Thunder on Shivalinga

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(58)*
🍁 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* 🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🍁 *லிங்கத்தில் விழுந்த இடி.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

கண்ணியாகுமரி மாவட்டத்தில் இருக்கும், பொன்மனை மகாதேவர் கோயிலுக்கும், நந்தீஸ்வரத்துக்கும் இடையில் இருக்கும் சிவலாயம் அது.

அந்த கோயிலுக்குத் தரிசனத்துக்கு வருவோர்களுக்காக கோயில் வாயிலருகிலேயே பூ கட்டி விற்பனை செய்து வந்தாள் ஏழைப் பெண்.

அதோடு அவள் சும்மாயிருப்பதில்லை. பூ மாலைகளை தொடுத்து விட்டபின் இருக்கும் மீதி சமயங்களில், கோயிலுக்குச் சந்தனம் அரைத்துக் கொடுப்பாள்.

கோயிலைச் சுற்றி கிடக்கும் குப்பை கூழங்களை பெருக்கி சுத்தம் செய்வாள். ஆலயவாயிலுக்கு நீர்தெளித்து கோலமிட்டு அழகு செய்வாள்.

வழக்கமாக கோயிலுக்கு வரும் பக்தர்களில் வசதியான ஒருத்தியின் தோழமை பூக்காரிக்கு ஏற்பட்டது.

சுவாமிக்கு அர்ச்சனைப் பொருள்கள் மாலைகள் போன்றவற்றை வழக்கமாகபூக்காரியிடம் வாங்கும் அந்த வசதியானவளும் பூக்காரியும் இருவரும் அன்புக்கு பாத்திரமாகிக் கொண்டார்கள்.

இவர்களின் அன்பான பேச்சுப் பழக்கம் அது நாளடைவில், வசதியானவளிடம் கைமாற்றுப்பணம் கேட்டுப் பெறும் அளவுக்கு வளர்ந்து விட்டிருந்தது.

ஒரு சமயம் அந்த பணக்கார பெண்ணிடம் தனக்கொரு பெரிய கஷ்டம் வந்திருக்கிறது. அதை சீர் செய்ய கொஞ்சம் பணம் கொஞ்சம் அதிகமாக வேண்டியதிருக்கிறது எனச் சொல்லி , பணத்தை பூக்காரியிடம் வசதியானவளும் கொடுத்து விட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கோவிலுக்கு வரும் போது கொடுத்து கழித்து விடுகிறேன் எனச் சொல்லி வாங்கிய பூக்காரியால், இரண்டு மாதங்கள் கடந்த பின்பும் ஒருமுறை கூட பணத்தை க் கொடுத்துக் கழிக்கவில்லை பூக்காரி.

வசதியானவள் கோவிலுக்கும் வரும் சமயத்தில் மட்டும் "என்ன பணம் ஆச்சா" என ஒரு வார்த்தை மட்டுமே கேட்டு விட்டு சுவாமியைத் தரிசிக்கச் சென்று விடுவாள்.

வசதியானவளும் பாவம் கொடுத்து விடுவாள் என்று பொறுமையாக இருந்து வந்தாள்.

சில மாதங்களுக்குப் பிறகு அன்றொருநாள்….பணக்காரப் பெண் வந்து பணத்தைத் திருப்பிக் கேட்டாள்.

இந்தா தருகிறேன், அந்தா தருகிறேன் எனச் சாக்கு போக்கு கூறி வந்தவள்….. இன்று வேறு ஒரு பதிலைச் சொல்ல தயாராக யோசித்து வைந்திருந்ததைக் கூறினாள் அந்த ஏழைப் பெண்.

கைமாற்றுக் கொடுத்த பணக்காரியோ,—என் வீட்டுக்காரருக்குத் தெரியாமல் என் நகையை அடகு வைத்து உனக்குக் கொடுத்தேன். இந்த மாதக் கடைசியில் என் கொழுந்தனாருக்குத் திருமணம்.

அந்தத் திருமணத்திற்கு முன்னதாக நான் நகையை திருப்பிவிட வேண்டும்!’ என் கணவர் திட்டுக்கு என்னை ஆளாக்கிவிடாதே!"….நீ கைமாற்று பெறும் போதே" இதை நம்மால் திரும்பக் கொடுக்க முடியுமா எனத் தெரிந்தல்லவா நீ வாங்கியிருக்க வேண்டும். இப்போது இவ்வளவு சங்கடத்துக்குள் கொண்டு வந்து விட்டாயே?… என இப்போதுதான் பலமாக பேசினாள் பணக்காரி.

அன்றிரவு பூக்காரிக்கு தூக்கம் வரவில்லை.பணக்காரி கண்டிசனாக பேசி சப்தமிட்டது, அதை அனைவரும் கூடி வேடிக்கை பார்த்தது………
அதையெல்லாம் நினைத்து நினைத்து கண் கலங்கினாள். வெகு நேரமாக யோசித்தவள் நாளைக்கு இந்த பதிலைச் சொல்ல வேண்டியதுதான் என தீர்மானித்தவள்…..அப்படியே தூங்கிப் போனாள்.

காலையில் வழக்கத்தை விட சற்று முன்னதாகவே கோயிலுக்கு கிளம்பி வந்தவள், ஆலயத்தைப் பெருக்கி நீர் தெளித்து கோலமிட்டாள்.

