Other names of Ramanujar

இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் ஆயிரமாவது அவதார ஜெயந்தி காணவிருப்பவர் பகவத் ராமானுஜர், ராமானுஜர் என்ற பெயர் மட்டுமல்லாது இன்னும் சில திருநாமங்களால் இவர் அழைக்கப்படுகிறார்/ அறியப்படுகிறார் . அவை என்ன::::

அவரது திருதகப்பனார் திருத்தாயார் விரும்பியபடி தாய்மாமன் பெரிய திருமலைநம்பி சாத்திய திருமநாமம் —"இளைய ஆழ்வார்’ (பிறந்த குழந்தை ஸ்ரீ ராமனது இளைய சகோதரன் லக்ஷ்மணனை ஓத்திருந்ததாகையால் , தாய்மாமன் பெரிய திருமலை நம்பி தனது உள்ளத்தில் நிலைநிறுத்திய திருநாமம் ராமானுஜன் (ராமனுடைய அனுஜன்-அனுஜன் என்றால் இளைய சகோதரன் என்ற பொருள் சமஸ்கிருதத்தில் )

அவரது அவதார தலமான ஸ்ரீபெரும்புதூர் உறை ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் சாத்திய திருநாமம் …."பூத புரீசர்"
(அக்காலங்களில் ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி என்னும் பெயருடன் அறியப்பட்டது )

திருவரங்கம் நம்பெருமாள் சாத்திய திருநாமம் …."உடையவர்"…. திருவரங்கத்துக்கு வந்திருந்த ஸ்ரீ ராமானுஜரின் கைங்கர்ய சிறப்பைக் கண்டு சிலாகித்த ஸ்வாம்மி நம்பெருமாள் இவர் அதாவது ஸ்ரீ ராமானுஜர் பூவுலகான லீலாவிபூதிக்கும் மேலுலகமான (வைகுண்டம் என அழைக்கப்படும்) நித்ய விபூதிக்கும் உடையவர் என அருளிச்செய்தார். மேலும் இவர்க்கு மட்டுமல்லாது இந்த ஸ்வாமியை பின் பற்றுபவர்க்கும், அவரது அடி தொழுவோர்க்கும் அவரைச் சார்ந்தவர்க்கும் கூட வைகுண்ட ப்ராப்தி உண்டென்று அருளிச் செய்து, ஸ்ரீ ராமானுஜருக்கு "உடையவர்" என்ற திருநாமத்தை சூட்டினார்.

அத்திகிரி அருளாளன் தேவராஜப்பெருமான் (காஞ்சி தேவ்ராஜப்பெருமாள்) சாத்திய திருநாமம்…."எதி ராஜர்" முனிவர்க்கெல்லாம், சன்யாசிகளுக்கெல்லாம் அரசர் என்று பொருள் தொனிக்க காஞ்சி தேவராஜப்பெருமாள் ஸ்ரீ ராமானுஜருக்கு "யதி ராஜர்", என்ற திருநாமத்தை சாற்றினார்.

திருமலை வாழ் திருவேங்கமுடையான் சாத்திய திருநாமம்….."தேசிகேந்த்ரன் "

"ஸ்ரீ பாஷ்ய காரர்"…… தான் முன்னும் பின்னும் பார்த்திராத ஆனால் பெரும் மதிப்பு வைத்திருந்த ஆளவந்தாரின் இறுதி விருப்பத்திற்கிணங்க , பெருமாளின் ஆசியுடனும் ஆழ்வார் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி யை வழிகாட்டியாய் வைத்துக்கொண்டு பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் (பாஷ்யம்) எழுதித் தந்தமையால் பாஷ்யகாரர் என்ற திருநாமம் வழங்கப்பட்டது.
சிறந்த ஸ்ரீபாஷ்யம் அருளியதைக் கண்டு காஷ்மீரம் சாரதாபீடத்திலுள்ள சரஸ்வதி தேவியால் உகந்து சூட்டப்பட்ட திருநாமம். என்றும் கூறுவர்…

______________
இவை தவிர ராமானுஜர் சம்பந்தப்பட்ட ஐந்து ஆச்சார்யர்கள் அவருக்கு சாத்திய திருநாமங்கள் வருமாறு:::::

காஞ்சி தேவராஜப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்ட அவரது முதல் ஆச்சார்யர் மற்றும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து ராமானுஜரை ஸ்ரீ வைஷ்ணவன் ஆக்கிய மஹாபூர்ணர் என்ற திருநாமம் கொண்ட பெரியநம்பி

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s