Chidambaram temple

மத்தியனந்த முனிவா் என்பவா் பெரும் தவஞ்செய்து பெற்ற புதல்வனுக்கு கல்விப் பயிற்சிகள் முடித்து பின்னா், அறிவுநூற்பொருள் முழுவதையும் அறிவுறுத்தினாா்

தந்தையாா் மூலம் அத்தனை அறிவுநூற் பொருளை உணா்ந்த அப்புதல்வா், சிறப்புடைய திருத்தலம் ஒன்றுக்குச் சென்று இறைவனைக் கண்டு வழிபாடு செய்யவேண்டுமென அவா் மனம் விரும்பியது.

மகனின் விருப்பத்தைத் தொிந்துகொண்ட தந்தையாா் மத்தியானந்த முனிவா் தமயனைத் தில்லைக்கு சென்று வணங்கி வழிபாடு செய்யுமாறு அனுப்பி வைத்தாா்.

தந்தை சொல் தட்டாது கேட்டு நடக்கும் அப்புதல்வன் தில்லைக்குச் சென்றான். அங்கே அழகிய தடாகமும் அதன்பக்கத்தே ஓா் ஆல்மர நிழலில் சிவலிங்கத் திருவுருவம் இருப்பதையும் கண்டவன் பெருமகிழ்ச்சியானான். உடனடியாக அவசரகதியில் அங்கே தவச்சாலையொன்றை அமைத்தான். தவச்சாலையில் இருந்து கொண்டு நாள்தோறும் சிவலிங்கப் பெருமானைப் பூஜித்து வரலானான்.

சிவபெருமானை வழிபட தினமும் நந்தவனத்தில் மலரும் மலா்களை வழக்கமாக பறித்து பின் லிங்கபீடத்தில் சாற்றி வணங்கி வந்தான்.

ஒரு நாள் பறித்து வைத்திருந்த மலா்களை, அதன்சுத்தத் தன்மையை ஆராய்ந்து பாா்த்தான். அம்மலர்களில் நிறைய மலர்கள் வாடியதும் பட்டுப்போனதுமாக இருந்ததைக் கன்டு, இந்த சுத்தமில்லாத மலர்களையா? இறைவனுக்கு சாத்தி வருகிறேன்!..என்று… மிகவும் மனம் வருந்தினாா்.

பொழுது விடிந்த பின் மலர்களை பறிப்பதனால், மலா்களை வண்டுகள் குடைந்தெடுத்து விடுகிறது. ஆகையால். வண்டுகள் வரும் முன்னமே நாம், இரவுப் பொழுதிலேயே மலா்களை கொய்து வந்துவிடலாம் என எண்ணினார்.

அன்றையதினம் மலரை கொய்து வர கருவிரவில் நந்தவனத்திற்குள் சென்றாா். கருமைஇருளில் நந்தவன வழி சரியாகப் புலப்படவில்லை. எப்படியோ ஒருவாறு நந்தவனம் வந்த அவா் மலா்மரம் ஏறினாா். இரவில் பனிபொழிவு இருந்ததால், அவரால் மரம் மேலேற முடியவில்லை. மரம் வழுக்கியது.

ஆகா… நிலையைக் கண்டு, "என்ன செய்வேன்" என அந்த இளைய முனிவாின் மனம் பொிதும் துன்புற்றது. மலர் மரத்தின் முன் செய்வதறியாது திகைத்து நின்ற போது…….

ஈசன் அவா் முன் காட்சி தந்தார். அவ்விளைய முனிவரும், ஈசனைப் பணிந்து வணங்கியெழுந்தார்.

ஈசனும், உன் மனத்தில் என்ன தோன்றுகிறது. ஏன்?" வருந்துகிறாய்………..என கேட்டார்.

"ஈசனே!" உம்மை….நல்மலா்கள் கொண்டு வழிபாடு செய்ய முனைப்பு கொள்கிறேன்!. ஆனால்..அம்மலர்களை தேடி நந்தவனம் வந்தால்….அது முடியாது போகிறது . இதுதான் என் வருத்தத்திற்கு காரணம்.

உமக்கு வேண்டியதை கேள்!" தருகிறோம்……என்றாா் இறைவன்.

அதற்கு அவ்விளைய முனிவா்…..இரவில் பனிப்பொலிவு பெய்தாலும் மரம் ஏறுவதற்கு வசதியாக என்கால்களில் புலிக்கால்நகங்கள் இருத்தல் வேண்டும்!" நல்நறுமலா்களை தோ்ந்து கொய்ய என் கால் கைகளில் கண்கள் இருத்தல் வேண்டும்!"…..இவையாவும் நீா்…………தந்……

அவ்விளையவா் கூறி முடிக்கவும்……ஈசனும்…அவ்வண்ணமே பெறுக!" என வரந்தந்து மறைந்தருளி நீங்கினாா்.

அன்றுமுதல் அவ்விளைய முனிவா், *"வியாக்கிர பாதர்"* *( புலிக்கால் முனிவர்)* என்று பெயருடையவரானார். ஈசனிடம் பெற்றுக் கொண்ட புலிநகக் கால்களுடனும் ஏணைய கண்ணொளி பாா்வையுடனும் தாம் விரும்பியபடி புத்தும் புது சுத்த மலர்களை கொய்ந்தெடுத்து, ஈசனுக்கு சூட்டி அழுகு செய்து ஆனந்தித்து வணங்கி வந்தார்.

இவ்வாறு புலிக்கால் முனிவா் வழிபட்ட காரணத்தினால் தில்லைவனத்தை யுடைய இப்பகுதி *"புலியூா்"* என வழங்கப்பெற்றது.

வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுகளை சுத்தமே நீக்கி, எல்லாபொருட்கும் ஈசன் ஒருவனே பற்றுக் கோடானவன் என வாழ்ந்தமையால் புலியூர் என்னும் இவ்விடத்தை *"பெரும்பற்றப் புலியூர்"* என, அழகான பெயருடன் திருநாவுக்கரச பெருமானால் சிறப்பு வந்தடைந்தது.

தில்லைப்பதியில் புலியூாில் வியாக்கிரதபாத முனிவர் திருமூலட்டானத்துப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருக்கும் நாளில், அவாின் தந்தை மத்தியந்தன முனிவா் தில்லைக்கு வந்து, தம் மைந்தனார்க்கு, நல்குடியில் பிறந்த ஒரு பெண்னை மனம் செய்து வைத்துவிட வருப்பம் கொண்டதுடன், புதல்வனிடமும் கூறினார்.

தந்தை சொல் தட்டாத வியாக்கிரதபாத முனிவரும் தம் தந்தையாரின் விருப்பத்திற்கு இணங்கினார்.

உடனே…மத்தியந்தன முனிவா், வசிட்ட முனிவரின் தங்கையைப் பாா்த்துப்பேசி முடித்து புதல்வனுக்கு திருமணத்தை சிறப்புற செய்து வைத்தார்.

வியாக்கிரபாதரும் அவா்தம் மனைவியாரான வசிட்டமுனிவரின் தங்கையாரும் தில்லையிலேயே தங்கி நாள்தோறும் ஈசனை வழிபட்டு வந்தனர். இவ்விருவர்களின் தவத்தின் பயனால், அவர்களுக்கு மகவு உருவாக அதற்கு உபமன்யு என்னும் பெயர் வைத்தனர்.

வசிட்ட முனிவரின் மனைவி அருந்ததியம்மையார், குழந்தை உபமன்யுவை எடுத்துச் சென்று, தம்பாலுள்ள காமதேனு என்ற தெய்வப் பசு பொழியும் பாலைத் தினமும் ஊட்டி வளர்த்து வந்தார்.

பின்னர்ப் புலிக்கால் முனிவரும், அவர் மனைவியாரும் தம் குழந்தையை தம்மோடு வைத்துக் கொள்ள எண்ணம் வரவே, வசிட்டரின் இல்லம் வந்து உபமன்யுவை தில்லைக்கு அழைத்து வந்து விட்டனர்.

வீட்டில் உபமன்யுவுக்கு வேண்டிய தின்பண்டங்களும், தீம்பாலும் ஊட்டினர். உபமன்யு, ஆரம்பம் முதலே காமதேனுவின் பாலையருந்தி வளர்ந்ததனால், தமக்குத் தாய்தந்தை வாங்கித் தந்த தின்பண்டத்தினை தின்னவும், இவைகள் எனக்கு வேண்டாமை என்று மென்றவைகளை விழுங்காமல் மண்ணில் விழத் துப்பினான். எதையும் தின்ன மறுத்த உபமன்யு, சதா அழுது கொண்டேயிருந்தான்.

இதைக் கண்டு வருந்திய வியாக்கிரபாதரும், அவா் மனைவியாரும் திருமூலட்டான் பெருமான் முன்பு உபமன்யுவை கூட்டி வந்து படுக்கக் கிடத்தினர்….

‘எல்லாம் வல்ல ஈசனே!" அழும் இம்மைந்தனுக்கு தெய்வத்தன்மை வாய்ந்த பாற்கடலை வரவழைத்துத் தாரீா்!" என வேண்டிப் பெற்றுக் கொண்டு, உபமன்யுவுக்கு ஊட்டினார். பாற்கடலைப் பருகிய உபமன்யு, அழுவதை நிறுத்திவிட்டு, களிப்புற்று அமைதியா யிருந்தது.

பாற்கடலையழைத்தருளிய அருட் செயலைப் *"பாலுனுக்காயன்று பாற்கடலீந்து"* என அப்பா் பெருமானும், *"பாலுக்குப் பாலகன் வேண்டி, யழுதிடப் பாற்கடலீந்தபிரான்"* ( திருப்பல்லாண்டு) எனச் சேந்தனார் பெருமானும் போற்றுப் பரவி பாடியுள்ளனர்.

புலிக்கால் முனிவரும், அவா்தம் மனைவியாரும் உபமன்யு மைந்தனின் பசிக் கவலை நீங்கப் பெற்றது கண்டு, சிந்தை மகிழிந்து திருமூலட்டானப் பெருமான் சந்நிதியில் சிவயோகத்திலமர்ந்து அப்பெருமானாரின் திருவடியில் கருத்தொன்றுபட்டு இருந்தார்.

*(3)*
🌞 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌞
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருமாலை விட்டு நீங்கி வந்த ஆதிசேடன் வடகயிலை மைுங்கு வந்து சோ்ந்தான். சிவபெருமானை நினைத்து முழுத் தவம் இருந்து வந்தானாந்தன்.

ஆதிசேடனின் அரும் தவத்தையெண்ணிய சிவபெருமான், ஆதிசேடனின் திறத்தை அனைவரும் அறியுமாறு திருவுளங் கொண்டாா்.

