Adishankara charitram Part10 -Periyavaa

Courtesy: http://valmikiramayanam.in/?p=2503

ஸ்ரீ சங்கர சரிதம் – பத்தாம் பகுதி – குமாரில பட்டர் கதை

நேற்றைய கதையில் ஆதிசங்கரர் கீதா பாஷ்யத்தில் கூட, பக்தி மார்கத்தை பத்தி விஷேஸமாக சொல்லிருக்கார், அப்படிங்கறதை பார்த்தோம். இன்னிக்கு ஆதிசங்கரர், குமாரிலபட்டர் அப்படிங்கறவரை, பிரயாகைல போய் பார்க்கிறார்.

அதுக்கு முன்னாடி, ஆதிசங்கருடைய அவதாரம் பண்ணினதே, இந்த எழுபத்திரெண்டு துர்மதங்களை கண்டனம் பண்ணி, ஷண்மதங்களை ஸ்தாபனம் பண்ணி, அத்வைத தத்துவத்தை பிரகாசிக்க பண்ணறது. அதுக்கு “பிரம்மசூத்திர பாஷ்யம் எழுதி, நான் பூமியில தர்மத்தை நிலை நாட்டுகிறேன்”, அப்படின்னு தக்ஷிணாமூர்த்தி வாக்கு குடுக்கறார். அப்போ, தேவர்கள் கிட்ட, ப்ரம்மாட்ட, நீங்கள் சரஸ்வதி தேவியோடு பூமியில் அவதாரம் பண்ணுங்கோன்னு சொல்றார். சுப்ரமண்ய ஸ்வாமியை “நீ போய் பூமியில அவதாரம் பண்ணு” ன்னு சொல்றார். அப்படி சுப்ரமண்ய ஸ்வாமியுடைய அவதாரமாக, பூமியில வந்தவர் குமாரில பட்டர்ங்கரவர்.

அப்போ தேசத்துல பலவிதமான மதங்கள் இருந்திருக்கு, அதுல, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் அப்படின்னு, சாருவாகம் அப்படின்னு ஒண்ணு. வாழ்க்கைன்னு ஒண்ணு கிடைச்சதுன்னா அனுபவிக்க வேண்டியது தானே, இதுல என்னத்துக்கு சன்யாஸம், யாரவது இப்படி முட்டாள்தனம் பண்ணுவாளா, சந்தோஷமா இருக்கறதுக்கு தானே வாழ்க்கை, நன்னா குடிச்சுட்டு ஆடிபாடிண்டு, நல்ல சாப்டுண்டு, இருந்துட்டு போலாம், அப்படின்னு ஒரு, இப்படி ஒரு மதம். இதுக்கு ஆள் சேர்றது கஷ்டமா! ரொம்ப சுலபம் தானே! அப்புறம் மன்மத மதம், எம மதம், இப்படியெல்லாம், இதுலளெல்லாம், இப்போ கூட கேள்விபடறோம், ஒரு ஐம்பது பேர் சேர்ந்து, அமெரிக்கால கேள்விப்பட்டிருக்கேன், ஐம்பது பேர், நூறு பேர் சேர்ந்துண்டு, எல்லாரும் ஒரே நிமிஷத்துல ஒரே நேரத்துல விஷத்தை சாப்பிட்டு, பகவான்ட்ட போறோம் அப்படின்னு, அவாளோட பகவான் எமன் தான்! அது மாதிரி மன்மத மதம் ன்னா, இந்த மது, மாம்ஸம், மைதுனம் இதுவே ஒரு வழிபாடா வெச்சுக்கறது.

