Secularism – Periyavaa

ஓ!…. ஸ்வாமிநாதா!… நீயா?..

தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் பெரியவா கால்நடையாக யாத்ரை பண்ணிக் கொண்டி.ருந்தார்.

அந்தக் காலங்களில் வீடுகளுக்கே மின்ஸார விளக்கு இல்லாத ஸமயம். தீவட்டிகளைப் பிடித்தபடி பக்தர்கள் சிலர் புடைசூழ அந்த ஞானஸூர்யன், எளிமையின் மறு உருவமாக, பூஞ்சை மேனியரானாலும், தபஸ்ஸால் ஜ்வலித்துக் கொண்டு, ஏதோ ஒரு க்ராமம் வழியாக நடந்து கொண்டிருந்தார்.

கொஞ்ச தூரத்தில் வழிகாட்டிக்கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்த பக்தர் குழாம், பெரியவாளிடம் திரும்பி வந்தனர்.

அவர்கள் முகத்திலோ பயங்கர கலவரம்!

“பெரியவா… நாம வழியை மாத்திண்டு நடக்கலாம்.! பக்கத்து க்ராமத்ல.. ஏதோ பயங்கர ஜாதி-மதச் சண்டையாம்.! வெட்டுப்பழி, குத்துப்பழின்னு அலையறாளாம்…!”

பதட்டம் த்வனித்தது அவர்கள் குரலில்!

“அதெல்லாம் ஒண்ணும் நடக்காது…. மேல நடங்கோ!…”

அமைதியாக சொல்லிவிட்டு, தான் பாட்டுக்கு விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டார்.

கூடப் போவோர்க்கோ!…. ஒரே குலைநடுக்கம்!

அடுத்த க்ராமத்துக்குள் நுழையும் முன்னேயே, ஒரு குண்டர் கும்பல் இவர்களை எதிர்கொண்டது.!

ஒவ்வொருத்தர் கையிலும் வெட்டரிவாள், குண்டாந்தடி, ஸூரிக்கத்தி, கம்பு !

பெரியவாளுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தவர்களுடைய கால்கள் அவர்கள் அறியாமலேயே பின்னறித்தன.

அதற்குள் அந்த குண்டர் கூட்டத்தின் தலைவன் போலிருந்தவன், தன் கூட்டத்தைக் கையமர்த்தி விட்டு, ஒரு லாந்தர் விளக்கோடு பெரியவா அருகில் வந்து, லாந்தரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, பெரியவாளின் திருமுகத்தை தர்ஶித்தான்.

‘ஸூர்யனுக்கே காட்டும் நீராஜனம்’ என்று பகவத்பாதர், ஸௌந்தர்யலஹரியில் வர்ணித்தது போல் இருந்திருக்கும்!

அடுத்த க்ஷணம்….. அவன் முகம் ப்ரகாஶமானது ! வாயெல்லாம் பல்லாக மலர்ந்தது!

“ஓ!! ஸ்வாமிநாதா!! நீயா!!! எங்கப்பா… இந்தப் பக்கம்? அடடா! இவங்களப் பாத்து, ஒங்கூட வந்தவங்க யாரும் பயப்பட வேண்டாம்-ன்னு சொல்லு! ஒன்னோட உத்தரவு எதுவானாலும் சொல்லு, நாங்க நிறைவேத்தி வெக்கறோம் !”…

அங்கேயே விழுந்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினான்!

பெரியவா முகத்திலும் ஒருவித ஸ்னேஹபாவம்! மலர்ந்த சிரிப்பு!

கூட இருந்த பக்தர் குழாமுக்கும், அவனுடைய கூட்டத்துக்கும் ஒரே ஆஶ்சர்யம்!

என்னது இது?

அவனுடைய குண்டர்கள் கூட்டமும், தலைவன் எவ்வழியோ, அவ்வழியாக, உடனேயே அரிவாள், கத்தி கபடாவை எல்லாம் கீழே போட்டுவிட்டு, அந்தந்த இடத்திலேயே விழுந்து நமஸ்காரம் செய்தனர்.

பெரியவா மலர்ந்து அழகாக சிரித்துக் கொண்டே, அவனிடம் பரிவும் அன்பும் வழியக் கூறினார்….

“ஒங்க ‘இமாமை’ நா… பாக்கணுமே! அழைச்சிண்டு வரியா?..”

“இரு! இதோ, வரேன்!”

ஊருக்குள் ஓட்டமாய் ஓடினான்.