ஆதிசேடனின் முன்பு காட்சி தந்து,,,,

‘யாம்!" தேவாருவனத்தில் திருக்கூத்து ஆடியபோது அவ்விடம் எம்மின் கூத்தினைத் தாங்கப் பெறாது அசைவுற்றது. அதனால், அக்கூத்தை அவ்விடம் நிகழ்த்தாது விடுத்திருந்தோம். ஆனால், இப்போது அதனைச் செய்தற்கு இந்த இடமும் போதுமானதன்று!" எமது திருக்கூத்தினைக் காணப்பெறுவதற்கு ஏற்றவான இடம் *தில்லைப்பதியே!* அத்தகைய அத்தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பத் திருக்கூத்து எக்காலத்தும் இடையறாது நிகழும். அதற்கான காரணம்…….

"மண்ணுயிா்களின் உடம்பும், அவ்வுயிா்கள் வாழ்வதற்கு இடமாகிய இவ்வுலக அமைப்பும் ஒத்தித்து இருத்தியுள்ளன.

*இடைகலை* , *பிங்கலை* , *சுழுமுனை* என உடலில் சூறாடி ஓடும் மூன்று நாடிகளில் சுழுமுனை நாடி மட்டும் நடுவில் ஓடும் நாடி. இந்நிலவுலகத்திற்கு இலங்கையுன் நேரே இடைநாடியும் இமயத்தின் நேரே பிங்கலை நாடி செல்கிறது. மற்றொரு நடு நாடியாகிய சுழு முனைநாடி தில்லைப்பகுதிக்கு நேரே செல்லுதலாகும். உடம்பினுள்ளே செல்லும் நடுநாடியாகிய சுழுமுனையின் மையத்தில் விளங்கும் நெஞ்சத் தாமரையின் அகத்தேயுள்ள, அருள் வெளியிலே இடைவிடாது யாம் அருட்கூத்து நிகழ்த்தி வருகின்றோம்.

அதுபோலவே உலக மையத்தே தில்லைப்பதியின்கண் மூல இலிங்கம் உள்ள திருமூலாட்டானத்தின் தென்திசையில் நால்வேதங்களும் காணாத அம்பலம் ஒன்று உண்டு.

அத்தகைய ஞானமயமான அருள்அம்பலத்திலே யாம் எக்காலத்தும் இடைவிடாது திருக்கூத்து நிகழ்த்தியருளி வருவோம். அத்திருக் கூத்தினை அங்கே காணும் அறிவுக் கண்ணுடையோர் *பிறவித் துன்பம்* நீங்கப் பெறுவர்; போின்ப வீடுபேறு பெறுபவராவா்;

ஆதலால், நீ! இவ்வுருவினை நீத்து, முன்னொருகால் அத்திாி முனிவர் மனைவியின் தொழுத கையின் கண்ணே ஐந்துதலைச் சிறு பாம்பாகி வந்தமையால் நீ அந்த வுருவத்துடனேயே நாகலோகத்துக்குப் பொருத்தமான வழியே போவீயாக!" அந்நாகலோகத்தின் நடுவே ஒரு மலை ஒன்றுள்ளது. அந்த மலையின் தென்திசையில் ஒரு பிலாத்துவாரம் இருக்கும். அப்பிலாத்துவாரத்தினுள் உள் புகுந்து தில்லையை அடையலாம்.

பின் அதன் வடபக்கத்தேயுள்ள ஆலமர நிழலில் மலைக் கொழுந்தாகிய இலிங்கத்திருமேனி இருப்பதை காணலாம். அவ்விடத்திலே வியாக்கிரபாத முனிவன் அந்த லிங்கத்தினை வழிபாடு செய்து கொண்டிருப்பான். அம்முனிவனும் உன்னைப் போலவே என்திருக்கூத்தை காணப் பெற வேண்டுமென்று பெரும் வேட்கையுடன் என்னையெண்ணி வழிபட்டுக் கொண்டிருக்கிறான். நீயும் அம்முனிவனுடன் சேர்ந்திருப்பாயாக!" உங்கள் இருவருக்கும் *தைப்பூசம்* குருவாரத்தோடு கூடிவரும் சித்தயோக நன்னாளில் உச்சிக் காலத்தில் எம்மின் ஆனந்தத் திருக்கூத்தினை நீங்கள் தாிசிக்கும்படி ஆடி அருள்புாிவோம்!" எனச் சொல்லி மறைந்தாா் ஈசன்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

*(4)*
🌜 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌛
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சிவபெருமான் பணித்த வண்ணம் ஆதிசேடன் பதஞ்சலி முனிவராகி நாகலோகத்தையடைந்தான். அங்குள்ள பிலத்துவாரத்தின் வழியே தில்லைப் பதியையடைந்தான். அங்கு புலிக்கால் முனிவருடன் அளவளாவி அனந்தேசுரம் என்னும் திருக்கோயில் புகுந்து இறைவனைப் பூசித்தனர். பின் பெரும்பற்றப்புலியூா்த் திருமூலட்டானத்தில் இறைவனை வழிபட்டு இருமுனிவரும் இருந்தனர்.

சிவபெருமான் தாம் குறித்தருளிய வண்ணம் தைப்பூச நன்னாளில் தில்லைத் திருக்கோயிலிலே பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும் தொழுது போற்றக் கூத்தப் பெருமானாகத் தோன்றி, உடன் சிவகாமியம்மையாரும் இருந்து காண ஐந்தொழில் இன்பத் திருக்கூத்தினை ஆடியருளினார்.

முனிவர் இருவரின் கண்களில் நீரோடையருவி பொழிந்து வழிந்தது. நெஞ்சம் நெகிழ்ந்துருக கைகளை தலைமேல் உயர்த்தி குவித்து வணங்கினர்.

