Karkudi temple


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(23)*
🍃 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🍃
(நேரில் சென்று தரிசித்ததைப் போல…..)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🍃 *கற்குடி.* 🍃
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* உச்சிநாதர், கற்பக நாதர், முக்தீசர்,உஜ்ஜுவநாதர்.

*இறைவி:* பாலாம்பிகை, அஞ்சனாக்ஷி, மைவிழி அம்மை.

*தலமரம்:* வில்வம்.

*தீர்த்தம்:* பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண, நாற்கோண தீர்த்தம் என்பன.

இதில் மேலே கண்ட முதலில் உள்ள இரண்டு தீர்த்தங்கள் வெளியிலும், பின் மூன்று தீர்த்தங்கள் கோவிலிலும் உள்ளன.

நாற்கோணக் கிணற்று நீரையே அபிஷேகங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தீர்த்தமான குடமுருட்டி என்பது தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு கிடையாது. இது வேறாகும்.

சர்ப்ப நதி.

இதை உய்யக் கொண்டான் நதி எனவும் சொல்லப்படுகிறது.

இந்நதி, காவிரியில் ஓடிவரும் கால்வாய்களில் இதுவும் ஒன்று.

மற்றொரு தீர்த்தமான ஞானவாவி எனக்கூறப்படும் தீர்த்தத்துக்கு *முக்தி தீர்த்தம்* என்றும் பெயர்.

சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் நான்காவதாகப் போற்றப்படுகிறது..

*இருப்பிடம்:*
திருச்சியிலிருந்து பேருந்து வசதி உள்ளன.

தற்போது உய்யக் கொண்டான் மலை, உய்யக்கொண்டான் திருமலை என்று வழங்கப்படுகிறது.

*பெயர்க் காரணம்:*
இறைவன் கல்லில்– மலையில் குடியிருப்பதால் *கற்குடி* என்னும் பெயர் பெற்றது.

இப்பகுதிக்கு நந்திவர்ம மங்கலம் என்று பெயர்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*–1-ல் ஒரே ஒரு பதிகமும்,
*அப்பர்*- 6- ல் ஒரே ஒரு பதிகமும்,
*சுந்தரர்*- 7-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் இத்தலத்திற்கு கிடைக்கப்பெற்ற பதிகங்கள்.

*கோவில் அமைப்பு:*
கோயிலின் பரப்பளவு நான்கு ஏக்கர் விஸ்தீரணம் உடையவை.

ஐம்பது அடி உயரமுடைய சிறிய மலையின் மீது கிழமேற்காக 300 அடி நீளமும், தென்வடலாக 600 அடி அமையப்பெற்றதாகும்.

மேற்கு நோக்கியதுமான இருபத்தைந்து அடி உயரமுள்ள மூன்று நிலைகளையுடைய ராஜ கோபுரம் இருக்கின்றன.

ஐந்து பிரகாரங்களைக் கொண்டது.

மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த இறைவன் அருள் புரிந்த தலம்.

இவ்வரலாற்றுச் சிற்பம் கோயிலின் வாயிலின் முகப்பில்.மேலே சுதையால் ஆக்கப்பட்டுள்ளது.

வெளிச்சுற்ளில் லிங்கம் இடர்காத்தார் என்னும் பெயருடன் திகழ்கின்றது.

நாரதர், உபமன்யுமுனிவர், மார்க்கண்டேயர், கரன்,அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.

கோயில் மலை மேல் இருக்கிறது.

அழகான கற்கோயில்.

கிழக்குப் பார்த்த முகப்புடன் கூடிய வாயில்.

திருக்குளம் (ஞானவாவி) படிகளில் செல்லும் போது இடப்பால் விநாயகர் உள்ளார்.

மேலேறிச் சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளன.

அதன் முன்பு–மார்க்கண்டேயனைக் காப்பதற்காக–எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற, சுவாமியின் பாதம் உள்ளன.

படிகளைக்கடந்து உட்சென்றோமானால் முதலில் அஞ்சனாட்சி–(மைவிழி அம்மை) அம்பாள் சந்நிதி அருளாகக் காட்சி தருகிறது.

மேற்கு நோக்கிய சந்நிதி— பழைய அம்பாள்.

இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துள்ளதால் புதிய அம்பாளை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றனர்.

எனினும் அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே இருக்கச் வைத்துள்ளனர்.

இரு அம்பாளுக்கும் நித்திய பூஜை நடைபெற்று வருகின்றது.

புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கியது.

சண்முகர் சந்நிதி அழுகுடன் காட்சியளிக்கிறது.

உள் நுழைந்ததும் நேரே கோஷ்ட தட்சிணாமூர்த்தி தரிசனம்.

வலமாக வரும்போது, நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதியும், மறுபுறத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளனர்.

கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனிபகவான்,சந்நிதிகளும் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன், துர்க்கையும், பிரம்மாவும், அர்த்த நாரீஸ்வரரும் உள்ளனர்.

நவக்கிரக சந்நிதி இருக்கிறது.

மூலவர் சுயம்புவானவர்.

இவர் சந்நிதி மேற்கு நோக்கிய திசையினைக் கொண்டது.

சதுர ஆவுடையாரான இறைவன்.

மூலவருக்கு நேரே உள்ள மண்டபத்தில் நடராசர் சந்நிதியில் ஆடவல்லானின் திருக்கோலம்.

அதன் பக்கத்திலே பிட்சாடனர், சந்திர சேகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர்,சோமாஸ்கந்தர் முதலிய உற்சவத் திருமேனிகள் அழகு மெழுகி அருக்காட்சியாய் தெரிகிறார்கள்.

*தல அருமை:*
ஆன்மாக்களை உய்யக் கொள்வதற்காக எழுந்தருளிய பெருமானின் இருப்பிடமாதலின் உய்யக் கொண்டான் திருமலை எனப் பெயர்.

இக்கோயிலுக்கு மூன்று வாயில்கள்.

இவ்வாயில்களில் இரண்டு தெற்கு நோக்கியும், ஒரு வாயில் கிழக்கு நோக்கியும் உள்ளன.

சுவாமி அம்மன் சந்நிதிகள் மேற்கு பார்த்தவை.

மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் உயிர் கொண்டார் என்று பெயர் ஏற்பட்டது.

இவரே ஜீவன்களுக்கு ஆதரமாக இருப்பதால் உஜ்ஜீவநாதர் என்று பெயர் ஏற்பட்டது.

ஆடிப் பெளர்ணமி அன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம்.

எனவே அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

தவிர பெளர்ணமி தோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலாபிஷேகம் நடக்கும்.

சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவ தரிசனம் செய்த போது சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார்.

*திருவிழா:*
இங்குப் பெளர்ணமி விசேஷம்.
பங்குனியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது.

தைப்பூசத்தன்று சந்திரசேகரர் சோமரசம் பேட்டைக்கு எழுந்தருளுகின்றார்.

*கல் வெட்டுக்கள்:*
கல்வெட்டுக்களில் முதற் பராந்தகன், உத்தமசோழன், முதல் இராஜராஜன், முதல் பரகேசரி ராஜேந்திரன், ராஜகேசரி வீர ராஜேந்திரன், முதல் ராஜகேசரி குலோத்துங்கன், மல்லிகார்ச்சுன மகாராயன், மயிலைத் திண்ணன் முதலிய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

இவ்வூரை பாண்டிய குலாசனி வளநாட்டு ராஜாஸ்ரேய சதுர்வேதி மங்கலத்துக் கற்குடி எனவும், இறைவன் திருக்கற்குடி பரமேசுவரர், உய்யக் கொண்ட நாயனார் என குறிக்கப்பட்டுள்ளது.

*பூஜை:*
காமீக ஆகம முறையில் மூன்று கால பூஜை.

காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை,

மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, உஜ்ஜீவநாதசுவாமி திருக்கோயில்.
உய்யக்கொண்டான் திருமலை, மற்றும் அஞ்சல்,
(வழி) சோமரசம் பேட்டை S O
திருச்சி மாவட்டம். 620 102

*தொடர்புக்கு:*
சத்தியகீர்த்தி குருக்கள்.
94426 28044,
94431 50332,
94436 50493.

இக்கோயில் தருமை ஆதினத்தைச் சார்ந்தவை.

திருச்சிற்றம்பலம்.

*நாளை……..மூக்கீச்சுரம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s