shiva kataksham story of Mahananda

சிவகிருபாகடாக்ஷம்

நாம் இவ்விலகில் மானிடனாகப் பிறக்கப் பெரும் புண்ணியம்செய்திருக்கிறோம். “என்ன புண்ணியம் செய்தனை” என்பது அடியார்களின்அமுதமொழி. எனவே புண்ணிய பூமியில் பிறந்த நாம் பெறவேண்டியது“சிவாமிருத கிருபா கடாக்ஷம்” தான். இதனைப் பெற்றால் தான் எடுத்தபிறவி புண்ணியப் பிறவியாகும். எங்கு பிறந்தாலும், எந்த நிலையில்இருந்தாலும், எத்தொக்ஷிலைச் செய்தாலும் பெறவேண்டியது சிவகிருபாகடாக்ஷம் ஆகும். அதற்கு உபாயன் சிவபக்தி ஒன்றேதான் உள்ளது. இதைப்புரிந்துக் கொள்ள மஹா ஸ்காந்தத்தில் உள்ளது ஒரு இதிஹாஸம்.
காச்மீரதேசத்தை ஆண்டு வந்த பத்ரஸேனன் என்ற மன்னனுக்குதர்மசேனன் என்ற ஒரு புத்திரன் பிறந்தான். அந்த மன்னனுக்குப் பக்தனானஒரு மந்திரி இருந்தான். அவனுக்கும் ஒரு மகன் பிறந்தான். இருகுழந்தைகளும் சிறு குழந்தைப் பருவம் முதல் விபூதியை உடல் பூராவும்பூசியும் ருத்ராக்ஷத்தை தலையிலிருந்து உடல் பூராவும் ஆபரணமாகப்பூச்சியும் வாக்கில் சிவநாமம் பேசியும் வந்தார்கள். “தெளததா ஸர்வகாத்ரேஷு ருத்ராக்ஷ க்ருத பூஷணெள”. இப்படி அரசன், மந்திரிஇவர்களுடைய இரு புத்திரர்களும் சிவபக்தியில் நிலைத்து அதனாலேயேவளர்ந்து அழகும் தேஜஸ் என்ற ஒளியும் வீசும்படிப் பிரகாசித்தார்கள்.மன்னனுக்கு இது ஒரு மர்மமாகவே இருந்தது குழந்தைகள் பிறந்து அறிவுஏற்படும் முன்னரே விபூதி ருத்ராக்ஷதாரணமும் சிவநாமோச் சாரணமும்எப்படி வந்தது என்பது கேள்விக் குறியாகவே இருந்தது.
ஒரு நாள் அத்ரி என்ற முனிவர் அரசனைக் காண வந்தார். அரசனும்மஹரிஷியை முறைப்படி பூசித்து இந்தக் குழந்தைகளுக்கு சிவபக்திபண்ணுவது எப்படி இந்த அதிபால்யத்திலேயே வந்து என்று அதன்காரணத்தை வினவினான். முனிவர் பெருமானும் இதைச் சொல்லவே வந்தார்அல்லவா? எனவே ஆனந்த நிலையிலிருந்து அரசனுக்கு அருள் பாலித்துபூர்வஜன்ம விருத்தாந்தத்தைக் கூறியருளினார்.
நந்தி கிராமம் என்ற ஊரில் மஹாநந்தா என்று ஒரு பெண் நாட்டியம்பயின்று அதனால் சிவபெருமானை ஸந்தோஷப்படுத்தவேணும் என்றும்சிவபூஜையில் பேரன்பும், சிவநாமத்திலும் சிவகதையிலும் மிகவும் ஆசையும்வைத்து சிவஸ்ந்நிதியில் சிவதாண்டவத்தைப் போலவே அற்புத நாட்டியம்ஆடி வந்தாள். அவளுக்கு ஒரு சிறு ஸந்தேஹம் வந்தது. நம் நாட்டியத்தில்பரமேச்வரன் ஸந்தோஷப்படுவாரா என்று தோன்றியது. அதற்குப்பரிஹாரமாக ஆலோசித்து ஒரு கோழி ஒரு குரங்கு இரண்டையும் அன்புடன்வளர்த்து அதற்கு நாட்டியம் பழக்கி வைத்தான். அவை இரண்டும் நன்றாகவேநாட்டியம் பழகி ஆடத் தொடங்கின, அவைகளுக்கு விபூதியைப் பூசிருத்ராக்ஷத்தை அணிவித்து நடனம் செய்ய விடுத்தான். அது அவளுக்கேபரமானந்தமாக இருந்தது. சிவபெருமான் நிச்சயம் ஸந்தோஷப்படுவார் என்றுஎண்ணினாள். குரங்கும் கைகளால் தாளம் போட்டுக் கோழியுடன் நடனம்ஆடும். மஹநந்தா பாடிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் சிவாலயத்தில் கோழிகுரங்கு இரண்டும் ஆடப் பரவசமாக மஹாநந்தா பாடிக் கொண்டிருக்கும்போது கோவில் உள்ளிருந்து ஒரு