மஹாபெரியவா சொல்றா, இதெல்லாம் வந்து, யாருக்காவது ஏதாவது ஒரு சித்தி கிடைக்குமாக இருக்கும், ஆத்மானுபவம் என்ன கிடைக்கும் ன்னு சொல்ல முடியலை, இதெல்லாம் ஒரு மதங்களாக இருந்திருக்கு. இதெல்லாம் கத்தி முனை மேலே நடக்கிற மாதிரி, அப்படின்னு சொல்ல வந்தேன். ஆனா, சாஸ்திரங்கள்ல அத்வைத சாதனை தான் கத்தி முனை மேலே நடக்கிற மாதிரின்னு சொல்லிருக்கா, பெரியவா எல்லாம். இது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்ற மாதிரி, வீட்டுக்குள்ள வாசலால வராம, கொல்லைபுறமா ஏறிகுதிச்சு கக்கூஸ் வழியா வர மாதிரி, ஏறி குதிக்கும் போது, கைகால் உடையாமல் இருக்கணும், அமேத்யத்தை மிதிக்காம இருக்கணும், என்னத்துக்கு அது உனக்கு, நேரா ராஜபாட்டையா மாஹன்கள் காமிச்ச வழி இருக்கே, அப்படின்னு சொல்றா. இது மாதிரி துர்மதங்களெல்லாம் நிறைய இருந்திருக்கு.

இதுல ரொம்ப பிரபலமாக, ரொம்ப ஒரு சக்தியோட அந்த காலத்துல இருந்தது வந்து புத்தமதம். இந்த புத்தர்ங்கறவர், actualஆ அவர், ஹிந்து மதத்துல வந்த ஒரு உயர்ந்த விவேகி தான். அவர் பேரால ஒரு மதம் உருவாகி, அவா ஒரு, அஹிம்சை, அதுமாதிரி கோட்பாடுகள் எல்லாம் வெச்சுண்டு, நம்ம வர்ணாஸ்ரமதர்மம் எல்லாம் கிடையாது, வேதமே பிரமாணம் கிடையாது, வேதத்தையே அவா கைவிட்டுடறா. அதுல சொல்ற யாகங்களெல்லாம் பண்ண வேண்டாம், அதெல்லாம் ஹிம்சை, அப்படின்னு சொல்லி, ஈஸ்வரனே கிடையாது, நிரீச்வர வாதம், அப்படின்னு சொல்லி, தெய்வ பக்தி அதெல்லாம் போக்கிடறா. அவா ஒரு ஞானம் மாதிரி ஒண்ணு சொல்றா, அது வந்து, அப்படியே மனஸையே இல்லாம பண்ணிக்கறது, ஒரு விளக்கை ஊதி அணைக்கற மாதிரி, மனஸ் இல்லாம பண்ணிண்டா அதுதான் முடிவு, ஒரு பாழ்வெளில போய் நிக்கறது தான் முடிவுங்கற மாதிரி, அவாளோட அந்த ஞானத்தோட ஒரு definition இருக்கு, அப்படின்னு பெரியவா சொல்றா.

ஆனா அந்த புத்த மதத்துல ஜனங்களுக்கெல்லாம் வந்து ஒரு கவர்ச்சி. யாரவது ஒரு மஹாத்மான்னு இருந்தார்ன்னா அவர் சொல்றது சரியாத்தான் இருக்கும், அப்படின்னு ஜனங்கள் அவர் வழியில போக ஆரம்பிச்சுடுவா, இந்த புத்த மதத்துல, பின்னாடி வந்தவா பிக்ஷுக்கள் எல்லாம், ராஜாக்களை எல்லாம், ஒரு மந்திர தந்த்ரங்களெல்லாம் வைச்சு mesmerize பண்ணி இருந்தா. அரசர்களுடைய செல்வாக்கு அவாளுக்கு இருந்தது, அதனாலயும் அந்த மதம் ரொம்ப வேகமாக வளர்ந்துண்டு இருந்தது. இந்த நேரத்துல, இந்த, திரும்பவும் வேத மதத்தை புதுப்பிக்கறதுக்காக, அதை திரும்ப மறுமலர்ச்சி அடைய பண்ணறதுக்காக, குமாரில பட்டர் அவதாரம் பண்ணிணார். அவர், இந்த வேதத்துல சொன்ன கர்மாக்கள் எல்லாம் பண்ணனும், யாகாதிகள் யஞாதிகள் எல்லாம் பண்ணனும், சம்ஸ்காரங்கள் எல்லாம் பண்ணனும், அது நம்முடைய கடமை, அப்படிங்கறதை ப்ரச்சாரம் பண்ணி, திரும்பவும் அந்த வேத மதத்துக்கு புத்துயிர் குடுத்தார்.

