Tirumoolar sidhar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(32)*
☘ *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* ☘
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
☘ *திருமூலர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
மிதவும் உத்தமாக வாழ்ந்த சித்தர் திருமூலர்.

திருமூலர் கயிலாய பரம்பரையைச் சேர்ந்தவர்.

சித்தர்களில் முதலாமவரும், முதன்மையானவருமான சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர்.

இவரைக் குறித்து பெரியபுராணத்தில் சேக்கிழார் நிறைய கூறியிருக்கிறார்.

திருக்கயிலாலயத்தில் நந்தி தேவரது திருவருள் பெற்ற மாணவர்களுள் ஒருவராய் அட்டமா சித்திகளைக் கைவரப் பெற்ற இச் சித்த மாமுனிவர் திருக்கயிலாயத்தில் இருந்து புறப்பட்டு தென்திசை நோக்கிச் செல்லும் வழியில்….
திருக்கேதாரம்,
பசுபதி,
நேபாளம்,
அவிமுத்தம் (காசி),
விந்தமலை,
திருப்பரப்பதம்,
திருக்காளத்தி,
திருவாலங்காடு ஆகிய தலங்களுக்குச் சென்று பின்னர் காஞ்சி நகர் அடைந்து பின்னர்….திருவதிகை, தில்லை என்று காவிரியில் நீராடி அதன் பின்னர் திருவாவடுதுறையினை அடைந்து இறைவனை தரிசித்து விட்டுச் செல்கையில் அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு மாடுகள் மேய்க்கும் குடியில் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவர் இறந்து நிலத்தில் விழுந்து கிடக்க பசுக்கள் அனைத்தும் அவனைச் சுற்றி வந்து இதறி அழுதன.

இக் காட்சியினைக் கண்ட சித்தர்பெருமான் அப்பசுக்களின் துயர் நீக்க எண்ணித் தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்தி விட்டு கூடு விட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியில் தமது உயிரை அந்த இடையனது உடலில் செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

மூலன் எழுந்ததும் பசுக்களெல்லாம் துயர் நீங்கி அன்பினால் அவனது உடம்பை நக்கி, மோந்து மிகுந்த களைப்பினால் துள்ளிக் கொண்டு புல் மேயச் சென்றன.

அது கண்டு மகிழ்ந்த திருமூலர் (மூலன்) பசுக்கள் செல்லும் வழியே சென்று பின்னர் அவைகள் தங்கள் இல்லங்களுக்குச் சென்றதும் தான் மட்டும் தனித்து நின்றார்.

அப்பொழுது மூலனுடைய மனைவி பொழுது சாய்ந்த பின்னரும் தன் கணவர் இன்னும் வந்து சேராதது.கண்டு அவனைத் தேடிக் கொண்டு வந்தவள் மூலன் வடிவில் இருந்த சித்தரைக் கண்டு வீட்டிற்கு அழைத்தாள்.

மூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல, அவனின் விதி முடிந்து இறந்து விட்டான் என்றார்.

தன் கண் எதிரே நின்றுகொண்டிருக்கும் தன்கணவனே உன் கணவன் இறந்து விட்டேன் என்று கூறுவதைக் கேட்டு மனம் பொறுக்காதவளாய், அவ்வூரிலுள்ளோரை அழைத்து தன் கணவனுக்குள் ஏற்பட்டிருக்கும் மாறுபாட்டைக் கூறி அழுகிறாள்.

அங்கிருந்தோர் மூலனுக்கு அறிவுரை கூறி அவளோடு வீடு திரும்புமாறு கூற மூலன் உடம்பிலிருந்த சித்தர் தன் நிலையை அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் நம்பாமல் போகவே மறுபடியும் அந்த உடலை செயலற்றதாக்கி உண்மையை நிரூபித்தார்.

