Pambaati sidhar

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(38)*
🌸 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌸
🌸 *பாம்பாட்டிச் சித்தர்.* 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பாம்பென்றால் படையே நடுங்கும் என அனைவரும் சொல்வோம்.

ஆனால் ஒரு மனிதவுருவைக் கண்டு பாம்புகளே நடுங்கியது என்றால் அது இந்த பாம்பாட்டிச் சித்தரைத்தான்.

பாம்புகளிடம் பிடிப்பது, அவற்றைப் படமெடுத்து ஆட்டு விப்பது, அவற்றின் விஷத்தை சேமிப்பது, இவையெல்லாம் இந்த சித்தரின் விரும்பத்தகுந்த பொழுது போக்கான விஷயம்.

எவ்வளவு நீளவான பாம்பானாலும், கடுமையான விஷம் கொண்டவையாக இருந்தாலும் அப்பாம்புகளைப் பிடித்து அதன் விஷத்தைக் கக்க வைத்து விடுவார் இந்த பாம்பாட்டிச் சித்தர். அதனால்தான் இவரை பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் ஏற்பட்டது.

வனத்தில் பாம்புகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. இருக்கும் பாம்புகள் இவரைக் கண்டதும் கதிகலங்கி புதருக்குள் ஓடியொளிந்தது.

பாம்புகளுடன் சகஜநிலையில் பழகி வந்த இவருக்கு, பாம்புகள் இவரைத் தீண்டினால் அவ்விஷத்தை முறியடிக்கும் மூலிகைகள் இவருக்கு அத்துபடி.

இதனால் இவரிருக்கும் இடங்களில் பாம்புக் கடிக்கு சிறந்த வைத்தியம் ஒழுகியவராக இருந்தார். எனவே பொது ஜனங்களும் வேறான வைத்தியர்களும் இவரிடம் தொடர்பு இருந்த நிலையிலேயே இருந்தனர்.

விளையாட்டுக்காக இவர் பிடித்த பாம்புகளால், இப்போது அது ஆராய்ச்சி வரை நீள்கொண்டன. இதன் ஆராய்ச்சிக்காகவே விஷ வைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றை மருதமலைப் பகுதியில் தொடங்கினார்.

ஒருநாள் சில வைத்தியர்கள் ஒன்றாகச் சேர்ந்து, பாம்பாட்டிச் சித்தரை அணுகினர். அவர்கள் பாம்பாட்டிச் சித்தரிடம்……………

"மருதமலையான இவ்விடங்களில் மிகப் பெரிய அரியதான நவரத்தினப் பாம்பு ஒன்று வசிக்கிறதென்றும், அந்தப் பாம்பின் நஞ்சு பெரிய பெரிய சித்து வித்தைகளுக்கு திறனானது என்றும், அதனின் மாணிக்கம் அதிக விலைக்கு மதிப்புள்ளது என்றும், மேலும் முக்கியமாக அதன் விஷம் மருந்திற்குத் தேவைப்படுகிறது என்றும், எனவே அந்தப் பாம்பைப் பிடித்துக் கொடுத்தால் மிகவும் உபகாரமாக இருக்கும் என்றும் கூறி அவரிடம் எப்படியாவது அநதப் பாம்பைப் பிடித்துத் தரும்படி சொன்னார்கள.

இளம் காளையரான பாம்பாட்டிச் சித்தர் அவ்வரியதான பாம்பைப் பிடிக்க வனத்திற்குள் விரைந்தார். பாம்பாட்டி சித்தரின் வருகையினை, இவரின் மோப்ப வாசனையைத் தெரிந்து கொண்ட பாம்புகள் அத்தனையும் தங்களை வளைகளுக்குள் புகுந்து பாதுகாப்பாகிக் கொண்டன.

காட்டிற்குள் வந்த பாம்பாட்டி சித்தரின், கண்களுக்கு பாம்புகள் எவையும் கண்ணில் படவில்லை. இடுக்கு புதர் புதராக தேடி அலைந்தார். பாம்புகள் எவையும் கண்ணிற்கு சிக்காததால், கண்ணில்படும் புற்றுக்களையெல்லாம் இடித்தார். இப்படியெல்லாம் இடிக்கப்பட்ட வனத்தின் புற்றுக்கள் முழுமையும் காலியாகிப் போனது.

அந்த நேரத்தில் திடீரென வனம் பூராவும் எதிரொலிக்கும்படியான சிரிப்புச் சத்தம் கேட்டது.

தான் நின்றுகொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி எண்திசைகளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். சிரிப்பு வந்த சுவடு காணப்படவில்லை.

*"சிரித்தவர் யார்"* *யாராகிலும் என்னொதிரில் வாருங்கள்.* என பாம்பாட்டி சித்தர் ஆக்ரோஷமாக கூவினார்.

இவரின் ஆக்ரோஷ கூச்சலுக்கு எதிரே வராமல்,………

ஒரு *ஒளி* மட்டுமே தெரியத் துவங்கின.

*ஒளி யார்? …நாளை…….*

திருச்சிற்றம்பலம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(39)*
🍁 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🍁
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🍁 *பாம்பாட்டிச் சித்தர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
உயர்ந்து ஒளிந்த ஒளிபிரவாகம் அகன்று விரிந்தன.

அப்போது ஒளி வீசும் திருமேனியுடன் சட்டைமுனி சித்தர் இளைஞன் எதிரே தோன்றினார்.

அவரைப் பார்த்த இளைஞன், "யார் நீங்கள்?….எங்கிருந்து வருகிறீர்கள்?…அலறிய சிரிப்பு ஏன் சிரித்தீர்கள்? என்று கேட்டான்.