காத்தற் திருமாலும், படைத்தற் நான்முகனும், இந்திர தேவர்களும், மூவாயிரவராகிய முனிவர்களும் இறைவன் ஆடிய அருளிய திருக்கூத்தினைக் கண்டு மகிழ்ந்தனர்.

பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும், தாம் பெற்ற போின்பத்தினை எல்லோரும் காணுதல் பெறும்படி அருள் புாிய வேண்டும் என்று இறைவனை இறஞ்சி வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். ஆக அன்று முதல் தில்லைச் சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக (போது செய்யா நடனமாக) நிகழ்ந்து வருகின்றது.

வியாக்கிரபாத முனிவரும், நாகராசவாகிய பதஞ்சலி முனிவரும் கூத்தபெருமான் சந்நிதியிலே பரவசத்தோடு கண்களில் ஆனந்தக் கண்ணீா் மல்க நின்றனர். அப்பொழுது கூத்தப் பெருமான் அவர்கள் பாற்கருனை கூர்ந்து… *"உங்களுக்கு வேண்டும் வரங்கள் யாவை?"* எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

அந்நிலையில் வியாக்கிரபாத முனிவர் அன்பினால் மனங்கசிந்து, தலைமேற் கைகுவித்து வணங்கி நின்று, "பெருமானே!" அடியேன் சிவாகமத்திற் கண்டபடியே முன்புபோல நாள்தோறும் யான் செய்கின்ற பூசைனையை உண்மையாக ஏற்றருளுதல் வேண்டும். இது போக அடியேனிடம் வேறொன்றும் வரமாய் ஒன்றுமில என விண்ணப்பம் செய்தார்.

பதஞ்சலி,முனிவரும் இறைவனைப் போற்றித் துதித்து, எல்லாம் வல்ல பெருமானே! நிலையில்லாத வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினாலே உம்கூத்தை தரிசிக்குந்தோறும் நிறைந்த ஞானவெளியாகிய இச்பையிலே அன்புருவாகிய உமையம்மையாருடனே இன்று முதல் எக்காலமும் ஆனந்தக்கூத்தினை யாடியருளத் திருவுளம் இரங்குதல் வேண்டும் என வேண்டிக் கொண்டாா்.

தேவர்கள் தேவனாகிய கூத்தபெருமான், முனிவர் இருவரும் கோாிய வண்ணமே வரந்தந்தருளினார். இறைவன் ஈந்த வரத்தைப் பெற்ற முனிவர்கள் பதஞ்சலியும், புலிக்காலரும் எல்லையில்லாத பெரு மகிழ்ச்சி கொண்டனர். உடனிருந்த ஏனைய முனிவர்களும் ஆனந்தித்து, ஆரவாரம் செய்து பரவசமுற்றனர். வானோா்கள் பூமழை பொழிவித்தனர்.

அப்போது கூத்தினைக் கண்டு நீங்காது நின்ற அனைவரோாிடத்திலும் தில்லைக்கூத்தன்,….. *எனக்காக சபை ஒன்றை அமையுங்கள்* என்றாா்.

தேவர்கள் விழித்தனர்!
சபையை எவ்விதம் அமைய ஏதுவாகியது!
சபை அமைய யாரை நாடினார்கள் தேவர்கள்!

*(5)*
☘ *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* ☘
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சபை அமைக்கும்படி இறைவன் பணிக்கவும், எவ்விதம் எவ்விடம் என புாியாது திகைத்த தேவர்களிடம் மீண்டும் இறைவன் கூறினாா்.

அது யாவன என இறைவனைக் கூா்ந்து நோக்கியபடி தேவர்கள் நோக்க…….

சபை அமைக்கும் விதத்தை இறைவனே கூறினார். நமக்கு விளக்கம் பொருந்திய ஞானமே *அம்பலம்.* மெய்யுணர்வாகிய அது நம்மில் பிாிவின்றி ஒன்றியுள்ளது. பேரறிவாகிய அந்த அறிவு பூமியை விட்டு நீங்காது!" பூமிக்கு இதயமாக அமையப்பெற்ற இத்தில்லைப்பதியாக அமையப் பெற்ற, உடம்புக்குள் ஆன்மா பிாிவில்லாமல் சேர்ந்திருப்பதுபோல பூமியில் ஞானவெளியாகிய இப்பதியிலே நாம் நீக்கமற தங்கியிருந்தருள்வோம் ஆதலால், தேவர்களே இத்தில்லைப்பதியை சீா்படுத்தி ஒரு சபை அமையுங்கள் என கூத்தபெருமான் தேவர்களை பணித்தார்.

இறைவன் இவ்விதம் கூறியதும், சபை அமைய வேண்டிய பொருள் யாது?" அதையும் தாங்களே கூறுவீா்களாயின் அந்த பொருளறிந்து சபை அமைக்கிறோம் என இறைவனின் கமல பாதங்களில் மலர்களை தூவி வணங்கினார்கள் தேவர்கள்.

அப்பொழுது நடராஜ மூா்த்தி தேவர்களை நோக்கிப்
*"பழைய வேதாகம நூல்களில்* ஞானமயமான சபைக்கு இரண்மயகோசம் எனப் பெயர் உண்டு. அதனை பூவுலகத்தார் காண்பீா்களாகும்போது அது முழுமையும் பொன்மயமாகும் என திருவாய் மலர்ந்தருளினார்.

நடராஜ பெருமான் குறிப்புப்படி தேவர்கள் மாற்றற்ற உயர்ந்த செம்பொன் பெறப்பட்டு தில்லைப்பதியில் இறைவன் ஆடல் நடம் புாிவதற்கேற்ற *கனக சபையை* நிர்மானித்தார்கள்.