பெரியவர் கையில் கரபூஷணமாக ஒருவளையல் போல மாணிக்கக்கற்களால் செய்த சிவலிங்கம் பதிக்கப்பட்டுகையில் அழகாகத் தரித்திருந்தார். மஹாநந்தா அவரைப் பார்த்ததும் அவரிடம்ஒரு பற்று ஏற்பட்டது. அவரிடம் சென்று “ஸ்வாமி! உங்கள் கையைஅலங்கரிக்கும் ரத்னலிங்கத்தை எனக்கு அளிக்க வேண்டும்” என்றுவேண்டினாள். அந்தப் பெரியவரோ “நீ எனக்கு மனைவியானால் கொடுக்கமுடியும்” என்றார். இந்தப் பெண்ணுக்கு அது இஷ்டம் இல்லையென்றாலும்அந்த ரத்ன லிங்கத்டை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றஆசையினால் அந்த சிவபக்தியின் முதிர்ந்த நிலையில் அவரிடம், “பெரியவரே! இந்த ரத்ன கசிதமான கரபூஷண வடிவ சிவலிங்கத்தைத்தருவதானால் நான் உங்களுக்கு மூன்று நாட்கள் மனைவியாக் இருப்பேன்.மூன்று நாட்களும் உத்தம பத்னிக்குள்ள ஸகல தர்மத்தையும்அனுஷ்டிப்பேன்” என்று அவருடைய ஹிருதயத்தைத் தொட்டுச் சொன்னாள்.அந்தப் பெரியவரும் ஒப்புக்கொண்டு அந்த ரத்னலிங்கத்தைக் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்து முறையாகக் கணவன் மனைவியானார்கள். இரண்டு நாட்கள் ஆனதும்மூன்றாவது நாள் அந்த ரத்னலிங்கத்தை நாட்டிய சாலையில் வைத்துக்கொண்டு கோழிக்கும் குரங்குக்கும் நாட்டியம் கற்பிக்கும் போது திடீரென்றுநாட்டிய சாலை நெருப்புப்பற்றிக் கொண்டு எரிந்தது. கோழியும் குரங்குமும்எங்கோ ஓடிவிட்டன. இவளும் நெருப்பைப் கண்டு பயந்து ஓடினாள்.நாட்டியசாலை எரியும் போது அந்தப் பெண்ணுக்கு இரண்டு நாட்களாகக்கணவராக இருந்த பெரியவர் “பெண்ணே! லிங்கம் எங்கே?” என்று கேட்டார்.நாட்டிய சாலையின் தூண்களுடன் அந்த லிங்கமும் எரிகிறது என்று அந்தப்பெண் பதில் கூறினாள். அதைக்கேட்ட பெரியவர் ஓ வென்று அலறி இனிநான் உயிருடன் இருக்க மாட்டேன். லிங்கத்தை அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டேனே என்று கதறிக் கொண்டே அந்த நெருப்பில் விழுந்து தன் உயிரைப்போக்கிக் கொண்டார். இதைப் பார்த்த மஹாநந்தா “நான் அவர் மனைவியாகிஇன்று மூன்றாவது நாள், ஆதலால் நானும் அவருடன் போக வேண்டும்”எனறு கூறி, அவர் விழுந்த நெருப்பிலேயே தானும் விழுந்தாள்.
முன் விழுந்த பெரியவர் எரிந்தது போல் காணப்பட்டவர்நெருப்பிலிருந்து எழுந்து கங்கை, ஜடை, நெற்றிக்கண், மான், மழு, சூலம்,ஏந்தி விபூதி ருத்ராக்ஷத்துடன் பரமேச்வரனாகக் காக்ஷியளித்து அந்தமஹாநந்தா என்ற பெண்ணைத் தூக்கியெடுத்து பரமகருணையுடன் கிருபாகடாக்ஷத்துடன் கூறினார். “உனது ஸத்யம், தைரியம், தர்மம், பக்திஎன்னிடத்தில் அசைக்க முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கவே உனதுஸமீபம் இருக்கவேண்டுமென்று எண்ணங் கொண்டு மனித உருவில் வந்தேன்.பெண்ணே! உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக” என்றார்.பிரத்யக்ஷமாகப் பரமேச்வரனைத் தரிசித்த ஆனந்த பரவசநிலையில் “சம்போ”என்று கதறி உங்களது கிருபா கடாக்ஷம் வேண்டும் என்று அருமையானஸ்தோத்ரம் செய்தாள்.

அந்த ஸ்தோத்திரம் அடுத்த பதிவில்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s