வேதத்துல எல்லாமே சொல்லிருக்கு, ஒழுக்கமும் சொல்லிருக்கு, கர்மாவும் சொல்லிருக்கு, வைதீக கர்மாக்கள், பக்தி இருக்கு, யோகம் இருக்கு ஞானம் இருக்கு, இதுல ஏதாவது கொஞ்சம் கொஞ்சத்தை எடுத்துண்டு, ஒரு மதமாட்டும் மத்தவா சொல்றா. உலகத்துல முழுக்க இருக்கற எல்லா மதங்களுக்கும் வேதம் தான் ஆதாரம். ஆனா நம்முடைய அத்வைதம் தான் முழுமையான வழி. இதை ஒவ்வொண்ணும் படி, முடிந்த முடிவாக ஞானத்தை அடையணும், அந்த ஞானம்ங்கறது வந்து ஒரு அனுபவம், அது வந்து கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்ங்கற மாதிரி, சொல்லி புரியவைக்கற விஷயம் இல்லை. ஆனால் நான் அனுபவிக்கலை. அதுனால அது இல்லவே இல்லைன்னு சொல்ல முடியாது. ஞானிகள் இருக்கா, அவா வந்து, அந்த நிர்விகல்ப ஸமாதில இருக்கா, ஏதோ ஒரு நிமிஷம் அதுலேர்ந்து வெளில வந்து ஒரு சில வார்த்தைகள் பேசறா, ரமண பகவான் மாதிரி, அப்படி பேசும் போது நமக்கு தெரியறது, இவாளுடைய அனுபவம் பேரானந்தம், அப்படின்னு. அதானால, அந்த அத்வைத தத்வம்ங்கறது, இந்த படிகளெல்லாம் ஏறினால், மேலே போய் சேர வேண்டிய, ஒரு உச்சாணி கொம்புல இருக்கிற ஒரு உயர்ந்த நிலை, அப்படிங்கறது, அதுதான் வேதத்தினுடைய முடிந்த முடிவான செய்தி, அப்படிங்கறதை சொல்லணும், அப்படிங்கறதுக்கு பெரியவா தக்ஷிணாமூர்த்தி, ஆதிசங்கரரா அவதாரம் பண்ணப் போறார். அதுக்கு ஒரு ஐம்பது வருஷம் முன்னாடி, இந்த குமாரிலபட்டர் அவதாரம் பண்ணி, கர்மாவெல்லாம் பண்ணனும், அப்படின்னு இந்த பௌத்த மதத்தை கண்டனம் பண்ணி, கர்மா பண்ணனும் எங்கறதை அவர் நிலைநாட்டினார்.

