Rishi & rabbit

**சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌤 முயலாக மாறிய முனிவர். 🌤
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிவபெருமான் மீது அளவில்லா பக்தி செலுத்தி வருபவர் மங்கண முனிவர்.

அன்றைய தினமும் மலர்களைப் பறிப்பதற்காகக் காட்டிற்குச் சென்றார்.

அப்போது ஒரு இடத்தில் இனிமையான நறுமணம் வந்தது. நறுமணம் வந்த திசையை நோக்கிச் சென்றவர், ஒரு முள்செடிப் புதருக்குள் பூத்திருந்த மலர்களில் இருந்து அந்த நறுமணம் வந்ததை பார்த்து விட்டார்.

நறுமணம் பரப்பிய அம்மலர்களைப் பறித்துக் கொண்டு, இம்மலர்களால் சிவலிங்கத்தை அபிஷேகிக்கலாமென்று நினைத்தார்.

அம்மலர்களை பறித்த போது, அவரது கை, கால் மற்றும் உடலின் சில பகுதிகளில் முள்செடியின் முட்கள் குத்திக் காயமுண்டாக்கின. அக்காயங்களைப் பொருப்படுத்தாத மங்கண முனிவர், இறைவழிபாடு செய்யப் போகுமென்றென்னத்தோடவே மலர்களை பறிப்பதிலேயேயிருந்தார்.

அப்போது அவர் ஒரு ஆச்சரியத்தை உணரப் பெற்றார். முட்கள் மேனியில் குத்திய இடங்களிலிருந்து குருதி வரவில்லை. மாறாக நறுமணங் கொண்ட வெதுவெதுப்பான நீர் கசிந்தது.

முட்கள் குத்திய இடங்களிலிருந்தும் வலியும் உண்டாகாதிருந்தது. இவையாவும் ஈசனின் செயலே என்றென்னிய மங்கண முனிவர், மகிழ்ச்சியாகி ஆடவும் பாடவும் செய்தார். துள்ளியோடி களிப்புற்று இருப்பிடமோடிப போனார்.

பரவசமாகயிருந்த அவருக்கு எதிரேயிருப்பவை எதுவும் அவர் கண்களுக்குப் புலப்படவில்லை.

இப்படியே வந்தவருக்கு, வழியில் ஒரு மரத்தடியில் தூமாப்பர் என்றொரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கவணிக்காத மங்கண முனிவர், அவரை மிதித்தும் அதனை கவனிக்காதும் சென்றார்.

தவத்திலிருந்த தூமாப்பருக்கோ கோபம் உண்டானது. தன்னை மிதித்தும், அதற்கு வருத்தம் தெரிவிக்காமலும், மேலும் அவன் ஆடிப் பாடிச் செல்லும் மங்கண முனிவனைக் கண்டு பெருங்கோபம் உண்டானது.

என்னை மிதித்தும், என் தவத்தைக் கலைத்தும் செல்லும் மங்கண முனிவனே! நீ செய்யும் தவறு உனக்குத் தெரியவில்லையா? என்று சப்தம் போட்டார்.

இறைவனுக்குக் கிடைத்த நறுமண மலரைப் பெற்ற சந்தோஷத்தில் தூமாப்பரின் சத்தமெதுவும் மங்கண முனிவரின் செவிக்கு கேட்கவில்லை.

இதனால் தூமாப்பருக்குக் கோபம் கூடியது. தவறு செய்தது தெரியாமல், அந்தத் தவறை சுட்டிக் காட்டி எச்சரித்த போதும் அதையும் கண்டு கொள்ளாமல் போகும் மங்கண முனிவனே, எனைமிதித்த உன் இரண்டு கால்களும் முடமாகிப் போகட்டும். என் தவத்தைக் கலைத்த உன்னுடைய உருவம் முயலாக மாறி துன்பம் அடையட்டுமென என்று சாபமிட்டார்.