தம் முன்னே ஒளிப்பிரவாகத்துடன் தெரிந்த சித்தர், யாரென்று பாம்பாட்டி சித்தருக்குத் தெரியவில்லை.

"இது நான் கேட்க வேண்டிய கேள்வியப்பா. இந்தக் காட்டில் வசிப்பன் நான். நாட்டிலிருந்து வந்தவன் நீ. காரணத்தை நீதான் சொல்ல வேண்டும். அதைவிட்டு நீ என்னை கேள்வி கேட்கிறாய்.

"பாம்பு பிடிக்கும் வைத்தியன் வேறெதுக்கு காட்டிற்கு வருவான். பாம்பு பிடிக்கத்தான் வந்தேன். அதற்குள் அலறிச் சிரித்து பாம்புகளெல்லாம் ஒடி ஒளியச் செய்து விட்டீரே!.

காரியம் என்னால் கெட்டதா? சித்தர் பரம்பரையில் மிகவும் சிறிய வயதுடையவன் நான். எவ்விதப் பயனும் இல்லாத உன் செயல்களையும் கண்டேன். அதனால் சிரிக்கத் தோன்றியது. சிரித்தேன். நீ செய்யும் காரியம் எந்த விதத்தில் உனக்கு உபயோகப்படும்?….

"எந்த வித பலனுக்காகவா இதை செய்கிறேன்!..உலக நன்மைக்காகத்தான் இதை செய்கிறேன். அதுவும் மருத்துவத்திற்காகவே இந்த நவரத்தின பாம்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இதைப் போய் பலனற்ற செயல் என்று சொல்கிறீர்களே! என கேட்டான்.

நீ அந்த நவரத்தின.பாம்பைத் தேடி அலைகிறாய் என்பது எனக்குத் தெரியும்! நீ ஒரு திறமை படைத்தவன் என்பதும் எனக்குத் தெரியும்……அது சரி!…..உன் உடம்புக்குள்ளேயும் ஒரு நவரத்தின பாம்பு.ஒன்று இருக்கிறதே" அது தெரியுமா உனக்கு!…..

அதனை ஆட்டுவிப்பவன் ஒரு அறிவாளி! அதை அடக்கி ஆள்பவன்தான் சித்தர்கள். அதனால்தான் கூறுகிறேன். வெளியில் திரியும் பாம்புகளை பிடிக்காதே! அதை விட்டுவிடு. உன் உடம்பிற்குள் இருக்கும் பாம்பை முதலில் அடக்க வழியைப் பாரு!

இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்து கொண்டிருக்காதே!"

இவ்வளவையும் கேட்ட பாம்பாட்டி வைத்தியர், பயமேயறியாத அவர் சித்தர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.

"நாளெல்லாம் காடுகாடாக பாம்புகளைத் தேடி வீணே அலைந்திருக்கிறேனே! இவர் கூறியது போல எனக்குள்ளிருக்கும் பாம்பை அறியாதிருந்திருக்கேனே!?" மீண்டும் அவரை நோக்கி….. தயவு செய்து தாங்கள் அதனைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்"என பணிவோடு கூறினார்.

அவனைக் கனிவோடு பார்த்த சித்தர் அவனுக்குள் ஏற்பட்ஞ பக்குவ நிலையை உணர்ந்து விளக்கமளிக்கத் தொடங்கினார்.

"அப்பா!…இறைவன் படைப்பில் அற்புதமாகக் கிடைத்தது இந்த உடம்பு. அவ்வுடம்புக்குள்ளே ஆதியிலிருந்தே ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு *குண்டலினி* என்று பெயர்.

உள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பு அறிவை மழுங்க வைக்கிறது. அறியாமை இருளை பெருக்குகிறது. இவ்வறியாமையால் நுட்பங்களைப் பெற முடியவில்லை. மனித துயரத்திற்குக் மூலதாரமாய் உடலுக்குள் தலைகீழாசனம் புரியும் இந்தப் பாம்பின் உறக்கந்தான் காரணம்.

பரமனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அதன் காரணமாக தூங்கும் குண்டலினி என்னும் பாம்பு விழித்துக் கொள்ளும். சிவத்தில் ஒடுங்கும். அதனால் ஆன்மா சுதந்தரமடைந்து அறிய வேண்டியவைகளை அறிந்து ஆனந்தமயமாக்கும். எனச் சொல்லி முடித்தார் சட்டைமுனி எனும் அந்த சித்தர்.

குராநாதரே!…நீங்கள் விழிப்படையச் செய்த வழியே உத்தமமானது!…எனவே இவ்வழியை விட்டு விலகமாட்டேன் என்று கூறி சித்தரை வணங்கியெழுந்தான்.

இவன் பக்குவப்பட்டு விட்டான் என அறிந்த அந்த சித்தர், அவனுக்கு அருள்புரிந்து விட்டு உடனே அங்கிருந்து மறைந்தார்.

இளைஞனான சித்தன் தன் முன்னாலிருந்த ஆத்திமரத்தடியில் போய் அமர்ந்தான்.

சித்தரின் அருள் வாக்குப்படி யோக சிந்தனையை தூண்ட முடிவெடுத்தார்.

யோகம் கை கூடியது.

குண்டலினி கிளர்ந்து அசைந்தாடியது.

இருள் கவ்விய அவர் கண்களுக்குள் இப்போது உலகம் முழுமையும் ஒளிமயமானதாக தோன்றியது.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(40)*
🍁 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🍁

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s