கண்ணெதிரே நிகழ்ந்த இந்த அதிசயத்தையும்,மூலனுடைய உடலில் ஏற்பட்டிருந்த மாற்றத்தினையும் கண்ட ஊர்ப் பெரியவர்கள் மூலன் மனைவிக்கு ஆறுதல் கூறி அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தன்னுடைய பழைய உடலைத் தேடிச் சென்ற சித்தர் அங்கு தன் உடலைக் காணாததால் மூலனுடைய உடலிலேயே நிரந்தரமாகத் தங்கி திருவாடுதுறை கோயிலை அடைந்து யோகத்தில் வீற்றிருந்தது, உலக மக்களின் நன்மையில் பொருட்டு ஞானம், யோகம், சரியை, கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் கூறும் திருமந்திரம் என்னும் நூலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடினார்.

பின்னர் இந்நூல் நிறைவடைந்ததும் அதாவது 3000 ஆண்டுகளுக்குப் பின் இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சதுரகிரி தலபுராணம் கூறும் திருமூலர் வரலாறாகும்.

பாண்டிநாடு சித்து வித்தைகளுக்குப் பேர் போனது. அதனை ஆண்ட தவேத மன்னனின் பட்டத்தரசியான சுந்தரவல்லிக்கு வீரசேனன் என்ற புதல்வனும், இரண்டாவது மனைவியான சந்திரவதனிக்கு தர்மார்த்தன், சூரசேனன், வஜ்ராங்கதன் என்ற புதல்வர்களும் இருந்தனர்.

குருகுல வாசம் முடிந்தபின் உரிய வயதில் நான்கு இளவரசர்களுக்கும் திருமணம் நடந்தது.
வீரசேனன்–குணவதி, தர்மார்த்தன்–தன்மதி, சூரசேனன்–சுகமதி,
வஜ்ராங்கதன்–மந்திரவல்லி தம்பதிகள் நால்வரும் இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்ந்து வந்தனர்.

முதுமையடைந்த தவேதன் பட்டத்தரசியின் மகனான வீரசேனனுக்குப் பட்டம் சூட்டி அரசனாக்கினான். அரசனும் நல்ல விதமாக ஆட்சி புரிந்து குடிகளை நல்ல முறையில் காத்து வந்தான்.

இரவு நேரத்தில் வழக்கும்படி மாறுவேடம் பூண்டு நகர சோதனைக்குக் கிளம்பிய மன்னன் வீரசேனன் திரும்பி வந்தபோது குணவதி திடுக்கிட்டாள்.

பார்வை மங்கிய நிலையில் உடல் முழுவதும் வியர்வை வெள்ளத்தில் நனைய துவண்டு போய் மஞ்சத்தில் படுத்து விட்ட மன்னனிடம் பதறிய நிலையில் காரணம் கேட்ட மனைவிக்கு பதில் சொல்ல முடியவில்லை. வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது.

அரண்மனை வைத்தியருக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் வருவதற்குள்மன்னனின் தலை துவண்டு சாய்ந்து விட்டது. அரண்மனை வைத்தியப் பட்டாளங்கள் ஓடி வந்து மன்னரை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

மன்னனின் மனைவி குரல் வெடிக்கக் கதறினாள். அவளின் அழுகையொலி அந்த அரண்மனையையும் தாண்டி ஒலித்தது. அந்த நடுநிசியில் பாண்டிய நாடு சோகத்தில் புலம்பித் தவித்தது.

அப்போது ஆகாய வீதியில் போய்க் கொண்டிருந்தார் திருமூலர்.

அவர் காதுகளில், இந்தப் புலம்பல் ஒலி அறைந்தாற் கேட்டது. அவர் உடனே கீழே நோக்கினார்………………..

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(35)*
🌼 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌼
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🌼 *திருமூலர்.* 🌼
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கணவரின் சரீரத்தோடு இருந்த சித்தபுருஷர், உடல் கூடு தாவிய விதத்தைக் குணவதியிடம் கூறி.முடித்தார்.