அவர் கொடுத்த சாபத்தால் மங்கண முனிவரின் கால்கள் முடமாகிப் போனது. அதன்பின்பு தான், அவருக்குத் தான் செய்த தவறும், அதற்கு தூமாப்ப முனிவர் கொடுத்த சாபமும் தெரிய வந்தது. தன்னுடைய தவறுக்கு முனிவரிடம் வருத்தம் தெரிவிப்பதற்காக அவர் நொண்டியபடியே திரும்பி வந்தார்.

‘சுவாமி! இன்று எனது இறை வழிபாட்டுக்காக மலர் பறிக்கச் சென்ற போது, அங்கிருந்த முட்செடியின் முட்கள் என் உடலின் பல இடங்களில் குத்தியது.

ஆனால் அந்த இடங்களில் குருதி வராமல் நறுமணமான வாசனைத் திரவியமே வந்தது. மேலும் முட்கள் குத்திய இடங்களில் எந்த வலியும் இல்லை.

இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் செல்லும் போதுதான், என்னையுமறியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டது. என்னை மன்னித்து, எனக்குத் தகுந்த சாப விமோசனம் தந்தருள வேண்டும்" என்றார்.

அவருடைய பணிவான வேண்டுதலுக்கு மனமிரங்கிய தூமாப்ப முனிவர், மங்கண முனிவரே! இறை வழிபாட்டிற்கு மலர் பறிக்கச் செல்லும் போது அங்கிருக்கும் முட்செடிகள் எதுவும் குத்தி துன்பம் தராமலிருக்க, தனது கையும், கால்களும் புலிக்கால் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிப் பெற்றார் வியாக்ரபாத முனிவர். அவ்வாறு அவர் வேண்டி வழிபட்ட சிவாலயத்திற்குச் சென்று வழிபடும் போது உம்முடைய இந்த சாபம் தீரும்" என்று விமோசனத்திற்கான வழியைக் கூறினார்.

அதைக் கேட்ட மங்கண முனிவர் மகிழ்ச்சியடைந்தூ, தூமாப்ப முனிவரை வணங்கினார். சிறிது நேரத்தில் மங்கண முனிவர் முயலாக உருமாறிப் போனார்.

முன்னங்கால்கள் இரண்டும் முடமாகி இருந்ததால், அந்த முயலால் தாவிக்குதித்தோட முடியவில்லை.

தன்னுடைய இயலாமையை நினைத்து முயல் வருத்தம் கொண்டது.காட்டுநாய் போன்ற விலங்குகளால் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்துப் பயந்த முயல், மெதுவாகப் பதுங்கிப் பதுங்கிச் செடி கொடிகளின் மறைவிலேயேச் சென்று கொண்டிருந்தது.

அதனால் முயலின் உடல் முழுவதும் முட் செடிகளிலிருந்த முட்கள் குத்தி காயங்கள் ஏற்பட்டன. தன்னுடைய உடலில் ஏற்பட்ட காயத்தின் வலியால் முயல் பெரும் துன்பமடைந்தது.

இப்படியே மிகுந்த துன்பத்துன் சென்று கொடண்டிருந்த முயல், ஒரு ஆண்டுக்குப் பிறகு, கன்னிமாவனம் எனும் காட்டிற்குள் நுழைந்தது.

அந்த காட்டிற்குள் இருந்த சிவாலயத்தைக் கண்டதும், தான் மங்கண முனிவர் என்பதும், தூமாப்ப முனிவர் கொடுத்த சாபத்தால் முயல் உருவத்திற்கு மாறியிருப்பதும், அதன் நினைவுக்கு வந்தது.

உடனே அந்த முயல் சிவாலயத்திற்குச் சென்று, அங்கிருந்த சிவலிங்கத்தின் முன்பாக நின்று, தனக்குச் சாப விமோசனம் அளிக்க வேண்டி வழிபட்டது.