பேராஶ்சர்யத்தில் மூழ்கி, வாயைப் பிளந்து கொண்டு, அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள், அவனுடைய அடியாட்கள் அத்தனை பேரிடமும் பெரியவா சொன்னார்…

“நானும், அவனும்…… க்ளாஸ்மேட்ஸ் ! ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸ் ! அவன் ஒரு முஸ்லீம்…”

ஒரு ஸ்கூல் படிக்கும் பாலனின் அவஸ்தைக்குப் போனமாதிரி, மகிழ்ச்சியுடன் சொன்னார்.!

அத்தனை பேரும் இந்த நட்பு, எளிமை, கபடு இல்லா அன்பு கொண்ட பால்ய நண்பர்களைப் பார்த்துப் பேச்சின்றிப் போனார்கள்.

அந்த முஸ்லீம் friend-க்கு, தன் பள்ளித்தோழன் கிடைத்துவிட்டான்! அன்றைய friend ஸ்வாமிநாதன்தான், இன்றைக்கு “ஜகத்குரு” என்பதெல்லாம் ஸத்யமாக அவன் மனஸில் ஏறவேயில்லை!

கள்ளமில்லா பால்ய ப்ரேமை மட்டுமே இருவரிடமும் ஜ்வலித்தது!

கொஞ்ச நேரத்தில் இமாம் என்ற முஸ்லீம் பெரியவர் வந்து, பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்.

பெரியவா அங்கிருந்தோருக்கு, குர்ஆனிலிருந்து சில வரிகளை எடுத்துச் சொல்லி, அன்பையும், ஸஹோதரத்வத்தையும் இஸ்லாமிய மதமும் எத்தனை முக்யமாகக் கருதுகிறது என்று அழகாக விளக்கினார்.

இமாம் முதற்கொண்டு, அங்கிருந்த அத்தனை பேரும் ஒரு இனம் புரியாத அன்பில் திளைத்தனர்.

அந்தக்ஷணம் முதல், ஆயுதங்களுக்கு அந்த க்ராமங்களில், வேலை இல்லாமல் போனது!

பெரியவா, பரிவாரங்களோடு தங்குவதற்கு, அடுத்த க்ராமம் எல்லா விதத்திலும் வஸதியாக இருந்ததால், அன்று அந்த க்ராமத்தில் இருந்த அத்தனை பேரும், ஜாதி-மத-இன-மொழி பேதமின்றி, பெரியவாளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, அடுத்த க்ராமம் வரை வந்து வழியனுப்பினார்கள்.

“Secularism ” என்ற வார்த்தைக்கு ஸரியான அர்த்தம் புரியாமல் சிலரும், நன்றாகப் புரிந்தும், ஸுய லாபத்திற்காகவும், பப்ளிஸிட்டிக்காகவும் அதைத் தவறாக ப்ரயோஹப்படுத்தி, ஸ்வதந்த்ரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை ப்ரிடிஷ்காரனை விட கேவலமாக, நம் இந்தியாவை சின்னாபின்னமாகச் சிதைத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், ந்யூஸ் சானல்களும், பத்திரிகைகளும் இனியாவது புரிந்து கொள்ளட்டும். திருந்தட்டும்.

‘பிறப்பால் ஜாதியும் மதமும் இல்லை’ என்று சொல்லுபவர்கள், ‘பிறப்பால் தமிழர், தெலுங்கர், ராஜஸ்தானி…. என்று மொழியாலும், தமிழினம் என்று இனத்தாலும் உரிமை கொண்டாடுவது மட்டும் எப்படி பொருந்தும்?

அன்பு மட்டுமே மதங்களின் அடிப்படை, ஆணிவேர். உண்மையான அன்பை மற்றவர்களிடம் செலுத்தும் போது, ஒவ்வொருவரும் தங்களுடைய மதங்களின் rules & regulations எல்லாவற்றையுமே sincere-ஆக follow பண்ணவும் முடியும்; பரஸ்பரம் அழகாக புரிந்து கொண்டு எந்தவித த்வேஷ மனப்பான்மையும் இல்லாமல் இருக்கவும் முடியும் என்பதை வாழ்ந்தே காட்டியவர், நம் பெரியவா!

“இதோ….. ஸன்யாஸம்! த்யாகம்! அப்பழுக்கற்ற பேரன்பு! அவ்யாஜ கருணை! ஸத்யம்! “என்று இன்னும் பல கல்யாண குணங்களை பெரியவா மாதிரி உண்மையான மஹான்களுக்கு அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதில் ஒன்று “இதோ! Secularism!..”.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s