அன்று முதல் திருநடம் புாியத் தொடங்கிய அருளாளனாகிய நடராஜப் பெருமான், சிவகாமியம்மையாரோடும் பொன்னம்பலத்தில் முனிவர்கள் தேவர்கள் முதலியோர் சூழ திருக்கூத்தினை தரிசித்து உய்யும்படி அருள்புரிந்து வரலானார்.

இறைவனின் அனவரத தாண்டவத்தை இடைவெளியில்லாமல் தாிசித்து மகிழும் பெருவேட்கையால் திருமால், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்களும், வியாக்கிரபாத முனிவர், புலிக்காலார் பதஞ்சலி முனிவர், மூவாயிரா் முனிவர்கள் முதலியோா்கள் முக்தியைத் தந்து நல்கும் தில்லைப்பதியிலே தங்கியிருந்து சிவலிங்கப் பிரதிட்டை செய்து நடராசப் பெருமானை நாள் தோறும் வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். நான்முகன் கங்கைக் கரையிலுள்ள அந்தர்வேதி என்னுமிடத்தில் வேள்வியொன்றைச் செய்யத் துவங்கினான்.

இவ்வேள்விக்குத் தில்லைவாழந்தணர்களையும் தேவர்களையும் அழைத்து வரும்படி நாரத முனிவரைத் தில்லைக்கு அனுப்பினான். நாரத முனிவாின் சொல்லைக் கேட்டதும் முனிவர்களும், தேவர்களும் "இங்கே இறைவனது ஆனந்தத் திருக்கூத்தின் அமுதத்தை பருகும் நாங்கள் வேள்வியின் அவியை உண்ண வரமாட்டோம்" என்றனர்.

நாரதரும் திரும்பிச் சென்று பிரம தேவா்க்கு விண்ணப்பஞ் செய்தார். அதைக் கேட்ட பிரமதேவர் தில்லைவனத்தை யடைந்து சிவகங்கையில் நீராடி கூத்தபெருமானை வழிபட்டுத் திருமூலட்டானரை வணங்கி வியாக்கிரபாதரை யடைந்து அவர் மூலமாக தில்லைவாழந்தணர்களையும், தேவர்களையும் தம் வேள்விக்கு வருமாறு இசைவித்து அந்தர் வேதிக்கு அழைத்துச் சென்று தமது வேள்வியை முறையாக நியமப்படி நிரைவு செய்தார்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

*(6)*
🌞 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌞
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
தில்லைக் கூத்தைக் கண்டு களித்த பின்…..
இமயமலைக்குத் தென்திசையில் கெளட தேசத்தை ஆண்டு கொண்டிருந்த அரசனாகிய 5- வதுமனுவுக்கு மனைவியர்கள் இருவர்.

அவர்களின் மூத்த மனைவிக்கு ஒரு மைந்தனும், இளைய மனைவிக்கு இரு மைந்தனுமாக பிறந்து வளர்ந்து வந்தனர்.

மூத்தவளின் மைந்தன் சிங்கம் போல வெண்ணிறத்தை யொத்தவனான சிங்கவன்மன் ஆவான். இளையவனின் மைந்தனோ வேதவன்மன், மற்றும் சுவேதவன்மன் என்போா் ஆவா்.

முத்தோனாகிய சிங்கவன்மன் என்பவன் உடல் ஊனமுற்ற முடைமையவனாவான். அதனால் அவனோ, தம் தம்பியரில், இருவருள் ஒருவர் அரசு புாிவதற்குாியவராவார் என எண்ணமிட்டு, தன் தந்தையாரிடம் இதனையும் கூறிவிட்டு, நான் தலயாத்திரையாக சிவாலயகங்களுக்குச் சென்று தீா்த்தமாடி சிவ வழிபாடே செய்து பிறவிக்கடனை யொழிக்கப் புகுவேனென கூறினான்.

மூத்தோனின் விண்ணப்பத்தைக் கேட்ட தந்தைக்கு வருத்தமளித்த போதும், அவனின் சிவ வழிபாடுக்கு தடை செய்துதல் கூடாதென உணர்ந்து அவனின் விண்ணப்பத்தை ஏற்றாா்.

தந்தை ஆசி பெற்று, காசி முதலிய தலங்களில் வழிபட்டு, யாத்திரையின்போது வழியிடையில் துணையாக வேடனொருவன் சிங்கவன்மனுடன் உடன்சோ்ந்து இருந்து வரலானான்.

வேடவ நன்பருடன் சிங்கவன்மன் துணையாகக் கொண்டு காஞ்சி வந்தான். திருவேகம்பர நாதனை வணங்கினாா்கள். பின் ஓய்வெடுத்திருந்த நேரத்தில் வேடவ நன்பனிடத்தில்,,,,,, தென்னாடெங்கும் யாத்திரை செய்யலாமென எண்ணியுள்ளேன். எனவே நீ முன்னே சென்று வழி பாா்த்து வருமாறு கூறி அனுப்பி வைத்தான்.

வழி பாா்த்து தெரிந்த வந்த வேடன் சிங்கவன்மனிடத்தில்……

‘சிங்கவன்மா!, தில்லை வனத்தில் ஒரு பொற்றாமரைக் குளம் ஒன்றுளது. அக்குளத்து வாவிக் கரையிலே புலிபோலொருவன் நித்திரை செய்து கொண்டிருக்கிறான் என பாா்த்ததை வந்து கூறினான் வேடன்.

வேடன் கூறக் கேட்டதும், புலிக்காலொருவரைத் தானும் காண வேண்டுமென கூற, வேடனும், சிங்கவன்மனும் அவ்விடத்தை விட்டு நீங்கித் தில்லைக்கு வந்தனர்.