பின்னர் சில முறை சிவலிங்கத்தைச் சுற்றி வந்து, இறைவனை வேண்டியபடியே சிவலிங்கம் முன்பாக களைப்பில் படுத்து விட்டது.

முயலின் நிலை கண்டு இரங்கிய ஈசன், ‘தூமாப்பர் முனிவரால் சாபம் பெற்ற நீ, முயல் உருவிலிருந்து சுயவுருவம் பெற்றெழுக!என்றார்.

அந்தக் குரல் முயலின் காதுகளிலும் ஒலித்து. உடனடியாக முயல் உருவிலிருந்த மங்கண முனிவர் விமோசனம் பெற்றெழுந்தார்.

இறைவனைத் தேடினார். இறைவனின் உருவம் அவரது கண்களுக்குத் தெரியவில்லை. எனவே தன் எதிரில் இருந்த சிவலிங்கத்தை வணங்கினார்.

பின்னர், "இறைவா! எனக்குத் தாங்கள் நேரடியாக காட்சியளிக்காவிட்டாலும், எனக்குச் சாப விமோசனம் கிடைக்கத் துணை நின்றதில் மகிழ்ச்சி.

தாங்கள் இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும், அவர்களின் துன்பங்களை நீக்கியருள வேண்டும்’ என்று வேண்டினார்.

இறைவனும், ‘முனிவரே! நீ வேண்டியபடி நான் இந்த தலத்தில் ‘தோன்றாத் துணைநாதர் எனும் பெயரில் வீற்றிருக்கிறார். இங்கு வரும் அன்பர்களின் துன்பங்களை நீக்கி, வாழ்வில் வளம் பெருகச் செய்வேன்’என்று அருளினார்.

வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சிறிய மகிழ்ச்சியில், பலரும் தங்களை மறந்து போய் விடுகின்றனர். இந்த நிலையில், தங்களை அறியாமல் அவர்கள் செய்யும் தவறுக்கும்,தகுந்த தண்டனை உண்டு என்பதையே மங்கண முனிவர் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.

●●●●●●●●●
வியாக்ரபாத முனிவர் தனக்கு மலர் பறிக்க புலிக்கால் வேண்டி பெற்றதும், மங்கண முனிவர் சாப விமோசனம் நீங்கப் பெற்றதுமான கோவில் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலமாகும்.

மங்கண முனிவருக்கு இறைவன் நேரடியாக காட்சி தராது அவருக்கு
சாப விமோசனம் அளித்த இறைவனார் பெயர் தோன்றாத்துணை நாதர்.
இறைவி பெயர் பெரியநாயகி
பாதிரி மரத்தைதலமாக கொண்ட தலம்.
பாதிரிமரத்தை தலமாகப் பெற்றும், புலிக்கால் முனிவர்(வியாக்ரபாத முனிவர்) வழிபாடு செய்த இந்த இடமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும்.

இறைவன் மீது பக்தியில் திளைத்திருந்த திருநாவுக்கரசரை, எதிரானவர்கள் கல்லில் கட்டி கடலில் தள்ளினர். அப்போது சொற்றுணை வேதியன் எனத் தொடங்கும் நமசிவாயப் பதிகத்தைப் பாடினார்.

இதனால் கல் கடலுக்குள் மூழ்காமல் மிதந்தபடியே கரையேறியது.

அவர் கரையேறிய இடம். தற்போதான கரையேறவிட்ட குப்பம். ஆகும்.

திருநாவுக்கரசர் கரையேறியதும் வழிபட்ட முதல் சிவாலயம் திருப்பாதிரிபுலியூராகும்.

இந்த ஆலயத்தில் திருநாவுக்கரசர், ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.

இக்கோவிலில் திருநாவுக்கரசர் கரையேறிய திருநாள் என்று திருவிழா அதிவிமரிசையாக நடக்கும்.

திருச்சிற்றம்பலம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s