Ratnagirisar temple


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
(20)
🌸 சிவ தல அருமைகள், பெருமைகள், 🌸
””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
🌸 திருவாட்போக்கி. 🌸
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

இறைவன்:
ரத்னகிரீசர், அரதனாசலேஸ்வரர், மாணிக்க ஈசர், முடித்தழும்பர்.

இறைவி:
சுரும்பார்குழலி.

தலமரம்: வேம்பு.

தீர்த்தம்: காவிரி.

சோழநாட்டின் காவிரி தென்கரையில் அமையப் பெற்றுள்ள 128 தலங்களில் 1- வதாகப் போற்றப்படுகிறது.

இருப்பிடம்:
குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது.

நேர் எதிராக, ஈங்கோய்மலை ( வடகரைத் தலம்) உள்ளது.

தற்போது வழக்கில் ஐயர்மலை என்று அழைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம்:
ஆரிய மன்னன், பெருமான் முடியில் வாளை வீசியபோது, அவ்வாளைப் போக்கிய காரணத்தால் வாள்போக்கி (வாட்போக்கி) என்று பெயர்.

இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் போன்றவை வேறு பெயர்களாகும்.

தேவாரம் பாடியவர்கள்:
அப்பர் 5-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

கோவில் அமைப்பு:கோவில் மலை மேல் மிக உயரத்தில் இருக்கிறது.

ஆயிரத்து நூற்று நாற்பது படிகளைக் கடந்து ஏறிச் ஏறிச் செல்ல வேண்டும்.

அடிவாரத்தில் இருக்கும் பிரதான விநாயகரைத் தரிசித்து ஏறத் தொடங்க வேண்டும்.

அடிவாரத்திலும் நால்வர் சந்நிதிகள் இருக்கின்றன. அலங்கார வளைவுகள் அழகாக அமைக்கப் பெற்றிருக்கின்றன.

முதலில் ஏறும் 750 படிகளைத் தாண்டிய, பின்பு உகாந்தம் படி வருகிறது.

அவ்விடத்தில் விநாயகர் சந்நிதியும், சுரும்பார் குழலி சந்நிதியும் உள்ளன.

அவற்றை வலமாக வந்து மேலேறிச் சென்றால் வாட்போக்கி நாதர் சந்நிதியை அடையலாம்.

கோயிலுனுள் நுழையும்போது முதலில் தட்சிணாமூர்த்தி சந்நிதியைப் பார்க்கிறோம்.

அடுத்து செல்ல,…உள் புகவும் ரத்னகிரீசர் தரிசனத்தைப் பெறலாம்.

ரத்னகிரீசர், மாணிக்கஈசர் ஆகிய பெயர்கள் சுந்தரரால் பாடப்பட்ட பெயர்களாகும்.

மன்னன் வந்து வழிபட்டதால் ராஜலிங்க மூர்த்தி என்ற பெயரும் உண்டு.

நடராஜா், சிவகாமி, சுப்பிரமணியர், வைரப் பெருமாள் சந்நிதிகளும் உள்ளன.

அன்றாடம் காவிரியிலிருந்து பத்துகுடம் தண்ணீரில் உச்சிகால அபிஷேகம் நடக்கும்.

தல அருமை:
மங்கல மாநகரைச் சேர்ந்த மாணிக்கம் வேண்டி வந்த ஆரிய மன்னன் தன் முடியை இழந்து இறைவன் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்த போது, இறைவன் ஒரு வேதியர் வடிவில் எழுந்தருளி, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி, காவிரி நீரால் நிரப்பச் சொன்னார்.

அது எப்படியும் நிரப்பாமல் இருக்கக் கண்டு, கோபம் கொண்ட அரசன், உடைவாளை ஒச்ச, தன் வாளால் வேதியரை வெட்ட சிவன் ஆரிய அரசனுக்கு மாணிக்கத்தைத் தந்தருளினார்.

மனம் திருந்திய அரசன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான்.

ஆகவே சிவனுக்கு முடித்தழும்பர் என்றும் பெயர்.

சிவலிங்கத்தின் மேற்புறத்தில், வெட்டுப்பட்ட வடுவை இப்போதும் காணலாம்.

தல பெருமை:
இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேடன், முதலியோர் வழிபட்ட தலம்.

மாசி சிவராத்திரி நாளிலும், வைகாசி விசாக நட்சத்திரத்திலும், இருமுறை கீழிலிருந்து மேலாக சூரிய ஒளி, சுவாமிக்கு நேராகயிருக்கும் சாரளத்தின் வழியாக சுவாமி மீது பிரவாகவனப்படுகிறது.

சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பால், தயிராக மாறுவதை இன்றும் காணலாம்.

சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.

இடையன் ஒருவன் சுவாமிக்காக கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் எரிந்து போனதால், இம்மலைக்கு காகங்கள் உலவுவதில்லை.

இதை செவிவழிச் செய்தியாக மக்கள் கூறுகின்றார்கள். ஆகையால் காகம் அனுகா மலை என்பர்.

கடம்பர் கோயில், வாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் முறையே காலை, நண்பகல், அந்தியில் தரிசித்தல் சிறப்புக்குரியவனவாகும்.

அகத்தியர் இங்கு நண்பகலில் தரிசித்து அருள் பெற்றமையால், நண்பகல் தரிசனம் மிகவும் சிறப்புக்குரியது.

இதனாலேயே சுவாமியை மந்தியான சுந்தரர் என்னும் பெயரையும் கொண்டுள்ளார்.

மூலவர் சுயம்பு மூர்த்தமாக அருள்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாளில் எல்ரா நகைகளையும் சார்த்தி அலங்காரம் செய்வர்.

அவ்வலங்காரத்தோடு தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இக்கோவிலில் ஐம்பது கல்வெட்டுக்கள் இருக்கிறது.

ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கும் நடந்த போரில், மேருமலையிலிருந்து பெயர்த்தெடுத்த ஒரு முடியே இத்தலம்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கே இடி பூஜை நடைபெறுவது வழக்கம்.

காஞ்சி மாநகரில், ஆயர்குலத்தில் பிறந்த வயிரப் பெருமாள் எனும் பக்தர் தம் பிரார்த்தனை நிறைவேறியதற்காக இத்தலத்தில் தம் தலையை அறுத்து பலி கொடுத்தார்.

அவரை இங்கே காவல் தெய்வமாக வைத்துப் போற்றுகிறார்கள்.

திருவிழாக்கள்:
சித்திரை மாதம் அஸ்த நட்சத்திரம் தொடங்கிப் பத்து நாட்களுக்குப் பெரு விழா நடக்கிறது.

கார்த்திகை சோமவாரங்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

பூஜை
வாதுள ஆகம முறையில் மூன்று கால பூசை.

காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு, ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில்,
(வாட்போக்கி) ஐயர்மலை,
சிவாயம் அஞ்சல்,
(வழி) வைக நல்லூர்,
கரூர் மாவட்டம்– 639 124

தொடர்புக்கு:
சாமிநாத குருக்கள்.
04323—245522,
04323—245359

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s