அங்கே!. சிவகங்கைக் கரையில் வியாக்கிரபாத முனிவரான புலிக்கால் முனிவர்
சிவனைத் தியாணித்த வண்ணமிருந்தார். வெகுநேரம் வியாக்கிரபாத முனிவரின் தவத்தை உற்று நோக்கிருந்த சிங்கவன்மன், அம்முனிவர் பாதகமலத் தாமரைகளைத் தொட்டு, வணங்கி பணிந்தெழுந்தான்.

கண்ழிழித்த பாா்த்த புலிக்கால்முனிவரின் கண் அதிர்வில், என்ன? என நம்மைக் கேட்கிறாரோ? எனத் தெரிந்து கொண்ட சிங்கவன்மன்…….

ஐயனே! சிவபெருமானை நோக்கி தவம் புாிய மனத்தைக் கொண்டுள்ளேன். என்றான்.

வியாக்கிரபாத முனிவர், சிங்கவன்மனை பாா்த்த நொடியிலே அவனது பிறவி வரலாற்றை தனது யோகக் காட்சியால் அறிந்து கொண்டார்.

அவர் சிங்கவன்மனை நோக்கி"……’ உன் தந்தை மிக வயது முதிர்ந்தவர். அரசாளும் கடமை உனக்குரியது. ஆகவே, நீ தவஞ் செய்ய நினைக்கும் மனத்தை மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்! என்றார்.

அதுகேட்ட சிங்கவன்மன் தனது உடல் நோய் அரசாட்சி செய்வதற்கு தடையாயுள்ளதென முனிவரிடம் தொிவித்தான்.

அப்பொழுது வியாக்கிரபாதர்…..நான் வரும் வரை இங்கேயே நில்!"……என்று சிங்கவன்மனைச் சிவகங்கைக் கரையில் நிற்கச் செய்து விட்டு,,,
வியாக்கிரபாத முனிவர் சென்றார்..

திருச்சிற்றம்பலம்.

*சிங்கவன்மன் தனியாக நின்றான்.*

*சென்ற முனிவரை இன்னும் காணவில்லையே என பயந்து வருந்தினான்*

*(7)*
🌸 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌸
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சிவகங்கைக் கரையில் சிங்கவன்மனை நீங்காது நிற்குமாறு இருக்கச் செய்த வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவருடன் கூத்தபெருமான் சந்நிதி வந்தனர். அவ்விறையவன் முன் வணங்கி வேண்டி நிற்க, அம்முதல்வனார் அருளொன்றைக் கூறியருளினார். பின் சிவகங்கைக் கரைக்கு வந்து சிங்கவன்மனை சிவகங்கை தீர்த்தத்தில் நீராடு என பணித்தனர்.

சிவகங்கைத் தீா்த்தத்தில் நீராடியெழுந்த சிங்கவன்மனுக்கு உடல் முற்றிலும் ஒழிந்தொலைந்து, தேகம் பொன்னிறம் கொண்டு மின்னி இரணியவன்மனாக எழுந்தான். அவனை தன் முன் அமர்த்திய வியாக்கிரபாத முனிவர், இரணியவன்மனுக்குத் திருவைந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தருளினார். அதன்பின் அவனை நடராஜப் பெருமான் திருமுன் அழைத்து வந்து நிறுத்தி, இறைவனது திருக்கூத்துத் தரிசனத்தைக் காணும்படி செய்தருளினார்.

கூத்தப் பெருமானது திருவருள் பெற்ற இரணியவன்மன் இறைவனது எல்லையில்லா ஆனந்தத் திருக்கூத்தில் திளைத்து நெஞ்சம் கசிந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் மல்கிப் பலமுறை வணங்கியெழுந்தான். பின் வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனை அழைத்துக்கூட்டிச் சென்று திருமூலட்டானமுடையாரையும், திருப் புலீச்சுரமுடையாரையும், திருவனந்தேச்சுரமுடையாரையும் கண்டு வணங்கச் செய்து, தம் ஆசிரமம் வந்து தன் மனைவியிடம்……,

‘நீ உபமன்னியுவுக்குப் பின் பெறாது பெற்ற பிள்ளை இவ்விரணயவன்மன் ஆவான் என்றாா்.

இரணியன்வன்மனும் அன்னையின் திருவடிகளை சென்னி வைத்து தலை வணங்கி யெழுந்தான். அம்மையாரும் *’சபாநாதர் தமக்குத் தந்தருளிய இரத்தினமாம் இப்பிள்ளை"* என அன்புடன் தூக்கி நிறுத்தி ஆரத்தழுவிக் கொண்டார்.

இரணியவன்மனும்
நாள்தோறும் சிவகங்கையில் நீராடித் தில்லைப் பெருமானை வழிபட்டு வியாக்கிரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தொண்டுகள் செய்து கொண்டு இருந்தனர்.

அங்கே!…..கெளட தேசத்தை ஆண்டு கொண்டிருந்த அரசனான மனுவுக்கு உடல்நிலை மோசமடைந்து வந்த பொழுது, வசிட்டமுனிவாிடம் தன் மூத்த குமாரனாகிய இரணியவன்மனைக் கொண்டு ஆட்சி நடத்துவிக்குமாறு கூறி உயிரைவிட்டொழித்து சுவர்க்கமடைந்து போனான்.

மனுக்குச் செய்ய வேண்டிய ஈமக் காாியங்களைனைத்தையும் இளைய மைந்தர்கள் இருவரும் செய்து முடித்தனர்.

