Nandeesar sidhar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(18)*
☘ *சிவமய அருளான சித்தர்கள்.* ☘
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
☘ *நந்தீசர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிவகணங்களில் ஒருவராக பார்வதி தேவியின் அந்தப்புரக் காவலராக இருந்தவர் நந்தீசர்.

ஒரு சமயம் பார்வதி தேவி கைலாய மலையை விட்டு கெளரி என்ற பெயரில் சிவனை நினைத்து தவம் மேற்கொண்டிருந்தார்.

பார்வதி தேவியைப் பார்ப்பதற்கு அடிகலன் என்ற மன்னன் ஒருவன் வந்திருந்தான். அந்த சிவ சன்னிதானத்தில் பார்வதி தேவியின் அனுமதியின்றி அடிகலனை நந்தீசர் உள்ளே செல்ல அனுமதித்து விட்டார்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான் நந்தீசரைப் பூவுலகில் சென்று சிலாதர் என்னும் மகரிஷிக்கு மகனாக பன்னிரண்டு வருடகாலம் வசிக்கும்படி சாபமிட்டு விட்டார்.

பூலோகத்தில் சிலாதர்–சித்ரவதி தம்பதியினர் தங்கள் வீட்டிற்கு வந்த சப்தரிஷிகளை உபசரித்து உணவளிக்க முற்படும் போது, பிள்ளை இல்லாத வீட்டில் உணவு உண்ண மாட்டோம் என்று கூறி அவர்கள் மறுத்துச் சென்று விட்டனர்.

மனம் நொந்து போன சிலாதர் பிள்ளை வரம் வேண்டி இறைவனைப் பணிந்து தவம் செய்ய, அவர் முன் சிவபெருமான் தோன்றினார். *நீர் விரும்பும் மகனை அடைவாயாக!"* என்று வரமளித்து மறைந்து போனார்.

சிலாதர் யாகம் ஒன்றை செய்வதற்காக நிலத்தை உழுத போது யாக பூமியிலிருந்து மாணிக்கப் பெட்டி ஒன்று கிடைத்தது.

அவர் அதனைத் திறந்து பார்த்த போது அதனுள்ளே ஜடா முடியுடன் நான்கு கரத்தினை உடைய நந்திதேவர் இருக்கக் கண்டார்.

இதனைக் கண்ட சிலாதர் அதிர்ச்சியடைந்து *"பிள்ளைக்கலி தீர வேண்டினால் இப்படி ஒரு ஜடாமுடி சாமியாரை அளித்து விட்டீர்களே?"* என்று மனவேதனையுடன் இறைவனிடம் வேண்டிட………

*திரும்பவும் பெட்டியைத் திற* என்று இறைவனின் ஆணை ஒலித்தது.

அவர் மறுபடியும் பெட்டியைத் திறந்தார். அதில் அழகான ஆண்குழந்தை ஒன்று இருந்தன.

மனம் மகிழ்ந்த சிலாதர் தம்பதியினர் அந்த அழகிய குழந்தையை அன்புடன் வாரியெடுத்து சீரும் சிறப்புமாக வளர்த்தனர்.

மற்றொரு சமயத்தில் சிலாதர் தவம் செய்து கொண்டிருந்த சமயத்தில்…. *நீ தவம் செய்து பெற்ற பிள்ளை பன்னிரண்டு வயதில் மித்திரர் வருணரால் மரணமடைவான்* என்று அறிந்து மிகவும் கவலை கொண்டனர்.

பெற்றோர்கள் அடிக்கடி இப்படிக் கண்ணீருடன் கலங்கிக் காணப்படுவதைக் காணப் பொறுக்காத மகன் காரணம் கேட்ட போது, *நீ விரைவில் இறந்து விடப் போகிறாயாம்* என்ற தகவலை அவர்கள் சொன்னார்கள்.

இதைக் கேட்டதும் அந்தக் குழந்தை *"நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்!* நான் சிவபெருமானிடம் காரணம் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டதோடு….உடனடியாக சிவபெருமானை நினைத்துக் கடும் தவத்தில் ஈடுபட்டான்.

வரத்தின் வலிமை காரணமாக அதன் முன் தோன்றிய சிவபெருமான், "சிவகணங்களுக்கெல்லாம் தலைமை வகிக்கும் பொறுப்பும், அதிகாரமும், சிவத்தத்துவங்களுக்கு ஆசானாக விளங்கும் சிவஞானாச்சாரியத்துவமும் பெற்று, பித்ரு தேவரின் இதயக்கமலத்திலிருந்து தோன்றிய சயஞ்ஞை இருக்கும் பாக்கியத்தை நீ பெறுவாயாக" என்று நந்தீசருக்கு வரம் தந்தார்.

ஒரு சமயம் நந்தீசர் யாருக்குமே தெரியாத ஒரு இரகசியத்தைத் தன் சீடர்களிடம் கூறி விட்டார்.

வட நாட்டில் கயிலாயம் எனக்குச் சொந்த இடம் வியாசர் எனது தம்பி. தசரதன் என் அம்மான். சந்திர சூரிய குவத்தவர் அனைவரும் எனது உறவினர்கள். தன்வந்திரி என் சீடன். அசுவனி தேவர்கள் எனக்குப் பேரர்கள்.

நான் சிவன் பெற்ற பிள்ளை. உமையவள் எனக்கு அன்னை. சிவனருளால் எனக்குக் கயிலாய சித்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆயுர்வேதத்தை உலகுக்கு அறிவித்த தன்வந்திரி பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரம். திருபாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அமுதகலசத்தோடு தோன்றியவர் தான் தன்வந்திரி.

சிவன் உமையவளுக்குக் கூறிய இரகசியத்தை பரிபாஷையாகச் சொல்லாமல் இப்படி வெளிப்படையாக நந்தீசர் சொல்லி விட்டதால் சித்தர்கள் மற்றும் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானதால் தான் சிவபெருமான் முன்பு மண்டியிட்ட நிலையில் இன்று வரை நந்தீசர் காட்சியாய் இருக்கிறார்.

திருச்சிற்றம்பலம்.
*இத்துடன் நந்தீசரின் சித்த சித்தம் மகிழ்ந்து நிறைவானது. நாளை மற்றொரு சித்தரின் சித்த சித்தத்துடன்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s