குணவதிராணியின் சிந்தனை வேறு கோணத்தில் பயணித்தது. நம் கணவரோ இறந்து விட்டார். அவர் உடலில்தான் சித்தபுருஷர் தங்கியுள்ளார். இந்த உண்மை நம்மைத்தவிர வேறு யாருக்கேனும் தெரியாது.

இவர் நம்மை விட்டு பிரிந்து போய் அவருடலுக்குள் மீண்டு சென்றுவிட்டால், தன் நிலைமை மோசமாகி விடும். ராணி அந்தஸ்து ஒழிந்து போகும். விதவைக் கோலம் பூண வேண்டும். பின்பு, மன்னரின் சிற்றன்னை மகனான தர்மார்த்ததன் மன்னனாகி விடுவான். பின் தன் சுகபோக வாழ்வு எல்லாம் நாசமாகி விடும். தன் வாழ்க்கையும் கேள்விக் குறியாகி விடுமே? ….என்ன செய்வது????

ஏன்?.. எதற்கு என்று கேள்வியெழுப்பாமல் தான் சொன்னதை அப்படியே செய்யும் அரண்மனை ஆட்கள் சிலரை அழைத்தாள்.

நீங்கள் சதுரகிரி மலைக்குச் செல்லுங்கள். அங்கேயிருக்கும் குகைக்குள் சென்று, உயிரற்று கிடக்கும் சித்தரின் உடலையெடுத்து எரித்து விடும்படி கட்டளையிட்டு விட்டு, இது இரகசியமாக இருக்க வேண்டிய செயல் என்பதனையும் அறிவுறுத்திக் கூறியனுப்பி வைத்தாள்.

இவர்கள் குகைக்குச் சென்றிருந்த நேரம்….குருநாதரின் உடலுக்கு காவலாய் இருந்தவன் அருகில் சென்று வர போயிருந்தான்.அந்த நேரத்தில் ராணியின் காவலாளிகள் குகைக்குள் புகுந்து விட்டனர்.

அரண்மனை ஆட்களும் இராணி சொன்னதை சித்தரின் உடலைத் தேடிக் கண்டுபிடித்து எரித்து விட்டனர்.

குகைக்குத் திரும்பி வரும்முன் குருநாதரின் உடலுக்கு காவலிருந்த சீடனான குருராஜன் வருடக்கணக்கில் காத்திருந்து குருவின் உடலை வெளியில் நீங்கிப் போய் திரும்ப வருவதற்குள், ராணி சொன்னபடி அனைத்தையும் செய்து முடித்து வெளியேறி விட்டனர் அரண்மனையாட்கள்.

சித்தரின் காயகல்ப தேகம் அழிந்தது. இனிமேல் சித்தர் நம்முடன் இருப்பார் என்று சந்தோஷம் கொண்டாள். இருப்பினும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல், இயல்பாக இருப்பது போன்ற கவணத்துடன் திருமூலருடன் இருக்க ஆரம்பித்தாள்.

ஆனால், ராணி நடவடிக்கைகள் சித்தருக்கு சந்தேகத்தை ஏற்பட்டு உணர்த்தியதை உணர்ந்தார்.

ஒரு நாள் வேட்டைக்குப் போவது போல் கிளம்பிச் சென்று, சதுரகிரி குகைக்குச் செல்லும் வழியில் பயணித்தார்.

வழியில் சீடன் குருராஜன் எதிர்படவும், அவனையும் உடன் அழைத்துக் கொண்டு குகைக்குள் புகுந்தனர்.

காய கல்ப உடம்பைக் காணவில்லை. ள்புறம் முழுவதும் துழாவியும் உடல் காணப்படாது போகவே……சித்த முனிவர் சிறிது நேரம் சிந்தித்து உணர……

குணவதி துரோகம் இழைக்கப் பட்டதை தெரிந்து கொண்டார். இருப்பினும் வீரசேனனின் உடலோடு இருக்கும் தான், அவளுக்கு துரோகம் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தார்.

