Sambho mahadeva deva – Marga bandhu stotram

Courtesy: Sri.GS.Dattatreyan

அப்பய்ய தீக்ஷிதரின் கல்வி, அனுபூதி முதலியவற்றைக் கண்டு பொறாமையுற்ற சிலர் அவர் மீது சில கொடியவர்களை ஏவினர். கொடியவர்கள் தம்மை மடக்க எண்ணியதை அறிந்த தீக்ஷிதர் பின்வரும் ஐந்து சுலோகங்களால் பரமேஸ்வரனைத் துதித்தார். பரமேஸ்வரன் மார்க்க ஸஹாயனாக வந்து, அந்தக் கொடியவர்களை விரட்டியடித்தார்.

சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹாதேவ தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

பாலாவநம்ரத்கிரீடம் பால நேத்ரார்ச்சிஷா தக்தபஞ்சேஷுகீடம்
சூலாஹதாராதிகூடம் சுத்த மர்த்தேந்துசூடம் பஜே மார்கபந்தும் (சம்போ)

திவ்யமான கிரீடத்தைத் தரித்தவரும் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவரும் சூலத்தால் எதிரிகளை வதைத்தவரும் சந்திரனைத் தலையில் தரித்தவரும் வழித்துணைத் தெய்வமாக விளங்குபவருமான மார்க்கபந்துவை வணங்குகிறேன்.

அங்கே விராஜத்புஜங்கம் அப்ரகங்காதரங்கா பிராமோத்தமாங்கம்
ஓம்காரவாடீகுரங்கம் ஸித்தஸம்ஸேவிதாங்க்ரிம் பஜே மார்கபந்தும் (சம்போ)

பாம்பை ஆபரணமாக அணிந்தவர், கங்கையைத் தரித்தவர், ஓங்காரத் தோட்டத்துக்கு மான் போன்றவரும்(பிரணவப் பொருளானவரும்). சித்தர்களால் வணங்கப்பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை உடையவரும் வழித்துணைத் தெய்வமாக…..

நித்யம் சிதாநந்தரூபம் நிஹ்நுதாசேஷலோகே சவைரிப்ரதாபம்
கார்த்தஸ்வராகேந்த்ரசாபம் க்ருத்திவாஸம் பஜே திவ்யஸந்மார்கபந்தும் (சம்போ)

நித்யரும் சிதானந்த ரூபியும், லோக பாலர்களுக்கு எதிரிகளான அசுரர்களின் பிரதாபத்தையும் அழித்தவரும், பொன்மலையை வில்லாக்கியவரும், யானைத் தோலை அணிந்தவரும் வழித்துணைத் தெய்வமாக….

கந்தர்ப்பதர்பக்நமீசம் காலகண்டம் மஹேசம் மஹாவ்யோமகேசம்
குந்தாபதந்தம் ஸுரேசம் கோடிசூர்யப்ரகாசம் பஜே மார்கபந்தும் (சம்போ)

மன்மதனின் திமிரை அடக்கியவர், விஷத்தைக் கழுத்தில் தரித்திருப்பவர், ஆகாசத்தையே கேசமாக உடையவர், வெண்பற்களை உடையவர், கோடி சூரியனுக்கு நிகரானவர், வழித்துணைத் தெய்வமாக….

மந்தாரபூதேருதாரம் மந்தராகேந்த்ரஸாரம் மஹாகௌர்யதூரம்
ஸிந்தூரதூரப்ரசாரம் ஸிந்துராஜாதிதீரம் பஜே மார்கபந்தும் (சம்போ)

மந்தாரம் என்ற கற்பக விருக்ஷத்தைவிட அதிகமாக வேண்டியவற்றை அருள்பவர், மந்தர மலையைவிட அதிக வலுவுள்ளவர், பார்வதி தேவிக்கு அருகில் உள்ளவர், ரிஷபத்தின் மீது ஏறி சஞ்சாரம் செய்பவர், சமுத்திரராஜனைவிட அதிக தீரராக இருப்பவருமான, வழித்துணைத் தெய்வமாக விளங்குபவருமான மார்க்கபந்துவைப் பூஜிக்கிறேன்.

அப்பய்யயஜ்வேந்த்ரகீதம் ஸ்தோத்ர
ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்தஸித்திம் விதத்தே மார்க
மத்யேபயம் சாதுதோ÷ஷா மஹேச (சம்போ)

அப்பய்ய தீக்ஷிதரால் அருளப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை வெளியே செல்லும்போது பக்தியுடன் படிக்கின்றவருக்கு, பரமேச்வரர் காரிய சித்தியையும் வழியில் பயமின்மையையும் நல்குகிறார்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s