ஈசன் முன்பு வந்து நின்றாள்!, ஈசனே!"..எம்பெருமானே!" பணத்தை வைத்துக் கொண்டா அவளுக்கு நான் இல்லையென்று சொல்கிறேன்!, ..இது உணக்கே தெரியாதா?" ஆகையால் உன்னையே நம்பியிருக்கும் நான், *உன்னை நம்பித்தான் ஒரு பொய்யைச் சொல்லப் போகிறேன்.–*……

அதற்கு தண்டனையாக என்னை பழிவாங்கி என் குடும்பத்தை நிம்மதியை கெட்டுப் போகவிட்டு விடாதே!" என பிரார்த்தனை செய்தாள்.

மறுநாள் பணக்காரி வந்து கடனைக் கேட்டாள்.

வாங்கிய பணத்தை கொடுத்து விட்டேனே!" இன்னும் பாக்கியில்லை. வேனுமானால் நோட்டையெடுத்து சரி பார்…என ஒரே போடாக போட்டாள் பூக்காரி.

பணம் கொடுத்துவள் ஒரு நிமிஷம் வாயடைத்துப் போனாள்!. பின் சுதாரித்து, ‘அடியே!, சண்டாளி!",…என்ன இப்படி பொய் சொல்ற….?.. இனி நீ சரிபட்டு வரமாட்ட,.. இரு நான் போய் வீட்டிக்கருகிலுள்ளவர்களை அழைத்து வாரேன்…எனச் சொல்லி கிளம்பிப் போனாள்.

கோயிலில் ஒரே கூட்டம்.. தரிசணத்திற்கு வந்த அனைவரும் பணவிவாதத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பூக்காரி சுவாமியை ஒரு சுற்று சுற்றி வலம் வந்தாள். *"அச்சாளீஸ்வரப் பெருமானே"* கடனைக் கொடுத்து விட்டேன் இது *சத்தியம்* எனசொல்லியவாறு கற்பூரத்தை ஏற்றி அனைத்தாள்.

இதை வேடிக்கை பார்த்த கூட்டம் முழுவதும்…இப்போது பணக்காரியைப் பார்த்து இகழ்ந்து உமிழ்ந்தனர்.

பணக்காரிக்கோ…பலவாறு அவள் மனம் வேதனையித்தது. அவளும் அரப்பளீஸ்வரர் சுவாமி முன் வந்து நின்றாள். ஊரார் அனைவர் முன்பு என்னை பொய்யானவளாக்கி விட்டாயே?", "இவள் செய்த பொய் சத்தியத்தை நீயும் ஏற்று மெளமாகியிருக்கிறாயே?….என் மனம் வெந்து தலை வெடிக்கும் வேதனையை நீயும் பெறுவாயாக!" *உன் தலையில் இடி விழட்டும்* என சபித்தாள்.

அவ்வளவுதான் மேகம் திரண்டது, இருண்டது, மின்னல் வந்துது, இடிவிழுந்தது, மழை பொழிந்தது. நில்லாத இடி இடித்த இடிகளில் ஒன்று சுவாமி சந்நிதியின் விமானத்தில் விழுந்தது. அதனால் லிங்கத்திருமேனியிலும் சிறு பிளவு உண்டானது.

வசதியானவளின் உண்மைத் தன்மையை இறைவன் நிரூபித்துவிட்டான் என்று அங்கிருந்தோர் அனைவரும் அதிசயங் கொண்டார்கள்.

ஏழையாவளின் பிரச்னை தீரவும், வசதியானவளின் பணவிரயத்தையும் ஊர்க்காரர்கள் நிதியாக திரட்டினார்கள்.

ஊர்க்காரர்கள் அந்தப் பணத்தை வசதியானவளிடம் கொடுக்க, அப்பணத்தை பெற்றுக் கொண்ட வசதியானவள், அந்தப்பணத்தை அரப்பளீஸ்வரர் ஆலய திருப்பணிக்கே ஆகட்டும் எனக்கூறி கோயிலைச் சார்ந்த முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்து விட்டாள் வசதியானவள்.

பிளவான லிங்கத் திருமேனியை எடுத்து அருகாகயிருக்கும் தடாகத்தில் வைக்கப் பட்டது.

கருவறையில் புதிய லிங்கம் நிர்மாணிக்கப் பட்டது.

மறுநாள் கருவறையைத் திறக்க பிளவுபட்ட பழையலிங்கமே காட்சி தந்தது.

பக்தர்கள் அனைவரும் அபிஷேகத்திற்கு வசதியாக பிளவை மூடிக் கொள்"என பிரார்த்திக்க, பிளவு சிறிது சிறிதாக க் குறுகி மூடிக் கொண்டன. பிளவான வடுத் தன்மை மட்டுமே லைசாகத் தெரிகின்றது.

புதிதாக செய்த லிங்கம் புஷ்கரணியில் இருக்கிறது.

*"ஆலகாலம் உண்டனை அன்று உலகைக் காத்திட*

*நீல வானிடி தாங்கினை அபலை துயர் ஓட்டிட,*

*பால னிவனைத் துரத்திடும் பாப வினைகள் அழிந்திட,*

*கால காலனே அருள்வாய் அச்சாளீஸ்வர நாதனே!"*

இந்த சம்பவச் சாட்சியாக இந்தப் பாடல் இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.

இறைவனுக்கு அனைவரும் ஒன்றுதான். ஏழ்மை பக்தானாயிருந்தால் அவனுக்கும் அருள் உண்டு. உண்மைக்கும் அருள் உண்டு.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s