Recite Thiruvasagam

சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(17)*
🍁 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.*🍁
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🍁 *திருவாசகம் ஓதுங்கள்*🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
நாளும் திருவாசகம் ஓதுவேண்டும்! நாள்தோறும் திருவாசகத்தை நினைந்து நினைந்து ஞானமழையில் நனைந்து நனைந்து உணா்வில் சிறந்து சிறந்து அழுவேண்டும்! இறைவனை நினைந்து அழுவதற்குாிய ஞானப்பாடல்கள்தான் திருவாசகம்! அழுகின்ற கண்களில் தான் கடவுள்தன்மை பூரணமாகப் பாிணாமிக்கிறான்….. ஏன்?

தமிழ் பத்திமைக்குாிய மொழி பிாிவு துன்பத்தைத் தருவதாகும். குருந்த மரத்தடியில் திருப்பெருந்துறை ஈசனைக் கண்டு அனுபவித்த மாணிக்கவாசகருக்கு ஈசனின் பிாிவு ஏற்பட அந்த துன்பத்தில் பிறந்த தமிழ்தான் திருவாசகம்.

ஆதலால்தான் அதைப் பாடும் போது நெஞ்சை உருக்குகிறது. உள்புகுந்து எலும்புத் துளைகள் ஆனந்தித்து பக்திப்பிரவோகம் பொங்கி உருகியொழுகச் செய்கிறது. அதனாலேயே உருக்கும் தன்மை மிக்குடையதாக விளங்கிறது.

மாணிக்கவாசகா் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஈசனைக் கண்டாா்.
*"கண்ணால் யானும் கண்டேன் காண்க"* என்று மாணிக்கவாசகா் அருளிச் செய்கிறாா்.

அது மட்டுமல்ல. கடவுள் காட்சியின் இயல்பையும் விளக்கிக் கூறும் பாடல்களைப் படித்துணாில் மாணிக்கவாசகா் கடவுளின் காட்சியில் திளைத்தவா் என்பது உறுதி.

*வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்(று)அ*

*னேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்( று) அங்( கு)*

*எண்ணந்தான் தடுமாறி இமையோா் கூட்டம்*

*எய்துமா(று) அறியாத எந்தாய் உன்றன்*

*வண்ணந்தா னது காட்டி வடிவு காட்டி*

*மலா்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்*

*திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்*

*எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக் கேனே*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s