Panchangam – Periyavaa

பஞ்சாங்கம்…..

நம்முடைய பெரியவா விடிகாலை 3 அல்லது 3.30 மணிக்குள் எழுந்து விடுவார். "ஸ்ரீஹரி! ஸ்ரீஹரி!.." என்று ஹரி நாம கோஷத்துடன் எழுவார். வெளியே வந்ததும், விஶ்வரூப தர்ஶனத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் ஸுமங்கலி பெண்கள், விராட் ஸ்வரூபத்துக்கு கல்பூர ஹாரத்தி காட்டுவார்கள் பக்தர்கள் இந்த அற்புத தர்ஶனத்தை, கண்ணும் மனஸும் குளிரக் குளிர காண்பார்கள். பெரியவா, சில ஸமயம் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் யாருடனாவது பேசுவார்.

பிறகு ‘கொட்டாய்’ பக்கம் சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வருவார். அதன்பின் "ஒருமணிநேர ஜப" த்துக்கு அமர்ந்து கொள்வார். ஸ்ரீ வேதபுரி மாமா, ஸ்ரீ பாலு அண்ணா போன்ற அணுக்கமான பாரிஷதர்கள் அதற்கானதை ஸித்தம் செய்வார்கள். ஒரு தையல் இலை மேல், கங்கைச் சொம்பில் ஓட்டை போட்டு வைத்து, விபூதி மடல், கடிகாரம் எல்லாம் வைப்பார்கள்.

பெரியவா கங்கா தீர்த்தத்தை ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டு, ஶிரஸிலிருந்து பாதம் வரை விபூதியை தடவிக் கொள்வார். பரமேஶ்வரனுக்கு பஸ்மத்தால் அபிஷேகம் செய்தது போல் காக்ஷியளிப்பார். அதன் பெயர் ‘விபூதி ஸ்நானம்’. பிறகு விபூதியை குழைத்து நெற்றியில் இட்டுக் கொண்டு தேஜோமயமாக ஜ்வலிப்பார்!

அதன் பின் பஞ்சாங்க படனம் பண்ணச் சொல்லுவார். பஞ்சாங்கம் வாஸிப்பதை பெரியவா எப்போதுமே உன்னிப்பாக கேட்பார்.

"பஞ்சாங்கம்-ன்னா…திதி, வாரம்[நாள்], நக்ஷத்ரம், யோகம், கரணம் இந்த அஞ்சும் சேந்ததுதான்! திதியை சொன்னா… ஐஶ்வர்யம் சேரும் ; வாரத்தை சொன்னா ஆரோக்யம் கெடைக்கும் ; நக்ஷத்ரத்தை சொன்னா பாவம் போகும்; யோகத்தை சொன்னா, வ்யாதி போகும்; கரணத்தை சொன்னா, கார்ய ஸித்தி ஆகும்…எல்லாரும் தெனோமும் பஞ்சாங்கம் வாஸிக்கணும்…"

இது பெரியவா திருவாக்கு.

ஸ்ரீ வேதபுரி மாமா சின்னப் பையனாக இருக்கும்போதே, பெரியவாளால் ஆட்கொள்ளப்பட்டு, பெரியவாளுடனேயே ஸதா வஸிக்கும் பாக்யம் பெற்றவர். ஒருநாள் பெரியவா மௌனத்தில் இருந்தார்! குட்டிப் பையனான வேதபுரி அன்று பஞ்சாங்கம் படிக்க ஆரம்பித்தான்!

திதி, வாரம், நக்ஷத்ரம், யோகம்….படிச்சாச்சு! கரணம் படிக்க மறந்துவிட்டான்! பெரியவாளும் அவனாகவே வாஸிக்கட்டும் என்று பேசாமல் இருந்தார்……ம்ஹூம்! வேதபுரிக்கு, தான் கரணம் வாஸிக்கவில்லை என்பதே தெரியவில்லை..

குழந்தை பெரியவாளுக்கு, குழந்தையுடன் விளையாட ரொம்ப பிடிக்கும் இல்லையா?

வேதபுரியிடம் "குட்டிக்கரணம்" போடுவது போல் கையால் ஸைகை செய்தார்….. "கரணம்" என்பதை ஞாபகப்படுத்துகிறாராம்!

குட்டிப்பையனுக்கு, குட்டிக்கரணம்தானே முதலில் ஞாபகத்துக்கு வரும்? பெரியவா, ஸைகையும் பண்ணிவிட்டாரே!

போட்டான்!….இப்படியும் அப்படியுமாக ரெண்டு மூணு குட்டிக்கரணம்! கனகஶைலவிஹாரர் முன்னால்!

மௌனமாகவே உள்ளுக்குள் ‘விழுந்து விழுந்து’ சிரித்திருக்கும் நம் வயஸான குழந்தை!

பக்கத்தில் நின்று கொண்டிருந்த சிலர், வேதபுரியின் குட்டிக்கரணத்தை கண்டு சிரித்துவிட்டார்கள்!

அதற்குள் வேறு யாரோ, அன்று என்ன கரணம் என்பதை வாஸித்தார்கள். வெளியே வந்ததும், ஒரு பாரிஷதர் வேதபுரியிடம்,

"நீ….எதுக்குடா பெரியவா முன்னாடி குட்டிக்கரணம் போட்டே?…"

"பெரியவா ஸைகைல குட்டிக்கரணம் போடச் சொன்னா….. அதான் போட்டேன்!…"

"ஒன்ன…..கரணம் என்னன்னு படிக்கச் சொன்னாடா!….."