அதுக்கு அவர் என்ன பண்ணார், இந்த புத்தர்களோடேயே சேர்ந்து அவாளுடைய மதத்தை முழுக்க கத்துண்டா தான் அவா என்ன சொல்றான்னு தெரிஞ்சுண்டு, அதுக்கு சரியான எதிர்வாதம் பண்ணமுடியும், கண்டனம் பண்ண முடியும் ன்னு சொல்லி, அவர் புத்தனாட்டம் அவாளோடைய விஹாரத்திலேயே போய், நான் உங்கள்ட்ட வந்து படிக்க வந்து இருக்கேன்னு, அப்படின்னு சொல்லி, எழு வருஷங்கள் இருந்து அவாளுடைய விஷயங்கள் எல்லாத்தையும் நன்னா கத்துண்டுடறார். ஆனலும் அவா வந்து வேத நிந்தனை பண்ணும்போது, கொஞ்சம் இவர் முகம் வாடுமாம், கண்ல ஜலம் வந்துடுமாம், அப்போ “என்ன ஆச்சு உனக்கு” ன்னு கேட்டா, “இல்லை இல்லை கண்ல தூசி விழுந்துடுது” ன்னு அப்படின்னு சொல்லிண்டு இருப்பாராம். ஆனா அவா கண்டு பிடிச்சுட்டாளாம் கடைசில. “இந்த பார்ப்பான் கெடுத்தானே, இவனை வெளில அனுப்பக் கூடாது, இவன் நம்முடைய மதத்தை நல்லா கத்துண்டுட்டான், இவனை வந்து முடிவு கட்டணும்”, அப்படின்னு சொல்லி, ஒரு நாளைக்கு, மாடிக்கு கூட்டிண்டு போய், ஏழாவது மாடியில இருந்து தள்ளி விட்டாளாம், அஹிம்சை ப்ரச்சாரம் பண்றவா அவாளுடைய மதத்துக்கு ஆபத்துன்னவுடனே இந்த மாதிரி பண்ணிணா!

அவர் விழும்போது, குமாரிலபட்டர், வேதமே ஸத்யம், அது என்னை காப்பாற்றும், அப்படின்னு சொல்லாமல், வாயில ஒரு வார்த்தை கொஞ்சம் மாறி, “யதி ப்ரமாணம் ஸ்ருதயோ பவந்தி” “ஸ்ருதி என்பது ப்ரமாணம் ஆகுமானால், எனக்கு, என் உடம்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்கட்டும்”, அப்படீன்னு சொல்லிண்டு அந்த ஏழாவது மாடிலேர்ந்து கீழே விழுந்தாராம். அவருக்கு உயிருக்கு ஆபத்து ஒண்ணும் வரலை. கண்ணுல ஒரு காயம் பட்டுதாம். அவர் ஏன் எனக்கு காயம் பட்டுதுன்னு கேட்டாராம். “நீங்க அந்த “யதி ப்ரமாணம் ஸ்ருதயோ பவந்தி”, “ஸ்ருதி என்பது ப்ரமாணமாம் ஆகுமானால்”, அப்படீன்னு ஒரு வார்த்தை சொன்னதுனால, அது உங்களுக்கு சின்னதா ஒரு காண்பிச்சு கொடுத்துருக்கு. “வேதம் தான் ப்ரமாணம்” அப்படீன்னு சொல்லியிருந்தா, இது கூட பட்டிருக்காது” அப்படீன்னு அசரீரீ கேட்டதாம்.

அவர் அதற்கப்புறம் அவருடைய வாக்குனாலயும், புஸ்தகங்கள் எழுதியும் அந்த பௌத்த மதத்தோட arguments எல்லாத்தையும் எடுத்து அழகான கண்டனங்கள், பிரதிவாதங்கள் எழுதி , அந்த பௌத்த மதத்தையே ஐம்பது வருஷத்துல ரொம்ப இல்லாம பண்ணிட்டார்.

பெரியவா விளையாட்டா ஒண்ணு சொல்றா. இந்த சங்கரரோடு பிரம்மா, சரஸ்வதி, முருகப்பெருமான் எல்லாரும், அவதாரம் பண்றா. ராமரோட அவதாரம் பண்ணும் போது “ராமஸஹாய ஹேதோஹோ” அப்படீன்னு, தேவர்கள் எல்லாரும் பூமியில, சுக்ரீவனாகவும், ஹனுமாராகவும் அவதாரம் பண்ணி ராமருக்கு சஹாயம் பண்ணிணா. அதே போல சங்கரரோடு இவா எல்லாம் இங்க வந்து பொறக்கறா. ஆனா அவா ஆதிசங்கரரை எதிர்த்து வாதம் பண்றா. ஆனாலும் அவா பெரிய சகாயம் பண்ணியிருக்கா. என்னனா, இவா இந்த பௌத்த மதம் almost இல்லாமல் பண்ணிட்டா. இந்த குமாரிலபட்டரும் மண்டன்மிச்ரரும் திரும்பவும் வேத மதம் நன்னா செழிக்கும்படியாக பண்ணி இருந்தா.

