Meaning of vivaha mantras

Courtesy: http://dondu.blogspot.in/2010/10/blog-post_26.html

ராஜன் திருமணம் பற்றிய விவாதம்

நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். முதலில் பதிவு எதுவும் போடுவதாகவே இல்லை, ஏனெனில் ரொம்ப நேரத்துக்கு நான் மட்டும்தான் யாருமில்லாத கடையில் டீ ஆற்றும் மனநிலையில் இருந்தேன். லக்கிலுக் மற்றும் அதிஷா சிறிது நேரம் கழித்து வந்தனர், அதில் அதிஷா உடனேயே சென்று விட்டார்.

பலரும் கேட்டனர், பதிவு எப்போது வரும் என. அவர்களிடமும் நான் பிடி கொடுத்து எதுவும் கூறவில்லை. ஏனெனில் நான் சொன்னது போல பதிவர் சந்திப்பு என்ற ஒரு விஷயம் சீரியசாக நடக்கவே இல்லை. இருப்பினும் வீட்டுக்கு வந்து ரிகார்டுக்காக ஒரு பதிவு போட்டு அதற்குள் கும்மி எனக்கு அனுப்பியிருந்த படங்களையும் போட்டேன். அது ராஜன் அவர்களது பகுத்தறிவு எண்ணங்கள் சம்பந்தமாக பல பின்னூட்டங்களுக்கு இடம் கொடுக்கவே எனது தன்னிலை விளக்கத்தையும் பின்வருமாறு தந்தேன்.

ராஜன் சம்பந்தமான பகுத்தறிவு கேள்விகளை கமெண்ட் ஏதும் இல்லாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஏனெனில் நான் மண்டபத்திற்கு சென்றதுமே சம்பிரதாயத் திருமணம்தான் அது என்பதை உணர்ந்து கொண்டேன். வால்பையன் மற்றும் ராஜன் எனக்கு நண்பர்கள், ஆகவே நான் அவர்களை இது சம்பந்தமாக தோண்டித் துருவி கேள்விகள் எல்லாம் கேட்கவில்லை.

வால்பையனுக்கு ஃபோன் போட்டு கேட்டதற்கு அவர் அடுத்த நாள் திருமண முகூர்த்தம் சமயத்தில் ஐயரால், ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திர உச்சாடனங்களுடன், எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்ததை உறுதி செய்தார்.

ராஜனின் தாய் தந்தை இப்போது உயிருடன் இல்லை. மணமகள் அவரது பெற்றோருக்கு ஒரே பெண். இது காதல் திருமணம். பெண்ணின் தந்தையின் விருப்பத்துக்கு ராஜன் மதிப்பளித்தார் என்பதுதான் நிஜம்.

ராஜன் பெரியவர்களது விருப்பத்துக்கு பணிந்து போனது எனக்கு பிடித்தது. அவ்வளவே. அவர் வயதில் மிகவும் சிறியவர். மெதுவாக யதார்த்தங்களை புரிந்து கொள்வார். அவருக்கும் அவர் மனைவிக்கும் என் ஆசிகள்.

பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நான் அந்த கமெண்டுகளை மாடரேட் செய்து தடுத்திருக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார். அதை நான் ஏற்பதற்கில்லை. தனது நம்பிக்கைகளை, நாத்திகக் கொள்கைகளை இவ்வளவு வெளிப்படையாக, முக தாட்சண்யம் பார்க்காமல் பல தளங்களில் பேசி வருபவர், தானும் சமயம் வந்தால் அம்மாதிரி சங்கடமான கேள்விகளை எதிர்க்கொள்ள வேண்டும்தானே. அவர்கள் என்ன சிறு குழந்தைகளா? அதை அவரோ வால்பையனோ என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம்.

ராஜன் திருமணம் நடந்த மண்டபம் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ளது. நகரின் எல்லா பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களும் அருகில் உள்ள அண்ணாசாலையிலிருந்தே கிடைக்கும். அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு என அவரிடம் கேட்டதற்கு அவர் அதெல்லாம் பெண் வீட்டார் ஏற்பாடு, தனக்குத் தெரியாது எனக்கூறிவிட்டார். சற்றே அதிர்ந்து போனேன். காதல் திருமணம் புரிபவர் திருமணச்செலவில் பாதியை ஏற்பதுதானே சரியாக இருக்கும்?

அடுத்த நாள் வால்பையனிடம் இது பற்றி போனில் கேட்டபோது, அவர் திருமணச்செலவை இரு தரப்பினரும் சரி பாதியாக பங்கேற்பதையும் உறுதி செய்தார். நான் கேட்ட நேரத்தில் ராஜனுக்கு அந்த வாடகை எவ்வளவு எனத் தெரிந்திருக்காது இருந்திருக்கலாம். இன்னேரத்துக்கு அதை அறிந்து, அச்செலவையும், மற்றச் செலவுகளையும் இரு தரப்பினரும் சரிசமமாகவே பங்கேற்றிருப்பார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

ஆனால் எல்லோருமே ராஜன் மாதிரி இருப்பதில்லையே. காதல் என்றெல்லாம் அமர்க்களப்படும். கிட்டிமுட்டி திருமணப் பேச்சு என்று வந்ததும் மாப்பிள்ளைப் பையன் சமர்த்தாக தன் பெற்றோருக்கு அப்போது மட்டும் அடங்கிய பிள்ளையாகப் போய் விடுவான். பிள்ளைவீட்டார் விடாது பட்டியல் போடுவார்கள். அது இங்கு நடக்கவில்லை என நம்புகிறேன்.

பை தி வே, சம்பிரதாய திருமணத்தில் தாலி கட்டினால் மட்டும் போதாது, சப்தபதி சடங்கும் நடந்திருக்க வேண்டும். அந்த மந்திரங்களை அவதானித்தால் பலர் ஆச்சரியப்படுவது திண்ணம்.
அதை இங்கே தருகிறேன்.

மணமகன் மணமகளிடம் சொல்வது:
ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்

ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s