Naladiyaar

களஞ்சியத்தில் ஒரு கைப் பிடி – j.k. sivan

காலடி” யார் வாக்கு போல் ”நாலடியார்”

அந்த காலத்தில் நாங்கள் உபயோகித்த ஒரு வார்த்தை ‘ ஹாய்யாக”.
ரெண்டு காலையும் நீட்டிக்கொண்டு ஆட்டிக்கொண்டு, உடலில் சட்டை இன்றி ஒரு மேல் துண்டோடு, ஒரு வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் சாப்பிட்டுக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து ஊர் வம்பு ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டு வாய் நிறைய வெற்றிலை குதப்பி ஆகாசத்தை பார்த்து பேசுவது. குனிந்தால் ரத்த வெள்ளமாக கூடம் நிறைய வெற்றிலைப் பாக்கு சாறு வழியுமே அதனால் தான்.

இப்படி வாழ்க்கை ”சுகமாக” அனுபவிக்க தேவையானது குதிர் நிறைய நெல்லும், பயிர் நிலங்களும், பண்ணையும் . ஆனால் இந்த செல்வம் எங்கும் என்றும் நிலைத்து நிற்பதல்ல.

நெய் மணக்க வாழை இலையில் சுடச்சுட சுவையான உணவு, மனைவி ”இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்’ என்று பரிந்து உபசரித்து பரிமாற சாப்பிட்டவன் எல்லாம் எங்கோ கூழ் ஊற்றுகிறார்கள் என்று கேட்டு ஓட்டமும் நடையுமாக வரிசையில் நின்று ஒரு குவளை கூழ் பெற வேண்டிய பசி நிலைக்கும் தள்ளப்படலாம். செல்வம் அத்தகையது என்று சொல்கிறது ஒரு நாலடி தமிழ்ப் பாடல்.

” அறு சுவை உண்டி, அமர்ந்து, இல்லாள் ஊட்ட,
மறு சிகை நீக்கி உண்டாரும், வறிஞராய்ச்
சென்று இரப்பர் ஓர் இடத்துக் கூழ் எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று. உரை”

இந்த பணம் இருக்கிறதே. ”உருண்டோடிடும் பணம் காசெனும்” விபரீத பொருள் அது. ஓரிடத்தில் நில்லாது ஆளுக்கு ஆள் இட த்துக்கு இடம் நகர்ந்து செல்வதால் ”செல்வோம்” என்று பெயர் பெற்று காலை வாரி விடுவதாள், காலிழந்தும், அகங்காரம் என்னும் தலைக்கு மேல் கொம்பை இழக்க வைத்து ”செல்வம்” ஆக காண்கிறது.

எவ்வளவு தான் மூட்டை மூட்டையாக பணம் இருந்தாலும் மற்றவரோடு பணிவோடு எளிமையோடு ஒரு கூழானாலும் கூட சேர்ந்து குடிக்காதவனிடம் நிற்பதில்லை. சக்கரம் எப்படி ஓடுமோ அப்படி ஓடுமாம் அடுத்தவனை நோக்கி.

”துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க-
அகடு உற யார் மாட்டும் நில்லாது. செல்வம்
சகடக்கால் போல வரும்!உரை”

ஆசாமி பெரும் பணக்காரன் என்று பிரபல பெயர் படைத்த ராஜாவாக இருக்கலாம். எங்கு போனாலும் யானை பவனி, குதிரை காளை என்று வண்டிகள், வீரர்கள், அவனைச் சூழ்ந்து அடிப் பொடிகள், எல்லாமே ஒரு நாள் காணாமல் போய்விடும். எல்லாமே இழந்தாலும் பரவாயில்லை, அவன் மனைவியையும் மற்றொருவன் கொண்டு போய்விடுவான் என்று ஒரு சுருதி உச்சமாகவே சொல்கிறார் நாலடியார்.

”யானை எருத்தம் பொலிய, குடை நிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும், ஏனை
வினை உலப்ப, வேறு ஆகி வீழ்வர், தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.உரை”

மற்றுமொரு பாடல் சந்தம் நிறைந்ததாக வருகிறது.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்று பாட்டு அருமையாக கேட்டிருக்கிறோம். இது, நிற்பது நிற்பதாகவே இருக்காது. ஒன்று சேர்ந்திருந்தது ஒன்றி இருக்காது. வாழ்நாள் மாறி மாறி சென்று கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக காலனும் நம் வீடு தேடி அழையா விருந்தாளியாக வருவான் என்று வார்னிங் கொடுக்கிறதைப் பாருங்கள்.

‘நின்றன நின்றன நில்லா’ என உணர்ந்து,
ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க-
சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன்
வந்தது வந்தது, கூற்று!உரை”

சேதி வந்துவிட்டது. மன்னார்சாமி மண்டையைப் போட்டுவிட்டார் என்று. ஓடுகிறார்கள் உறவினர் அவன் வீட்டுக்கு.அவன் பெருமை அருமைஎல்லாம் பேசி, அவனைத் தூக்கிக் கொண்டு காட்டில் புதைத்தோ எரித்தோ காரியம் முடிந்து விட்டது. பிறகு?
எல்லோரும் குளித்து சாப்பிட்டு, சாம்பாரில் உப்பு கொஞ்சம் என்று சொல்லி இன்னும் கொஞ்சம் வாழைக்காய் கேட்டு வாங்கி வயிறு நிரம்ப உண்டு சாப்பிட்டு சாப்பிட்டு சாப்பிட்டு (உண்டு உண்டு உண்டு) களிப்போரே, மன்னார்சாமி வீட்டு வாசலில் ”டொண் டொண் டொண்” என்று அடித்த தம்பட்டம், நம் வீட்டு வாசலுக்கும் வரப்போகிறது என்பது ஞாபகம் இருக்கட்டும் என்கிறது இந்த நாலடி பாடல்.

”கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற,
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும், மணம் கொண்டு, ஈண்டு,
‘உண்டு, உண்டு, உண்டு’ என்னும் உணர்வினான்-சாற்றுமே,
‘டொண் டொண் டொண்’ என்னும் பறை.உரை”

ஆமாம். எனக்கு அம்மா அவள். என்னை பெற்று வளர்த்தாள். இப்போது இல்லையே. அவள் தாயைத் தேடிக்கொண்டு சென்று விட்டாளே . அவள் அவள் தாயைத் தேடி, அவளின் தாய் அவளுக்கும் தாயானவளைத் தேடி…..
இவ்வுலகம் இப்படித்தான் நிறைய பேரை அளிக்கிறது, மறைக்கிறது… புரிந்து கொண்டு நிலையானவளைத் தேடுவோமே..

எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு,
தனக்குத் தாய் நாடியே சென்றாள்; தனக்குத் தாய்
ஆகியவளும் அதுஆனால், தாய்த் தாய்க்கொண்டு,
ஏகும் அளித்து, இவ் உலகு.உரை

இன்னும் நிறைய நாலடி படிப்போமா?

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s