ஆனா அவா வந்து school படிப்பு முடிச்ச உடனே, இதே போறும். College படிப்பு எல்லாம் வேண்டியதில்லை, அப்படிங்கற மாதிரி, கர்மா பண்ணிண்டு இருந்தாலே போறும். அதுக்கு மேலே ஒண்ணும் வேண்டியது இல்லை. வேதத்துல ஞானம், நைஷ்கர்ம்ய சித்தி அப்படின்னு சொல்றதை எல்லாம் literal ஆக எடுத்துக்கக் கூடாது. கடைசி வரைக்கும் கர்மாக்களை விடாமல் பண்ணனும். வேதத்துலேயே, கடைசி வரைக்கும், நூறு வருஷங்கள் இருந்தா, நூறு வருஷங்கள் கர்மா பண்ணனும், அப்படின்னு இருக்கு. பஷ்யேம ஷரதஷதம், ஜீவேம ஷரதஷதம் அப்படிங்கறதை எடுத்துண்டு, கர்மாவை விடவே படாது. சன்யாசம் கிறது தப்பு. அப்படின்னு அவா கர்ம மீமாம்சை அப்படின்னு ஒரு கொள்கையை ஸ்தாபிச்சு அதை ரொம்ப தீவிரமாக பிரச்சாரம் பண்றா.

“அதுக்கு ஒரு காரணம் இருக்கு. பௌத்தர்களும் ஞானம் மாதிரி ஒண்ணு சொல்றா. ஆனா அது அவைதீகமான ஞானம். ஆசார்யாள் வந்து சொல்லப் போறது வைதீக மதத்தில் உள்ள கர்மா, பக்தி அதோட முடிவுல ஞானம். அதுனால பௌத்த மதத்துக்கு அப்பறம் நேரா ஆசார்யாள் வந்து அத்வைத ஞானத்தை சொன்னார்னா ஜனங்கள் குழம்பி போயிடுவா. அதுனால நடுவுல, இவா அந்த அவைதீகமான பௌத்தத்தை கண்டனம் பண்ணி, இல்லாமல் பண்ணி, அடுத்தது இந்த வேத மதத்தை சொல்லி, இதுல இருக்கற நம்முடைய யாக யஞாதிகள், நாற்பது சம்ஸ்காரங்கள், அதையெல்லாம் திரும்பவும் ஜனங்களை நன்னா பண்ண வெச்சு, அதற்கப்பறம் ஆதி சங்கரர் வந்து, இதெல்லாம் படிகள், இதற்கு மேலான ஞானம் னு ஒரு நிலைமை இருக்கு, அப்படிங்கறதை சொல்லி அதை புரிய வெச்சார்” அப்படின்னு பெரியவா சொல்லியிருக்கா.

