Pooja for cow

கோ பூஜை செய்யும் முறை
கோ பூஜை அதன் சிறப்பு ..

கோ என்றால் உலகம். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்று பதிவுடன் அழைக்கிறோம். ஆதிசங்கரரிடம் `அன்னை போன்றவள் யார் என்று கேட்டதற்கு பசு என்று சொல்லி அதனைப் பெருமைபட வைத்திருக்கிறார்.

இந்த சக்தி உடைய பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த `கோமாதா பூஜை’ செய்யும் முறையைப் பார்க்கலாம். வீட்டில் பசு இருப்பவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய வேண்டும் என்பதில்லை.

பசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு வாங்கி, இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம். `பூஜைக்காக பசுவைத் தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. முதலில் பசுவுக்குரிய அருகம்புல், அரிசி, வெல்லக் கலவை, வாழைப்பழம், தேங்காய், தாம்பூலம், பால் சாதம், பூமாலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பசுவை கன்றுடன் அழைத்து வந்து, குளிக்க வைத்து, கொம்புகளில் மஞ்சள் பூசி மாலை அணிவிக்கவும். அருகம்புல்லை கொடுத்து வீட்டுக்கு அழைப்பது போல ஸ்வாகதம்,

ஸ்வாகதம், கோமாதா ஸ்வாகதம்,

ஸ்வாகதம், மகாலஷ்சுமி ஸ்வாகதம்,

ஸ்வாகதம், அஷ்டலஷ்சுமி

-என்று 3 முறை கூற வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, சுமுகஸ் சைக தந்தஸ்ச ஹேரம்ப ஸ்கந்த பூர்வஜ -என்று சொல்லி அதற்கு 16 மலர்கள் வைக்கவும். அல்லது `பாலும் தெளிதேனும்’-என்று தொடங்கும் பாடலைப் பாடி, மலர் போட்டு, பழம், கல்கண்டு படைத்தும் ஆரத்தி காட்டலாம்.

பசுவின் முன் ஒரு பலகை வைத்து, அதன் மேல் காமாட்சி தீபம் (அ) கமல தீபம் என்கிற ஐஸ்வர்ய தீபத்தை (பொதுவாக இந்த தீபத்தை கேரளா, ஆந்திரா மற்றும் வடநாடுகளில் ஏற்றுவார்கள். நடுவில் குழாய் வடிவில் இருக்கும்) ஏற்றி வைக்கவும். எட்டு விதமான வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு, முதலில்-`காமதேநேர: ஸமுத் பூதே ஸர்வதாம பலப்ரதே த்யாயாமி ஸெளரபேயி த்வாம் வ்ருஷபத்னி நமோஸ்துதே என்று 3 முறை சொல்லவும்.

அடுத்தது, இந்த பூஜையின் முக்கிய அம்சமான அங்க பூஜை. கீழே தந்துள்ள மந்திரங்களை உச்சரித்தபடியே பசுவின் உடற்பாகங்களில் குங்குமத்தை இட்டு பூஜிக்க வேண்டும்.

இரண்டு கொம்புகளின் நடுவே ஓம் சிவரூபாய நம: வலக்கொம்பில்-பிரம்மனே நம:

இடப்புறக் கொம்பில்-விஷ்ணுவே நம:

வலக்காது நுனியில்-தீர்த்தேப்யோ நம:

இடக்காது நுனியில் – ஸ்தாவர ஐங்கமேப்யோ நம:

மூக்கு நுனியில் – ஜ்யேஷ்டாய நம:

வலது கண்ணில் – சூர்யாய நம:

இடக் கண்ணில் – சந்த்ராய நம:

பற்களில் – மாருதாய நம:

தாடையில் – வருணாய நம:

மேலுதடு – யட்சேப்யோ நம:

கீழுதடு- யமயே நம:

கழுத்தில் – இந்த்ராய நம:

குளம்பு நுனி – நாகேப்யோ நம:

குளம்பு நடுவே-கந்தவர்வேப்யோ நம:

குளம்பு மேற்பாகம்-அப்சரேப்யோ நம:

கால்களில் – கணேப்யோ நம:

நாடிகளில் – நேத்ரேப்யோ நம:

மடியில் – ப்ருகுப்யோ நம:

மடி நுனியில் – சாத்தேப்யோ நம:

இதயத்தில் -உமாதேவ்யாய நம:

வயிற்றில் – பூமிதேவ்யாய நம:

யோனியில் – மகாலஷ்மியே நம:

தோள்களில் – தேவேப்யோ நம:

பிறகு பிடித்து வைத்த கோமயத்தில்-பிரும்மனே நம:

கோ ஜலத்தில் – விஷ்ணுவே நம:

நெய்யில்- ருத்ராய நம:

தயிரில் -ஈஸ்வராய நம:

பாலில் – சதாசிவாய நம:

– என்று சொல்லியபடி அர்ச்சனை செய்யவும்.

பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,

ஓம் சுரப்யை ச வித்மஹே காமதாத்ரேய தீமஹி தன்னோ தேனு:

ப்ரசோதயாத்: என்று சொல்லவும்.

அடுத்து குங்குமம், மலர்களால்..

ஓம் காமதேனவே நம:

ஓம் பயஸ்வின்யை நம:

ஓம் ஹவ்யகவ்ய பலப்ரதாயை நம:

ஓம் வ்ருஷபத்ன்யை நம:

ஓம் சௌரபேயை நம:

ஓம் மகாலக்ஷ்மியை நம:

ஓம் ரோகிண்யை நம:

ஓம் ஸ்ருங்கிண்யை நம:

ஓம் க்ஷíரதாரிண்யை நம:

ஓம் காம்போஜ ஜனகாயை நம:

ஓம் பப்ல ஜனகாயை நம:

ஓம் யவன ஜனகாயை நம:

ஓம் மாஹேயை நம:

ஓம் நைசிக்யை நம:

ஓம் சபலாயை நம:

ஓம் ஸ்ரீம் காமதேனவே நம:

– என்று சொல்லி அர்ச்சிக்கவும்.

பிறகு தூப, தீபம் காட்டி, பொங்கல், அரிசி, வெல்லக் கலவையை நிவேதனம் செய்து, தேங்காய், பழம் படைத்து அதற்கு ஆரத்தி செய்து, பிறகு அவற்றை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவும். பசுவை மூன்று முறை வலம் வந்த பிறகு,

கோமாதாவே… எங்கள் குலம் தழைத்திடவும் ஏற்றம் பெற்று வாழ்ந்திடவும் என்றும் பக்கத்துணையிருக்க திருமகள் அருளைக் கூட்டி நீடியே எட்டாத செல்வமும் எட்டவைப்பாய் பசியும் பிணியும் போக்கி விடும் பாலைத் தந்திடும் மாதாஜி செல்வத்திருவே போற்றியம்மா! என்று கூறி கோமாதாவைச சுற்றி வந்து விழுந்து வணங்கி அதன் பின்பகுதியை தொட்டு வழிபடவும். கோமாதாவின் வாழ்த்தினால் வளங்கள் பெருக வாழ்த்துகிறோம்.

பசு உடலில் வேதங்கள்……….

கோமாதா என்று போற்றப்படும் பசுவுக்கு ரிக்வேதம் பின்பக்கமாகவும், யஜீர்வேதம் நடுப்பகுதியாகவும், சாமவேதம் கழுத்தாகவும், இஷ்டம் பூர்த்தம் ஆகியன இரு கொம்பு களாகவும், அதன் உரோமங்கள், சகல சுத்தங்களாகவும், சாந்தி கர்மம் புஷ்டி கர்மம் ஆகியவை கோமய மாகவும், வேதம் வகுத்தெடுத்த நான்கு வருணங்களே பசுவின் பாதங்களாகவும், சுவாஹா, ஸ்வதா, வஷம், ஹந்த என்ற நான்கும் அதன் காப்புகளாகவும், இவற்றின் மூலம் தேவர்களையும் மானிடர்களை யும் ஊட்டி வளர்க்கிறாள் நம் கண் முன்னே தோன்றும் பெண் தெய்வமான கோ மாதா.

லலிதா சகஸ்ர நாமத்தில் கோமாதா……..

அம்பிகை வழிபாட்டில் அம்பாளின் ஆயிரம் நாமங்களைக் கொண்டு போற்றிப்பாடலாக உயர்ந்த சக்தி வேத மந்திரமாக விளங்குவது லலிதா சகஸ்ரநாம போற்றித் திருமாலை. அதில் 605-வது நாமாவளி வரியாக வருவதுதான் கோமாத்ரே நம என்பது. இதன் பொருள் கோமாதா என்னும் தாய் போல விளங்குபவளே என்பதாகும். ஆம்! கோமாதாவை வழிபடாத இலக்கியங்களோ, புராணமோ இக்கலியுகத்தில் இல்லை என்றே சொல்லலாம்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s