றன.

நால்வருள், சுந்தரா் கைத்தடியேந்தி நிற்கின்றார். பின் வாயிலைக் கடந்து செல்லும் போது, மிருகண்டு முனிவர் இறைவனை வழிபடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம்.

நுழைவு வாயிலின் மேலே இறைவன் மான் குட்டித் தாயாக வந்த வரலாறு சுதைச் சிற்பமாகக் காட்சியளிக்கிறது.

சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர்.

உற்சவ மூர்த்தங்கள் சுவாமி சந்நிதியில் பாதுகாப்பாக உள்ளன.

தல அருமை:
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மாமரங்கள் சூழ்ந்த வனமாக இருந்தது.

இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார்.

அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாப் பிறந்த அசுர குல தம்பதியர்களுக்குப் பிறந்தார்.

ஒரு நாள் குட்டிமானை விட்டு விட்டு, தாய்மானும், தந்தை மானும் வெளியே சென்று விட்டன.

அவை இரை தேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர்.

இரவு நெடுநேரமாகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது.

நேரம் ஆக ஆக குட்டிமானுக்கு பசி எடுத்தது. பசியினால் அலறிப் பிழற்றியது.

சிவனும் பார்வதியும், குட்டி மானைப் பெற்ற வடிவில் இங்கு வந்தனர்.

வாசியால் வாடியிருந்த குட்டிமானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினாள்.

தந்தை மானாக வந்த சிவன் குட்டிமானைப் பற்றியனைத்து ஆற்றுப்படுத்தினார்.

சிவன் பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டிமான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று, மீண்டும் மகரிஷியாக மாறியது.

அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினார்.

தல பெருமை:
இத்தலத்தில் இராசராசன் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

இவற்றின் மூலம் கோயில் நந்தவனத்தைப் பராமரிக்க நிலம் விட்ட செய்திகளும், வரிதர முடியாமல் வருந்திய மக்கள், நகரை விட்டு வெளியேறுவதை அறிந்த மன்னன், வரியைத் தள்ளுபடி செய்து, குடிமக்கள் வெளியேறிப் போவதைத் தடுத்து குடிபுக செய்த செய்திகளும் தெரிய வருகின்றன.

சூரியன், சந்திரன், மிருகண்டுமுனிவர் ஆகியோர்கள் வழிபட்ட தலம்.

தாயை இழந்த மான்குட்டிக்காக இறைவனே தாயாக மான் உருவெடுத்து வந்தன வரலாறு.

சூரியனின் மனைவியான சமுக்யாதேவி, அவளால் சூரியன் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன் நிழலிலிருந்து ஓர்,உருவத்தை உண்டாக்கினாள் சாமுக்யாதேவி.

தனக்குப் பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள்.

பின் சமுக்யாதேவி தன் தந்தையிடம் வந்தாள். தந்தை அவளுக்கு அறிவுறை கூறினார்.

சமுக்யாதேவி குதிரை வடிவமெடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும், சிவனை வேண்டி தவம் செய்தாள்.

இதனிடையே சாயாதேவியின் நடத்தையில் வித்தியாசத்தைக் கண்ட சூரியன் அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து தன் மாமனார் விஸ்வகர்மா மூலம் தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு அவர் மூலமாக தன் உக்கிரத்தைக் குறைத்துக் கொண்டார். இத்தலம் வந்து வழிபட்டு பேறு பெற்றனர்.

சூரியன் தனியாகவும் இருக்கிறார்.

பிற கிரகங்களெல்லாம் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

திருவிழா:
ஆடி வெள்ளி,
நவராத்திரி,
அன்னாபிஷேகம்,
கார்த்திகை சோமவாரங்கள்,
திருவாதிரை,
சிவராத்திரி முதலிய விழாக்கள்
நடைபெறுகின்றன.

பங்குனி மாதத்தில் முதல் மூன்று நாட்களில் சூரிய ஒளி சுவாமியைத் தழுவுகின்ன.

பூஜை:
காமீக ஆகம முறையில் மூன்று கால பூசை.

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு,7.30 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு, ஆம்ரவனேஸ்வரரா் திருக்கோயில்,
மாந்துறை மற்றும் அஞ்சல் –லால்குடி S O
(வழி) ஆங்கரை.
லால்குடி வட்டம்.
திருச்சி மாவட்டம்- 621 703

தொடர்புக்கு:
சுப்பிரமணிய குருக்கள்
94866 40260
பாலகிருஷ்ணன் பேஷ்கார்
99427 40062

திருச்சிற்றம்பலம்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s