அந்த குமாரில பட்டர் இந்த மாதிரி வேத மதத்தை, பூர்வ மீமாம்சை மூலமாக நன்னா establish பண்ணின பின்ன, “நாம இருக்கும் போது வேதத்துக்கு தொண்டு பண்ணினோம். நமக்கு வயசாகிவிட்டது. நாம சாக்ரதுல கூட சாஸ்திரம் தான் பிரமாணம்னு சாஸ்த்ரத்தோட முக்யத்துவத்தை காண்பிக்கற மாதிரி ஒண்ணு பண்ணும் னு நினைச்சாராம். என்ன பண்ணினார் னா, இந்த உயிரை விடறது கூட சாஸ்திர சம்மதமாக விடணும் னு சொல்லி, அவாளோட கர்மா தியரி ல கர்மாக்கு பலன் இருக்கு. அவ்வளவு தான். ஈஸ்வரனுடைய கருணை, அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. கர்மா அதுக்கு பலன். அதுனால பாபத்துக்கு பிராயஸ்சித்தம். அவர் “நான் குரு த்ரோஹம் பண்ணிட்டேன்.பௌத்தர்கள் கிட்ட போய் எல்லாத்தையும் கத்துண்டு, ஆனா அவாளோட மதத்தையே நான் நிரஸனம் பண்ணிட்டேன். அந்த பாபத்துக்கு, குரு வருத்தப் படும்படியாக பண்ணின பாபத்துக்கு என்ன பிராயஸ்சித்தம் னு புஸ்தகங்களில் தேடினாராம். அதுல தான் உடம்பை ரொம்ப வருத்திண்டு உயிரை விடறது தான் பிராயஸ்சித்தம் னு போட்டு இருந்தது.

பெரியவா சொல்றா, “அந்த மாதிரி ஒரு புஸ்தகத்துல போட்டு இருந்தா நாம அந்த புஸ்தகத்தை நெருப்புல போட்டுருவோம். குமாரில பட்டர், “அஹா, இப்படி ஒரு வழி கிடைச்சுதே!” னு சொல்லி, ஒரு ஆள் உயரத்துக்கு உமியை சேர்த்து அதுல நெருப்பை மூட்டி, அதுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு உயிரை விட்டுண்டு இருந்தார்.

இதை ஆசார்யாள் கேள்விப் பட்டார். “அஹா, இப்படி பண்ணிட்டரே! இந்த குமாரில பட்டரை போய் நாம் பார்க்க வேண்டும்” னு காசியிலேர்ந்து பிரயாகைக்கு ஓடோடி வந்து பட்டருக்கு தரிசனம் குடுத்து உபதேசம் பண்றார்.

இங்கே பகவத் கீதை ஸ்லோகங்களை வெச்சுண்டு, மஹா பெரியவா இந்த இடத்திலே கர்மாலேர்ந்து ஞானத்துக்கு அவரை அழைச்சுண்டு போறா. அந்த சில ஸ்லோகங்களை சொல்றேன். எனக்கும் இந்த விஷயங்கள் தெரியாது. ஆனா பெரியவா சொல்றது கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு. அதுனால நான் உங்களுக்கும் சொல்றேன்.

“நஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்ய சேஷத : – உடம்பு இருக்கறவன், நான் இந்த உடம்புன்னு நினைக்கறவனால காரியங்களை ஒரேடியாக விட முடியாது.

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரந் |

இந்த்ரியார்த்தாந் விமூடாத்மா மித்யாசார : ஸ உச்யதே ||

ஒருவனுக்கு கர்மாவில் ஆசை இருக்கும் போது, உலக விஷயங்களில் இன்னும் ஆசை மிஞ்சி இருக்கும் போது, இந்த்ரியங்களை மட்டும் அடக்கிண்டு, வாசனா பலத்துனால, மனசுல அந்த போகங்களை எல்லாம் பண்ணிண்டு இருந்தான் ஆனால், அது “மித்யாசார:’ hypocrisy தான்.

அதுனால நீ பண்ண வேண்டாம் னு நினைச்சாலும்

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த : ஸ்வேந கர்மணா |

கர்த்தும் நேச்சஸி யந்-மோஹாத் கரிஷ்யஸ்-யவஷோபி தத் ||

நீ பண்ண வேண்டாம் னு நினைச்சாலும் மோஹவஷாத் அதைதான் நீ பண்ணுவே. அதனால் காரியத்தை விடாதே. நீ “நான் யுத்தம் பண்ணனுமா?” னு கேட்கற. “நீ க்ஷத்ரியன். யுத்தம் வந்திருக்கு. யுத்தம் பண்ண வேண்டியது தான்.”

