Lord Shiva coming as a witness in court – Story

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(20)*
☘ *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* ☘
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
மதுரையில் வசித்த கணபதி என்ற பணக்காரனொருவன் இருந்தான். அவனுக்கு சுசிலை என்ற மனைவி இருந்தாள். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே தனது தங்கை குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார்கள்.

ஒரு சமயம், கணபதிக்கும் அவன் தங்கைக்கும் வாக்குவாதம் நடந்தது. தங்கையோ கோபத்தில் அண்ணனை நோக்கி,…..*நீயோ குழந்தையே இல்லாத பாவி! உனக்குப் பிள்ளையைத் தத்துத் தந்த என்னையே இகழ்ச்சி படுத்துகிறாயா? நான் பிள்ளையைத் தத்துக் கொடுக்காவிட்டால், உனக்கும் மகிழ்ச்சியும் வாழ்வும் இல்லாது போயிருக்குமே! என கத்தினாள்.

தங்கையின் பேச்சு கணபதியின்
மனசை மிகவும் பாதித்தது. முடிவாக தங்கையின் பிள்ளைக்கு சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டு, மனைவியை உடன் அழைத்துக் கொண்டு காடே கதியென சென்றான். காட்டிலும் விரதம் மேற்கொண்டு தவம் செய்தான்.

காலம் வெகுவாகிப் போனது. கணபதி ஊர் திரும்பி வருவதாய் இல்லை.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, கணபதியின் சொத்து முழுவதையும் உறவினர்கள் ஆளாளுக்கு பங்கு பிரித்து எடுத்துக் கொண்டனர். கணபதியின் தங்கைக்கு எந்த பங்கையும் உறவினர்கள் கொடுக்காது ஏமாற்றி விட்டனர்.

கணபதியின் தங்கையோ நியாயம் கிடைக்க, மதுரை சொக்கநாதர் திருக்கோயிலுக்கு வந்து சுவாயிடம் முறையிட்டளுதாள்.

*உமையொரு பாகனே!* அறியாத சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு செய்வதறியாது தவிக்கிறேன். என் அண்ணணின் பாசத்தை இப்போதுதான் உணர்கிறேன். நீ தான் *என்னைக் காப்பாற்ற வேண்டும்* என அபயக்குரல் கொடுத்தாள்.

அன்றைய தின இரவிலே, கணபதியின் தங்கைக்கு கனவில் சொக்கநாதர் தோன்றினார். *"சொத்துக்களை கபளீகரம் செய்த உன் உறவினர்களை நீதிமன்றத்துக்கு வா!* அங்கே உனக்குரிய நீதியை நான் வழங்குவேன்," எனக் கூறி மறைந்தார்.

மறுநாள் நீதிமன்றம் வந்து, உறவினர்கள் மீது வழக்குத் தொடுத்தாள் கணபதியின் தங்கை.

உறவினர்களை விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது யாவரும் எதிர்பாரத விதமாக கணபதி அங்கே வந்தார்.

தங்கையையும் குழந்தையையும் கண்ட கணபதி குழந்தையைத் தூக்கி ஆரத் தழுவி தங்ககையையும் அரவணைத்தார். பின் நீதியரசரை நோக்கி….நான் எனது சொத்து முழுவதையும் இந்தக் குழந்தையின் பேரிலேயே எழுதிவிட்டுச் சென்றிருந்தேன்.

என் உறவினர்களான இவர்கள், சொத்தை அபகரித்ததும் பத்தாதென தங்கை அணிந்திருந்த நகைகளையும் புடுங்கிக் கொண்டார்கள் என கணபதி வாதிட்டார்.

உறவினர்களோ,……..இவர் கணபதி இல்லை . இவள் போலியாக ஒருவனை அழைத்து வந்திருக்கிறாள் என்று குற்றம் சாட்டினார்கள்.

ஆனால் கணபதியோ அனைத்து விபரங்களையும் கூறி, மேலும் தன்னுடைய பெயர் குலம் கோத்திரம் தொழில் எல்லாவற்றையும் விவரமளித்து, தான் வனம் சென்றது வரை முழுவதையும் நீதியரசர் முன் சொன்னார்.

அனைத்தையும் விசாரணை செய்த நீதியரசர், கணபதியின் தங்கையிடமே சொத்து முழுவதையும் ஒப்படைக்கும்படி ஆணையிட்டார். உறவினர்களுக்கும் தண்டனை அளித்தார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்து தேடினாள்.

அங்கே கணபதியைக் காணவில்லை. கணபதி வடிவில் வந்த ஈசனே என்பதை அவள் உள்ளூரவுணர்வு உணரக் கண்டாள்.

இந்த வரலாறு உண்மையாக நடந்தது. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s