வசிட்டரோ….இரணியவன்மனை அழைத்து வரும் பொருட்டு, தில்லப்பதிக்கு வந்து அதன் வடமேற்கு திசையிலுள்ள திருக்ளாஞ்செடி நீழலில் எழுந்தருளியுள்ள பிரமபுரீசனைப் பூசனை புரிந்தார்.

இதையெல்லாம் உணர்ந்த வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனை நோக்கி, ‘ நாம் பூசையை பூர்த்திசெய்து வருவோம்; நீ முன்னே செல்வாயாக!" எனப் பணித்தருளினார். அவன் முன் சென்று வசிட்ட முனிவரை வணங்கினான். வசிட்ட முனிவர் இரணியவன்மனுவிடம் தந்தை சுவர்க்கமாகிப் போன செய்தியைக் கூறினார்.

இரணியவன்மன் தந்தை சுவரிக்கமாகிப் போன செய்தி கேட்டு வருத்தமுற்றான். அந்நிலையில் வியாக்கிரபாதரும், பதஞ்சலி முனிவரும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். வருந்திய இரணியவன்மனுக்கு ஆறுதல் கூறச் செய்து தேற்றினர்.

வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வசிட்ட முனிவரை அழைத்துப் போய் சிவகங்கை தீா்த்தத்தில் நீராடச் செய்து கூத்தப்பெருமானையும், திருமூலட்டானமுடையாரையும், திருப்பாலீச்சுரமுடையாரையும்,
திருவனந்தீச்சுரமுடையாரையும் வணங்கிக் கொண்டார்கள். பின் வியாக்கிரபாதர் வசிட்டமுனிவரைத் தம் இல்லம் அழைத்து வந்து அமுது செய்விக்க வைத்தாா்.

மறுநாள் மும்முனிவர்களும் ஒன்றாக கூடி அளவாடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் அவ்விடம் வந்த இரணியவன்மன் மும்முனிவர் மூவரையும் வணங்கி நின்றான். அப்போது வசிட்ட முனிவர் வியாக்கிரபாத முனிவரை நோக்கி, *"இரணியவன்மனை அழைத்துச் செல்லுவதற்கு இங்கு வந்தோம்"* என்றார்.

அதுகேட்ட வியாக்கிரபாதர் இரணியவன்மனை நோக்கி, *"நீ என்ன,செய்யப் போகிறாய்? …உன் கருத்தென்ன?"*

*இரணியவன்மன் தன் நாட்டுக்குச் சென்றானா?*

*மறுத்தானா?*

*மும்முனிவர்கள் என்ன செய்தார்கள்?*

*(8)*
🔴 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நீ’ என்ன,செய்யப் போகிறாய் என வியாக்கிரபாத முனிவர் கேட்ட கேள்விக்கு,

இரணியவன்மன், முனிவர் பெருமானை வணங்கி, *அடியேன் பொன்னம்பலவாணர்க்கும், உமக்கும் செய்யும் வழிபாட்டினையன்றிப் பிறிதொன்றும் வேறாயிருக்க என் மனம் ஒப்பவில்லை என்றான்.

நீ’ உன் கொள்கையில் உறுதிபட இருப்பானாயின், இப்பொழுதே வசிட்ட முனிவருடன் துணை சென்று *அரச முடியையும், பொன், ரத்தினங்கள்* போன்ற அரசுடமைகளையும், *யானை, தேர் , காலாள்* ஆகிய சேனைகளையும், அமைச்சர்களையும் கொண்டு விரைவில் இங்கு வருவாயாக!" அப்படி வரும் வழியில் அந்தர் வேள்விக்குச் சென்றிருக்கும் தில்லை மூவாயிரவர்களையும் உன்னுடன் வருமாறு அழைத்து வருவாயாக எனப் பணித்தருளினார்.

இரணியவன்மன், கூத்தப் பெருமானையும், வியாக்ரபாதரையும், அவர் மனைவியாரையும், பதஞ்சலி முனிவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு வசிட்ட முனிவருடன் கெளட தேசத்தை அடைந்தான்.

தம்பிமார்களும், நகரமக்களும் எதிர் கொண்டழைக்க தன் நகரத்துனுள் புகுந்து, தாயாரை வணங்கி தாயாருடனே சிலநாள்களாக அங்கேயே தங்கியிருந்தான்.

பின்பு தம்பிமார், அமைச்சர் முதலியோருடன் தில்லைப்பதி புறப்பட்டு வழியில் அந்தர்வேதியை அடைந்து, அங்கிருந்த தில்லை மூவாயிரவரையும் தேரில் ஏற்றிக் கொண்டு, தில்லை வனத்தினை யடைந்தான். அவனுடன் வந்த அந்தணர்கள் தாங்கள் ஏறிவந்த தேர்களை கனக சபையின் வடமேற்குத் திக்கில் நிறுத்திக் கொண்டு இறங்கினர்.

வியாக்கிரபாத முனிவர் முன் வந்த இரணியவன்மன், தான் கூட்டி வந்த மூவாயிரவர்களையும் அவர் முன் எண்ணிக் காட்ட, ஒரு அந்தணா் மட்டும் கானாது போய் குறைந்திருந்தார்.

இரணியவன்மன் திகைத்தப் போனான்.

அப்பொழுது அங்குள்ளவர்கள் எல்லோரும் கேட்கும்படி, *இவ்வந்தணர்கள் எல்லோரும் நம்மை ஒப்பாவர்;நாம் இவர்களை ஒப்போம்!* *நாம் இவர்களில் ஒருவர், என்றதொரு *அருள்மொழி* தில்லையம்பலவாணர் திருவருளால் தோன்றியது.