ஆனா அதை எப்படி பண்ணனும்னா “தத் குருஷ்வ மதர்ப்பணம்” எனக்கு அர்ப்பணம் பண்ணிடு. இதோட பலாபலன்களை பத்தி நினைக்காதே. அப்படி நீ பண்ணினால் “லிப்யதே ந ஸ பாபேந பத்ம-பத்ரமிவாம்பஸா” ஒரு தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாத மாதிரி இதோட பாபங்கள் உன்னை ஒட்டாது. இப்படி நீ கர்மாவை ஈஸ்வர அர்ப்பணமாக பண்ணிண்டே வந்தால், உனக்கு சித்த சுத்தி ஏற்பட்டு, ஞானத்துக்கு உனக்கு அருகதை ஏற்படும். “ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ச ஸித்திம் விந்ததி மாநவ” இது ஒரு சின்ன ஸித்தி. ஆரம்ப ஸ்டேஜ். இதுலேயே அப்பறம் ஞானத்தை பத்தி தெரிஞ்சுண்டு, அந்த சாதனைகள் எல்லாம் பண்ணிண்டே வந்தால் “நைஷ்கர்ம்ய ஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேன அதிகச்சதி” நைஷ்கர்ம்ய ஸித்தினு காரியமே பண்ணாத ஒரு நிலைமை இருக்கு. அது உனக்கு சன்யாசத்தினால் கிடைக்கும்.

ஆருருக்ஷேர்-முநேர்-யோகம் கர்ம காரணம் உச்சயதே |

யோகாரூடஸ்ய தஸ்யைவ சம : காரணம் உச்யதே ||

இந்த சாதனைகள் எல்லாம் பண்றதுக்கு, சில வழிமுறைகள் இருக்கு. அது முனியினுடைய யோகம். யோகாரூடன், அந்த ஞானத்தை அடைசுன்ட்டான்னா ஸமஹா அவன் மனசு அடங்கறதுதான் அவன் பண்ணவேண்டிய காரியம். அவன் சாதனைகள் கூட பண்ண வேண்டியது இல்லை.

ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞாநே பரிஸமாப்யதே – ஒருத்தனுக்கு ஞானம் வந்துவிட்டதென்றால் அவனுடய, physical-லாகவோ, mental-லாகவோ எல்லா காரியங்களும் நின்னு போய்விடும்.

தஸ்ய கார்யம் ந வித்யதே – அவனுக்கு காரியமே கிடையாது.

அப்படின்னு, படிப்படியா சொல்லி, இப்படி ஒரு நிலைமை இருக்கு. இதெல்லாம் வந்து exaggeration கிடையாது. இந்த கர்மாலேயிருந்து ஆரம்பிச்சு, ஈசவரார்பண புக்தியினால பக்தி ஏற்பட்டு, ஸித்தசுத்தி ஏற்பட்டு, பகவான் கிட்ட இரண்டற கலந்து, “சும்மாயிரு சொல்லற” , அப்படின்னு சொல்ற மாதிரி ஒரு ஞான நிலைமை இருக்கு. அந்த அநுபூதி, மஹான்களோட அனுபவம். அதானால் நீங்கள் அதை ஒத்துக்க வேண்டும், அப்படின்னு சொல்றார். இந்த குமாரில பட்டருக்கு சங்கரரை தரிசனம் பண்ணும்போதே அந்த ஞானம் வந்துடறது. அவர் பேசப் பேச பேச தெளிவு வந்துடறது குமாரிலபட்டருக்கு. அவர், “ஆமாம், நான் புரிஞ்சுண்டேன், நீங்கள் உங்களுடைய தரிசனத்தினாலேயும், உங்களுடைய வாக்குனாலேயும், எனக்கு இந்த ஞானத்தை உபதேசம் பண்ணதுனால, எனக்கு இது புரிஞ்சிடுத்து, அனுபவப்பட்டுடுத்து”.