அன்றிலிருந்து குணவதிக்கு தத்துவ உபதேசம் செய்வதை நிறுத்தினார்.

அவளுடன் பேசுவதைக் குறைத்தார்.

குணவதியோ எவ்வளவோ முயன்று முயர்ச்சித்தும் சித்தருடன் இயல்பான இணக்கத்தோடு இருக்க……அதுக்கு பலன் இல்லாமற் போனது.

சித்தரோ….முக்கியமானவர்களை அழைத்து….எனக்கு உடல்நிலை சீராக இல்லை. ஆதலால், நான் சிலகாலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். இனி மகாராணியே நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்றும் பிரகடனம் கூறினார்.

சித்தஅரசரின் இந்த பிரகடன முடிவு அரசியைத் திடுக்கிடச் செய்தன. திருமூலரிடம் வந்து… *"ஏன் இந்தத் திடீர் முடிவு?….* என்று கேட்டாள்.

குணவதியின் கேள்விக்கு சித்தர் பதிலேதும் சொல்லாமல் புண்ணகை செய்தார்.

இனியும் சித்தரிடம் உண்மையை மறைத்தால், தனக்கு விபரீதம் ஏற்பட்டு விடும் என்றென்னி, தன்னோட சுயநலச் செயல் முழுவதையும் கூறிவிட்டு தன்னை மன்னிக்கும்படிக் கண்ணீர் விட்டு அழுதாள்.

குணவதியின் கண்ணீரைக் கண்ட சித்தர் மனம் இரங்கினார் திருமூலர். அவள் நிலையில் இருந்து பார்த்தால் அவள் செய்தது சரியானதுதான் எனத் தோன்றும்.

எந்த மனைவிதான் தன் கணவனைப் பிரிந்து வாழ ஆசைப்படுவாள்.

இன்னும் சிலகாலமே உயிருடன் இருக்கப் போகும் நிலையை ப் பெற்றிருக்கும் இவளை நாம் ஏன் நோகடிக்க வேண்டும் என எண்ணியவாராய்,………..

சரி!…..மன்னித்தேன்!……அழுகையை நிறுத்து! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! என்றார்.

*மீண்ட வாய்ப்பு குணவதிக்கு கிடைத்ததா?*

*அல்லது, வீரசேனனின் சரீரத்தோடயேயே நாளைக் கழிக்க எண்ணம் கொண்டாரா திருமூலர்?.*

*குணவதியையும் மன்னித்தும் விட்டாரே?*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(36)*
🌤 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌤
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🌤 *திருமூலர்.* 🌤
■■■■■■■■■■■◆■■■■■■■■■■■■■
குணவதிக்கு சித்தர் ஆறுதலளித்துப் பேசினார்.

ராணியும் தயங்காமல் சித்தர் என்றன்றும் வீரசேனன் உடலுடன் தன்னுடனேயே தங்கி விட வேண்டும் என்ற ஆசையில்தான் என்றைக்கும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று கேட்டாள். சித்தரும் புன்னகையுடன் அவள் கோரிய வரத்தை அளித்தார்.

சித்தர் வாக்கு எப்போது பொய்த்தது?….. இனி வீரசேன மகாராஜா தன்னை விட்டுப் போக மாட்டார் என மகிழ்ந்தாள் ராணி.

ஒருநாள் நள்ளிரவு நேரம். ….ஊரே ஊமையாகிக் கிடந்தது. வீரசேனத் திருமூலர் யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார்.

சதுரகிரி மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் பயணித்த அவர் பொழுது புலரும் நேரம் கரைந்தது. மலையிடையோடிய நதியில் நீராடினார்.

நீராடி முடித்துக் கரையேறியவர், அங்கை ஒரு காட்சியைக் கண்டார். ஆம்.!..அம்மலையில் ஓரிடத்தில் அந்தணர் ஒருவர் தியானித்திலிருப்பது போல் அமர்ந்திருந்தார்.

