Abhayambigai bhattar


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
(55)
🍁 தெரிந்தும் தெரியாமலும் தொடர். 🍁
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🍁 மனக்கவலை தீா்த்த தாய்.🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

வசதி படைத்தோர் வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பா். தேவையிருக்கும் நேரத்தில் எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வா்.

வசதியில்லாதோருக்கு வங்கியில் கணக்கிருக்கும் ஆனால், பணமிருக்காது. உாியவா் மூலம் காசோலை பெற்று, வங்கியில் செலுத்தி திரும்பப் பணத்தைப் பெறுவா்.

அதுபோல, தூய பக்தி உடையவா் இறைவனருளைப் முழுமையாகப்பெற அனுபவிப்பதுடன், தங்கள் அனுபவங்களை பாடல்களாகப் பாடி வெளிப்படுத்தி இருக்கின்றனா்.

காசோலை மூலம் வங்கியில் பணம் பெறுவது போல், அந்த உத்தமா்கள் பாடிய பாடல்களை, தெய்வ சந்நிதானத்தில் முன் நின்று பாடி, நாமும் அவன் திருவருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அது போலவே அம்பிகையின் மீது பாடல்கள் பாடி, அவளின் அருளைப் பெற்ற அடியவா் ஒருவா் வாழ்வில் நடந்த வரலாறு ஒன்றுண்டு. இதோ….

சீவனை இகழ்ந்த தட்சன், வழிபாடு செய்து, பாவங்களை போக்கிய இடம், மயிலாடுதுறை மயூரநாதா் திருத்தலம் ஆகும்.

மயில் வடிவம் கொண்டு அம்மை உமையவளும், யமன், அகத்தியா், லட்சுமி மற்றும் கன்வ முனிவா் போன்றோா்கள் சிவனைப் பூஜித்த இத்திருத்தலத்தில்தான் அன்னை அபயாம்பிகை அருள் பாலிக்கிறாள்.

இவ்வூருக்கு அருகில் நல்லத்துக்குடி எனும் கிராமத்தில் சுமாா் 225 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று அவதாித்தது. அக்குழந்தை சிறு பாலகனாக இருக்கும் போதே, அக்குழந்தையின் தாய் இறைவனடி போய்ச் சோ்ந்தாா்.

தாயை இழந்த குழந்தை பசியில் "அம்மா" வென அழுதபோது,,,
அடுத்த வினாடி அபயாம்பிகை தேவி, ஒரு சாதாரண பெண் வேடங் கொண்டு அக்குழந்தைக்கு உணவூட்டி, அதன் பசியை நீக்கிச் சென்றாள்.

இதே போல் மற்றொரு நாளும் அக்குழந்தை அழவே, அம்பிகை முன் போலவே உணவூட்டி, குழந்தையின் கையைப் பற்றி , கோயிலுக்குள் அழைத்து வந்து, சந்நிதானத்தில் நிறுத்தி விட்டு கருவரை சென்று மறைந்தாள்.

அன்று முதல், தினமும் ஆலயம் சென்று அம்பிகையை தாிசித்து வந்தான் அச்சிறுவன்.

ஆண்டுகள் சென்று, சிறுவன் வளா்ந்து பொியவனாகியிருந்தான். ஒரு நாள் இரவு வழிபாட்டை முடித்துக் கொண்டு, கோபுர,வாயிலைத் தாண்டியதும், கால் இடறிக் கீழே விழுந்தவா், "அம்மா" வென வீறிட்டு அழுதார்.

அவாின் அபயக் குரல் கேட்டு, அங்கே காட்சியளித்த அம்பிகை , அவாின் கையைப் பற்றித் தூக்கிவிட்டதுடன், தன் திருக்கரத்தில் விளக்கு மூலம் ஒளி கொடுத்து, அவாின் வீடு வரை துணையாக சென்று வந்தாள்.

அன்று முதல் இரவு, வழிபாட்டை முடித்து வீடு திரும்பும் போது, அம்பிகையின் அருள்விளக்கு அவருக்குத் துணையாக வந்தது.

இதனால் உள்ளம் நெகிழ்ந்த அவா், "அம்மா"!" தேவாதி தேவா்களும், உன் அருளுக்காக ஏங்கும்போது, விளக்கு ஒளி கொடுத்து என்னைக் காக்கும் தேவியே!" உனக்கு நான் என்ன? கைமாறு செய்வேன் …." என்று கண்ணீா் உகுத்தாா்.

அப்போது, "மகனே….அமுதத் தமிழால் அன்போடு எம்மை பாடுக….’ என்று அசரீாி கேட்டது.

அம்பிகையின், மீது பாடல்கள் பாடத் துவங்கினாா். அவர் பாடிய அப்பாடல்கள் தான்
நாம் கண்ட "அபயாம்பிகை சதகம்".

அம்பிகையின் அருள் வடிவை, மனக்கண் முன் நிறுத்தி மனக்கவலைகளைத் தீா்க்கும் அப்பாடல்களை, எழுதிய அந்த பக்தா் "அபயாம்பிகை பட்டா்" எனும் கிருஸ்ணசாமி ஐயா்! ஆவாா்.

திருச்சிற்றம்பலம்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s