“நான் உயிரோட இருந்தேன்னா இதை பிரச்சாரம் பண்ணி, உங்களுக்கு உபகாரம் பண்ணுவேன். ஆனா, இந்த மாதிரி, என் காலம் முடியப்போறது. மாஹிஷ்மதி-ங்கற இடத்துல மண்டனமிஸ்ரர்-னு ஒருத்தர் இருக்கார். அவர் நல்ல செல்வத்தோட, செல்வாக்கோடும், நிறைய யாகங்கள் எல்லாம் பண்ணிண்டு, சோம யாகங்கள் பண்ணிண்டு இருக்கார்.” கர்ம மார்கத்துல, குமாரிலபட்டர் ஒரு ப்ரசாரகரா, ஒரு பண்டிதராக இருக்கார், அதை வந்து நன்னா அப்பியாசம் பண்ணிண்டு practice பண்ணிண்டு இருக்கக் கூடியவர் மண்டனமிஸ்ரர். “நீங்க அந்த மண்டனமிஸ்ரரைப் போய் பாருங்கள், ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் அவருக்கு இருக்கா. நீங்க அவரை இந்த வேதாந்தத்தை, அவரை புரிஞ்சிக்க வச்சுட்டேள்ன்னா அவரோட சிஷ்யர்கள் எல்லாரும் இந்த வழிக்கு வருவா. நான் உங்களை ப்ரார்த்திச்சுக்கறேன், அப்படின்னு, நீங்க பார்த்துண்டே இருங்கோ, நான் என்னோட காயத்தை விட்டுடறேன்.

சபரி, சரபங்கர் எல்லாம் ராம தர்சனத்தோடையே மேலுலகத்துக்கு போனமாதிரி, அவர் இந்த தூஷக்னி-யில தன்னோட உடம்பை விடறார். இந்த இடத்துல பெரியவா வந்து இரண்டு சொல்றா. அவருக்கு அந்த நெருப்பு சுடவே இல்லையாம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசுதென்றலும் வீங்கில வேனிலும்

மூசுவண்டரை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தன் இணையடி நிழலே

அப்படின்னு, அப்பர் பெருமான் சுண்ணாம்பு களவாயில இருந்தாலும் அவருக்கு அது சுடாதது போல, ஆச்சார்யாள் தரிசனத்துனால குமாரிலபட்டருக்கு, அந்த நெருப்பு சுடவே இல்லை, அப்படின்னு சொல்றார். இன்னொன்னு சொல்றா பெரியவா, சீதாதேவி பிரார்த்தனை பண்ணினதால ஹனுமார் வால்ல எப்படி அக்னி சுடாமல் குளிர்ச்சியாக இருந்ததோ, அந்த மாதிரி இவருக்கு குளிர்ச்சியா இருந்தது. சுடலை-ங்கறது ஒரு பக்கம். குளிரிச்சியா இருந்தது-ங்கறதுக்கு இந்த ஹனுமார் வால்ல வச்ச தீ அவருக்கு, சீதாதேவி அம்பாள் அனுக்கிரஹத்துனால சுடாததை போல அப்படின்னு சொல்றார். இதெல்லாம் இன்னிக்கு இந்த பிரதோஷ வேளைல பரமேஸ்வர த்யானாமாவும், பரமேஸ்வர அம்சமான ஹனுமார், அம்பாள் த்யானமாகவும் இருக்கு. அப்படி அந்த குமாரில பட்டராக வந்த சுப்ரமண்ய ஸ்வாமி வந்த அவதார நோக்கத்தை நிறைவேற்றிட்டு அவர் கைலாசத்துக்கு போயிடறார்.

ஆதிசங்கர பகவத் பாதாள் அடுத்தது, மாஹிஸ்மதியில போய் மண்டனமிஸ்ரரை பார்க்கறது, அவரையும் ஸரஸ வாணியையும், வாதத்துல ஜயிக்கறது, அதெல்லாம் நாளைக்கு பாப்போம்.

குமாரில பட்டர் கதை (19 min audio in tamil. same as the script above)

ஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s