அவருகே வந்த வீரசேனத் திருமூலர், கற்சிலையாகிப் போனதுபோல இருக்கும் அந்தணரைப் பார்த்து வியந்து, அவரின் முகவோட்டத்தைக் கூர்ந்து கவணித்தார். அந்தணரின் கண்கள் நிலைகுத்தி நிலைத்துப் போயிருந்ததைக் கண்ணுற்றார்.

"மூச்சு இயங்கவில்லை என்பதை அறிந்தார். அவரின் சரீரத்தை தொட்டார்.!

அவ்வளவுதான்…..அந்தணர் ஒருபுறமாய் சாய்ந்து விழுந்தார்…."ஆம்! ….எப்போதோ அந்தணர் இறந்து விட்டிருந்தார்.

அந்தணர் யாரென மூலத்தால் உணர தன்னை அவ்வளையத்துள் நுழைந்தார் வீரசேனதிருமூலர்.

ஜம்புகேஸ்வரம் என்னும் திருவானைக் கோயிலில் இருந்த ஜம்புகேஸ்வரர் என்னும் அந்தணன் பிராணாமப் பயிற்சியை மேற்கொள்வதற்காக சதுரகிரிக்கு வந்து, குருவின் துணையில்லாமல் முரட்டுத்தனமானப் பயிற்சியை மேற்க்கொண்டிருக்கிறான். தன்னை அடக்க முயன்றவனை விதி அடக்கச் செய்து விட்டு உயிர்மூச்சு பறந்து போய்விட்டன……

அந்தணரின் உடலுக்குள் புகுந்து விட வீரசேனத்திருமூலர் தீர்மானித்தார். அதற்கிடையே….குணவதிக்குத் தாம் உறுதியளித்த வாக்குரிதி நினைவுக்கு வந்தது.

வீரசேனன் உடலை சிரஞ்சீவித் தன்மை உடையதாக்க நினைத்தார். அப்பொழுதுதானே குணவதி நித்திய சுமங்கலியாக இருக்க முடியும்!.

அரச உடம்பை எங்கே விடலாம் என்று சுற்றிப் பார்த்த போது அங்கிருந்த *"யானை உண்டி"* என்னும் பெருத்த மரம் ஒன்று தென்பட்டது. அந்த மரத்தில் பெரிய பொந்து இருந்தததைக் கண்டார்.

வீரசேனத்திருமூலர் மரத்தை நெருங்கி பொந்துக்குள் நுழைந்து உட்கார்ந்தவர் மன்னர் உடம்பை அங்கேயே விட்டு விட்டு ஜம்புகேஸ்வரம் உடம்பில் பாய்ந்தார்.

*(இது அவருடைய மூன்றாவது கூடு விட்டுக் கூடு பாய்ந்த செயலாகும்.)*

திருமூலர் எழுந்தார். ஜம்புகேஸ்வரத் திருமூலராக எழுந்தார். எழுந்தவர் ஜோதி மரத்தின் பூக்களைப் பறித்தார். பின், சில மூலிகைகளைத் தேடிப் பிடித்தெடுத்து ஆய்ந்து வந்தார்.

ஜோதிமரத்தின் பூக்களையும் ஆய்ந்த மூலிகைகளையும் சேர்த்துக் குழைய குழைய அரைத்தார். அவை அரைந்து விழுதாகி வந்தவைகளை சேகரித்தார்.

சேகரித்த விழுதைகளைகளுக்கு மந்திர சக்தியை ஏற்றினார். பின் அந்த மந்திர விழுதுக் கரைசலை, மரப்பொந்தில் இருந்த அரசனின் உடலில் தடவினார். மரத்தின் பொந்தான மேற்புரத்தை பட்டைகள், இலைகள், கிளைகளால் மூடியழுத்தினார். பின் சில மந்திரங்களை உச்சரித்தார். அவ்வளவுதான்…மரப்பொந்து இருந்த தடம் காணாமல் போனது.