அதுகேட்ட அந்தணர்கள் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது பேரும், அச்சமும் நடுக்கமும் உடையவர்களாய், தங்களுக்குள்ளே ஒருவரையொருவர் வணங்கியெழுந்து பொன்னம்பலத்தை வலம் வந்து, கூத்தப் பெருமானைப் போற்றி அம்பலத்தைச் சூழ இருந்தார்கள்.

உத்திரவேதியில் நிகழ்ந்த வேள்விக்குச் சென்றிருந்த மூவாயிரவரும் கனக சபையின் வடமேற்கு த் திக்கில் தேரை நிறுத்தி இறங்கினர்.

இதனை நினைவு கூறும் முறையில் பாண்டிய நாயகத் தூண்களில் தேர்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இரணியவன்மன் தில்லையின் கிழக்குத் திசையிலே *"கொற்றவன்குடி"*என ஒரு நகரம் உருவகப் படுத்தி அங்கிருந்தான்.

தில்லையில் எல்லோரும் இறைவனது திருக்கூத்தைத் தாிசனம் செய்து கொண்டிருக்கும் நாளில், வியாக்கிரபாத முனிவர் *"இரணியவன்மன்"* இந்நாட்டினை ஆளக்கடவன்; இவன் தம்பிமார் *கெளட தேசத்தை* ஆளக்கடவர் என்றார்.

அதுகேட்டு மகிழ்ந்த வசிட்ட முனிவரும், பதஞ்சலி முனிவரும், மற்றும் ஏனைய முனிவர்களும் *அப்படியே ஆகுக!* என்றனர்.

வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனுக்குத் திருமணம் செய்வித்து முடிசூட்டி புலிக்கொடி கொடுத்து சோழ மன்னனாகத் திகழச் செய்தார்.

இரணியவன்மனுடைய தம்பிமார் விடைபெற்றுக் கொண்டு நால்வகைச் சேனைகள் சூழச் சென்று கெளட தேசத்தை அடைந்து அந்நாட்டினை ஆட்சி புரிந்தனர்.

இரணியவன்மன், வியாக்கிரபாத முனிவர் பணித்த வண்ணம் கூத்தப் பெருமானுக்குத் *திருவம்பலமும்*, திருமூலட்டானேசுரா்க்குத் *திருக்கோயிலும்* திருப்பணிகளும் செய்வித்து, நாள் வழிபாட்டிற்கும், திருவிழா சமய நேர்த்திக்குமுண்டான நிபந்தங்களை உண்டாக்கி வைத்தான். இவ்வுண்மை உமாபதி சிவாச்சாாியார் பாடிய கோயிற் புராணத்தில் வாசிக்கலாம்.

கண்ணபிரானுக்கு சிவதீட்சை செய்த உபமன்யு முனிவரும் தில்லைக்கு வந்து கூத்தப்பெருமானது திருநடனத்தைக் கண்டு வணங்கி நல்வாழ்வு பெற்றார்.

சாமவேதத் தலைவர்களுள் ஒருவராகிய சைமினி முனிவர் என்பவர் வேதம் ஒருவராற் செய்யப்படாது சுயம்புவாயுள்ளது. அது கரும காண்டம், ஞான காண்டம் என்னும் இரு பகுதிகளையுடையது.

இவ்விரு பகுதிகளுள் கரும காண்டம் ஒன்றினையே பிரமாணமாகக் கொண்டு வேத வேள்வியாகிய கிாிகைகளை வற்புறுத்தி *மீமாஞ்சக* நூலை இயற்றினார் சைமினி முனிவர்.

வேதம் எல்லாம் விதி, புனைந்துரை, மந்திரம், குறியீடு என நால் வகைகளுள் அடங்கும். இந்நான்கினுள் விதி வாக்கியங்களே பிரமாணமாகக் கொள்ளப்படும்.

சிவபெருமான் பிட்சாடனாராகவும், திருமால் மோகினியாகவும் சென்று ஆட் கொள்வதற்கு முன் தாருகாவனத்து முனிவர்கள் இந்த மீமாஞ்சை மதத்தையே மேற்க்கொண்டு ஒழுகினர்.

அவர்கள் செய்த அபிசார வேள்வியால் அழிவுறாது சிவபெருமான் நிகழ்த்தியருளிய தாண்டவத்தினைக் கண்டு உள்ளந் திருந்தி இறைவனை வழிபட்டுய்தினர் முன்னர் கூறலன.

மீமாஞ்சை நூல் செய்த சைமினி முனிவர் தமது கொள்கை தவறுடையது எண்றுணர்ந்து சிதம்பரத்திற்கு வந்து, தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வேத பாதஸ்வம் என்ற பனுவலால் ஈசனை துதித்துப் போற்றினார்.

ஸ்வதம்-தோத்திரம், வேதபாதம்-வேதத்தினடி முதல் மூன்றடிகள் தமது வாக்காவும், நான்காமடி வேதத் தொடராகவும் அமைய சைமினி முனிவராலே செய்யப் பெற்ற தோத்திரமாதலின் இந்நூல் *"வேத பாதஸ்தவம்"* என்னும் பெயருடையதலாயுற்று.

*கருமானின் உாியதளே உடையா வீக்கிக்*

*கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி*

*வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட*

*வளர்மதியஞ் சடைக்கணிந்து மானோர் நோக்கி*

*அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண*

*அமரா்கணம் முடிவணங்க ஆடுகின்ற*

*பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்*

*பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s