Thirupparaithurai temple


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
(22)
🌿 சிவ தல அருமைகள் பெருமைகள். 🌿
”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
🌿 திருப்பாராய்த்துறை. 🌿
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

இறைவன்:
தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்.

இறைவி: ஹேமவர்ணாம்பாள், பசும் பொன்மயிலாம்பாள்.

தீர்த்தம்: காவிரி.

தலமரம்: பராய் மரம்.

சோழநாட்டுத் தென்கரைத் தலங்களாகிய 128 தலங்களுள் மூன்றாவதாகப் போற்றப்படுகிறது.

இருப்பிடம்:
கரூர்– திருச்சி இருப்புப் பாதையில் உள்ளது.

எலமனூர் புகைவண்டி நிலையத்தில் இரங்கிச் செல்லலாம்.

கரூரிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது.

பெயர்க் காரணம்:
பராய் மரக்காட்டில் சிவன் எழுந்தருளியதால் பராய்த்துறை எனப்படுகிறது.

தாருகாவனம் என்றும் பெயருண்டு.

(பராய் மரம், சமஸ்கிருதத்தில் தாருகா விருக்ஷம் எனப்படும்.)

தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர் -1–ல் ஒரே ஒரு பதிகமும்,
அப்பர் -5–ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.

கோவில் அமைப்பு:
முன்மண்டப வாயிலின் மேலே ரிஷபாருடர் சிற்பம் சுதையால் ஆனது.

கோவில் ஒன்றறை ஏக்கர் நிலப்பரப்பளவு கொண்டவை.

உள்ளே அமையப் பெற்ற
ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டவையாகும்.

இதன் இடப்பக்கமாய் குளம் இருக்கிறது.

வலப்பக்கமாய் அமையப்பெற்றிருக்கும் கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கப்பள்ளி எனும் பெயரில் கல்விச்சாலை அமைந்திருக்கிறது.

முகப்பில் விநாயகர் காட்சியருள அவரை வணங்கி உள் புகுகிறோம்.

செப்புக் கவசத்தால் உருவாக்கப்பட்ட கொடிமரம் உள்ளது.

இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்ந்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இதை நந்தி மண்டபம் என்றே கூறுவர்.

இங்கிருக்கும் தூண்களில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உருவங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் இருக்கின்றன.

வெளிப்பிரகாரத்தில் விநாயகரும். தண்டபாணியும் உள்ளார்கள்.

அதற்கடுத்த கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டவை.

உள்ளே நுழைந்ததும், நேரே கிழக்கு நோக்கிய மூலஸ்தானத்தில் ஈசன் சந்நிதி கொண்டுள்ளார்.

உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்த கன்னியரும், அறுபத்து மூவரின் திருமேனிகளும் இருக்கின்றன.

அடுத்து சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சபூதலிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, மயிலேறிப் பன்னிரு கையும் கொண்டு திகழும் சண்முகர் சந்நிதிகள் உள்ளன.

நவக்கிரகங்களுள் சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனமுள்ளது.

பைரவரும் இருக்கின்றார்.

கோஷ்ட மூர்த்தமாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோற்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர்.

சண்டேஸ்வரரும் சந்நிதி கொண்டுள்ளார்.

சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற அழகுடன் வேலைப்பாடமைந்த தூண்கள் காட்சியளிக்கிறது.

பரந்த கல்லால் மரவேலைப்பாடுடன் காண முடிகிறது.

நடராஜர் சந்நிதி கொண்டிருக்கிறார்.

துவாரபாலகர்களைத் தரிசித்த பின் மூலவரைத் தரிசிக்கலாம்.

அம்பாள் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள்.

அம்பாள் இருக்கும் முன் மண்டபத்தின் தூணில் ஊர்த்தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற்பமும் உள்ளன.

தல அருமை:
இறைவன் பிட்சாடனாராய் சென்று, தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி, அவர்களுக்கு அருள் புரிந்த சிறப்பையுடைய தலம் இந்தத்தலம்.

இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

முதல் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இந்தத் திருக்கோயில்.

அதன் பின்பு நாட்டுக் கோட்டை நகரத்தாரார்களால் திருப்பணியும் நடைபெற்றது.

வருடந்தோறும் சூரியனின் கிரகணங்கள் பெருமான் மீது படும் சூரிய பூஜை நிகழ்கின்றது.

இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் முதலியோர் பூசித்து வரங்கள் பலவும் பெற்றுள்ள தலம்.

பிட்சாடனராக வந்த சிவன் உற்சவர் வடிவில் இருக்கின்றார்.

முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது.

இதன் கீழேயே நின்று கொண்டு, சிவலிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் கிரக தோஷம் குறையப் பெறுகிறதாம்.

வைகாசியில் பிரம்மோற்சவம் நடக்கும் போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.

அவருடன் அம்பாள் கூட வருவதில்லை.

இது வித்தியாசமான வைபவமாகும்.

இத்தலத்தின் அருகே உள்ள காவிரி ஆற்றை அகண்ட காவிரி என அழைக்கின்றார்கள்.

இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் காவிரி, கொள்ளிடம் என இரண்டு நதிகளாகப் பிரிந்து விடுகின்றன.

கல்வெட்டுக்கள்:
83-கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

முதற்பராந்தகன், ராஜகேசரி வர்மன், சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான், கிருஷ்ண தேவமகாராயர் ஆகியோர்களது காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

கல்வெட்டில் இத்தலம் உத்தம சீலச் சதுர்வேதி மங்கலத்துத் திருப்பாராய்த்துறை என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.

இறைவன் பெயர் பாராய்த்துறை மகாதேவர் என்றும், பாராய்த்துறைப் பரமேஸ்வரன் என்றும் குறித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

திருவிழா:
வைகாசி விசாகத்தில் பத்து நாட்களுக்குப் பெருவிழாவாக நடத்தப் பெறுகின்றது.

ஐப்பசி துலா நீராடலும், அகண்டகாவிரியில் சென்று சுவாமி தீர்த்தம் கொடுப்பதும் சிறப்பானது.

பூஜை
சிவாகம முறையில் நான்கு கால பூசை.

காலை 8.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு. தாருகாவனேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாராய்த்துறை & அஞ்சல்–639 115
கரூர் மாவட்டம்.

தொடர்புக்கு:
லடக்ஷ்மி நாராயணன் அர்ச்சகர், லக்ஷ்மணன்.
0431– 2614063
94863 09495

திருச்சிற்றம்பலம்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s