இனியாரும் இந்த அரசனின் உடலைப் பார்க்க முடியாது. அரச உடம்பு உள்ளிருக்கும் இம்மரம் இனி அரசமரம் என அழைக்கடட்டும் எனச் சொல்லி விட்டு சதுரகிரியில் ஒரு குகைக்குள் புகுந்தார். சாதனைகள் பல செய்து யுக்திகளாக்கி மறுபடியும் தேகத்தைக் காய கல்ப தேகமாக ஆக்கிக் கொண்டார்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(37)*
🍁 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🍁 *திருமூலர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சதுரகிரி மலையில்ச சீடன் குருராஜனுடன் சேர்ந்து இன்னும் பல சீடர்கள் அவரிடம் சேர்ந்தனர்.

சதுரகிரி ஒரு தவச் சாலையாகத் திகழ்ந்தது. ஜம்புகேஸ்வரத் திருமூலர் அவர்களுக்கு நல்வழி காட்டினார். அவர் இன்னும் சதுரகிரியில் இருப்பதாகப் பெரியோர்கள் சொல்லக் கேள்வி!

வீரசேனத் திருமூலரைப் பிரிந்து வருத்தமுற்றிருந்த குணவதி ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு தர்மார்த்தன் தனமதி, ஆரசேனன் — சுகமதி முதலானோருடன் சதுரகிரி மலையில் இருக்கும் ஜம்புகேஸ்வரத் திருமூலரை தரிசிக்கச் சென்றாள்.

ஜம்புகேஸ்வரத் திருமூலர் தாம் யாரென்று அவளுக்குத் தெரியாத நிலையில் அவளது குறையைக் கேட்டறிய அவள் தன்னை விட்டுப் பிரிந்த சித்தயோகியான தன் கணவரைப் பற்றிய விபரம் தமக்குத் தெரிய வேண்டும் என்றும், மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வழி செய்யுமாறும் வேண்டினாள்.

மீண்டும் ஒரு பந்தத்தைத் தொடர விரும்பவில்லை ஜம்புகேஸ்வரத் திருமூலர். அவள் கணவர் தம் தவசக்தியால் அரசமரமாக உருமாறியுள்ளான் என்றும் அந்த அரச மரத்தைப் பூஜை செய்வதனால் அவள் தன் பதி சேவையை செய்ததன் பலனை அடைய முடியும் என்றும் அருளாசி வழங்கினார்.

தான் செய்த சிறு தவறு தன் வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டதை எண்ணி வருந்திய குணவதி அந்த அரசமரத்தை வணங்கி, பல முனிவர்களையும் அங்கு தரிசித்து விட்டுப் பின் நாடு திரும்பினாள்.

மேரு மலைக்கு வடபாகத்தில் மடையை அடுத்திருந்த வனத்தில் திருமூலர் ஒரு யாகம் செய்தார். உலக ஆசைகளைத் துறந்து வினைப் பயன்களையும் விட்டு, தமக்குத் தொண்டு புரிந்த சித்தர்களுக்கும், மார்க்கண்டனுக்கும் கண்ணபிரானுக்கும் உபதேசம் செய்தார்.

*..யடவிடக்கும் சென்று தானும்*
*பண்டுளவு கிருஷ்ண பூபாலனுக்கு*
*பார்தனில் உபதேசம் செய்தார்.."*

கிருஷ்ணன் இருந்த துவாபரயுகத்தில், மகாபாரத காலத்தில் திருமூலரும் இருந்தார் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருமூலர் கயிலாயத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில் மகாநதிக்கரையில் பூரி (ஜெகன்னாதம்) அருகில் துவாரகாபுரி அரசன் கண்ணன் ஒரு வேடனால் கொல்லப்பட்டான்.