வேதபுரி, தன்னைத்தானே மக்கு, பித்துக்குளி என்று சொல்லிக் கொண்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்றான். மறுநாள் காலை பெரியவா, வேதபுரியைப் பார்த்ததும், பொங்கிடும் சிரிப்பை அடக்கிக் கொண்டு,

"நேத்திக்கி ஒன்ன கரணம் படி-ன்னு சொன்னேன்…..நீ எதுக்கு குட்டிக்கரணம் போட்டே?…"

வெள்ளையான மனஸுடன் "உம்மாச்சி…. கையால குட்டிக்கரணம் போட்டேள்! அதான் நானும் போட்டேன்!…"

பெரியவா முந்தின நாளிலிருந்து அடக்கி வைத்திருந்த சிரிப்பை இப்போது அம்ருதவாஹினியாக ஓடவிட்டார்!

"உம்மாச்சி! நீங்க ஏன் இப்டி மௌனமா இருக்கேள்?…."

"நா….அம்பாள நெனச்சிண்டு இருக்கேண்டா…."

வெள்ளையான பால் போன்ற பதில் வந்தது……. தன் மைந்தனின் கேள்விக்கு பதிலாக!

ஒருநாள் பெரியவாளை தர்ஶனம் செய்ய, "ஶிரோமணி" பட்டம் பெற்ற பண்டிதர்கள், நாலைந்து வித்வான்கள் ஆகியோர் வந்தார்கள்.

பெரியவா ஶாஸ்த்ர விஷயங்களை அவர்களுடன் ஸம்பாஷித்துக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில்…

" இங்க வரவால்லாம் நமஸ்காரம் பண்ணினா, நா…திருப்பி "நாராயண, நாராயண" ன்னு சொல்லி ஆஸிர்வாதம் பண்றேன். நா….ஸன்யாஸி! ஆனா, ஸம்ஸாரிகள்… நீங்கள்ளாம் என்ன சொல்லி ஆஸிர்வாதம் பண்ணுவேள்?"

"தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய!" ன்னு சொல்லுவோம்….. பெரியவா"

"ஸெரி. அதுக்கு என்ன அர்த்தம்?"

"ரொம்ப நாள், தீர்க்கமான ஆயுஸ்ஸோட, ஸௌக்யமா இரு" ன்னு அர்த்தம்"

அங்கிருந்த எல்லா வித்வான்களிடமும் வரிஸையாக கேட்டார்.

"அதே அர்த்தந்தான்…" என்று ஆமோதித்தனர்.

பெரியவா கொஞ்ச நேரம் மௌனமா இருந்துவிட்டு, ஒரு அழகான புன்னகையோடு,

" நீங்க அத்தன பேரும் சொன்ன அர்த்தம் தப்பு !"

பண்டிதர்களுக்கு தூக்கி வாரி போட்டது!

அது எப்படி? கொஞ்சமாக ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் கூட இதற்கு அர்த்தம் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஸுலபமான சொல்! அது எப்படி தப்பாகும்! ஒன்றும் புரியவில்லை.

"நானே சொல்லட்டா?"

"பெரியவாதான் எங்களுக்கும் சொல்லணும்…"

எல்லோரும் காதை தீட்டிக் கொண்டார்கள்.

"இருபத்தேழு யோகங்கள்ள.. ஒரு யோகத்தோட பேர் "ஆயுஷ்மான்" ! பதினோரு கரணங்கள்ள ஒரு கரணம் "பவ"ங்கறது! வார நாட்கள்ள "ஸௌம்யவாஸரம்" ன்னு புதன் கிழமை ! …..

……..இந்த மூணும், அதாவுது, ‘புதன்’ கெழமைல ‘ஆயுஷ்மான்’ யோகமும், ‘பவ’ கரணமும் சேந்து வந்தாக்க… அந்த நாள், ரொம்ப ஸ்லாக்யமா சொல்லபட்டிருக்கு. அதுனால, "ஆயுஷ்மான் பவ, ஸௌம்ய"..ன்னு இந்த மூணும் கூடி வந்தால், என்னென்ன நல்ல பலன்கள் கெடைக்குமோ, அதெல்லாம் ஒனக்கு கெடைக்கட்டும்னு ஆஸிர்வாதம் பண்றேன்!…னு அர்த்தம்"

அத்தனை வித்வான்களும் ஒரே நேரத்தில், தண்டம்போல் பெரியவா ஶரணத்தில் விழுந்தனர். நாலைந்து ஶிரோன்மணிகள், அஞ்சாறு வித்யா வாசஸ்பதிகள் இருந்தும், கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருந்த இத்தனை எளிய வாழ்த்துக்கு, இவ்வளவு ஆழ்ந்த அர்த்தத்தை காட்டிக்கொடுத்த அந்த "ஞான மேரு"வின் முன் ஆத்மஸமர்ப்பணம் பண்ணுவதை விட வேறென்ன செய்யமுடியும்?

இதைத்தான் தமிழில் "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று சொல்லுவார்களோ! புதன் கிழமையோடு இந்த யோகமும், கரணமும் சேர்ந்து அமையும் நல்ல நாள் அரிது என்பதாலோ!

ஶிரோன்மணிகளுக்கென ஒரு வகை பாடம்; செல்லப் பிள்ளைக்கு வேறு மாதிரியான பாடம் [truncated by WhatsApp]

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s