பின் அவ்வேடன் கண்ணன் உடம்பை சிதையில் வைத்துக் கொளுத்தி விட்டுப் போட்டான்.

உடனே பெருமழை பொழிய கருகிய கைகால்களை உடைய கண்ணன் உடம்பானது வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டு பூரிக்குப் பக்கத்தில் ஒதுங்கியது.

அவ்வூரார் கண்ணனை இனங்கண்டு அடக்கம் செய்து கோவில் அமைத்தார்கள் என்றும், அதுவே இப்போதைய ஜெகன்னாதர் கோவில் என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் திருமூலரே நேரில் கண்டதாகக் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. புராணங்களிலும், இலக்கியங்களிலும் இல்லாத இச்செய்தியை அகத்தியர் மட்டுமே தருகிறார்.

திருமூலர் எண்ணாயிரம் திருமந்திரங்கள் இயற்றியதாக அகத்தியர் தமது கெளடிய சாகரம் என்னும் நூலில் கூறியுள்ளார்.

அகத்தியர் 12000 முதல் காண்டத்தில் அகத்தியர் இயற்றிய நூலில் காணப்பெறலாம்.

திருமூலர் காவியம் (கிரந்தம்) 8000,
திருமூலர் சிற்ப நூல் 1000,
திருமூலர் ஜோதிடம் 300,
திருமூலர் மாந்திரீகம் 600,
திருமூலர் சல்லியம் 10000,
திருமூலர் வைத்திய காவியம் 1000,
திருமூலர் வைத்தியர் கருக்கிடை 600,
திருமூலர் வைத்தியச் சுருக்கம் 200,
திருமூலர் சூக்கும ஞானம் 100,
திருமூலர் பெருங்காவியம் 1500,
திருமூலர் தீட்சை விதி 100,
திருமூலர் கோர்வை விதி 16,
திருமூலர் தீட்சை விதி 8,
திருமூலர் தீட்சை விதி 18,
திருமூலர் யோக ஞானம் 16,
திருமூலர் விதி நூல் 24,
திருமூலர் ஆறாதாரம் 64,
திருமூலர் பச்சை நூல் 24,
திருமந்திரம் (பெருநூல்) 3000,
திருமூலர் ஞானம் 84,
திருமூலர் ஞானோபதேசம் 30,
திருமூலர் நடுவணை ஞானம் 16,
திருமூலர் ஞானக்குறி 30,
திருமூலர் சோடச ஞானம் 16,
திருமூலர் ஞானம்,
திருமூலர் குளிகை 11,
திருமூலர் பூஜா விதி 41,
திருமூலர் வியாதிக் கூறு 100,
திருமூலர் முப்பு சூத்திரம் 200.

திருமூலர் பன்னிரண்டு மடங்களை நிறுவியுள்ளார். அவருடைய பதினாறு சீடர்களில் காலங்கியும், கஞ்ச மலை சித்தரும் முதன்மையானவர்கள் என்று அகத்தியர் 12000 கூறுகிறது.

திருமூலர் லிங்க வடிவாய் அமர்ந்துள்ள இடம் தில்லைக் திருக்கோவிலிலுள்ள திருமூலர் சந்நிதி என்று திருமூலர் சமாதியில் வீற்றிருக்கும் இடத்தை போகர் தமது ஜனன சாகரம் 312 வது பாடலில் குறிப்பிடுகின்றார்.

*" நா னொன்ற மேலச் சிதம்பரத்தில்*
*நாடி நின்ற திருமூலர் நாட்டத்தானே…."*

திருமூலருக்குப் பின் காலங்கி நாதரின் வழியாக போகரும் அவருடைய சீடர்களும் சித்தர் நெறியை உலகெங்கிலும் பரவச் செய்ததால் அவர்களுக்குத் *"திருமூல வர்க்கத்தார்"* என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

இத்துடன் திருமூலர் சித்தர் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s