Agastiar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(4)*
*🍁சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*🍁
★★★★★★★★★★★★★★★★★★★★★
*(அகத்தியர்)*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சித்தர் என்றும், சித்த வைத்தியம் என்றாலே உடனை நம் அனைவரின் நினைவுக்கு வருபவர் அகத்தியர்தான். இவ்வகத்தியர் வைத்தியத்திற்கு செய்திருக்கும் பணி எண்ணிலடங்கானவையாகும்.

இவரை கும்பமுனி என்றும் கூறுவார்கள். இந்த சித்தர்பிரான் உத்தம சித்தர்களின் தலைமைப்பீடாதிபதி–மகரிஷிகளின் உத்தமபீடம்–சித்த மாமுனி.

கருவிலே தோன்றாமல் தான்தோன்றிப் பிரபுத் தத்துவராக இறைவனருளால் கலசக் கும்பத்தில் சுயம் பிரகாசமாய் தோன்றியவர்.

இன்றைய மிகப் பெரும் மருத்துவ வல்லுநர்களும் விடை காண முடியாமல் தவிக்கும் பல நோய்களுக்கும், மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்திருப்பவர் இவர்!.

இவருடைய தோற்றம் பற்றிப் புராணங்களில் பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது.

தாரகன் முதலான அரக்கர்கள் உலக மக்களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து வர அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்னி முதலானோருடன் பூமிக்கு வந்தான்.

இவர்களைக் கண்ட அரக்கர்கள் கடலுக்குள் சென்று ஒளிந்தனர்.
அவர்களைக் கொல்ல கடல் நீரை வற்றிப் போகும்படி செய்யுமாறு இந்திரன் அக்கினிக்குக் கட்டளையிட்டான்.

ஆனால் இதற்கு அக்னி, கடல் நீரை வற்றச் செய்தால் உலகிலுள்ள அனைத்து நீர்வளங்களும் குறைந்து விடும் என்று கூறி இந்திரனை சமாதானம் செய்தார்.

மறுபடியும் அரக்கர்களின் தொல்லை அதிகரித்தது. அக்னி கடல் நீரை வற்றச் செய்யாததால்தான் இந்த நிலை ஏற்பட்டது.

அன்றே வற்றிப் போகும்படி செய்திருந்தால் இத்துன்பங்கள் தொடர்ந்திருக்காது என்று நினைத்து கோபத்துடன் *"நீ வாயுடன் கூடிய பூமியில் போய் கும்பத்தில் பிறந்து கடல் நீரெல்லாம் குடிக்கக் கடவாய்"* என்று சாபமிட்டான். அதன்படி அக்னி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய்த் தோன்றினார்.

இந்திரனின் வேண்டுகோளின்படி அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட அரக்கர்களை இந்திரன் அழித்தான். அதன்பின் அகத்தியர் நீரைப் பழையபடி கடலுக்குள் விடுத்தனர்.

*அகத்தியர் தோன்றியதற்கான இன்னொரு நிகழ்ச்சி…..*

பூமியில் கடற்கரை அருகே மித்திரா என்பவரும், வருணர் என்பவரும் தங்கியிருந்த சமயம், இந்திரன் சாபத்தால் பூலோகத்திற்கு வந்த ஊர்வசியைக் கண்டனர். அவளது அழகில் தங்கள் மனதைப் பறி கொடுத்த இருவருக்கும் மிகுந்த காமம் உண்டாயிற்று. இதன் காரணமாக ஒருவர் தம் வீரியத்தைக் குடத்திலிட்டார். மற்றொருவர் தண்ணீரிலிட்டார்.

குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் தோன்றினார்கள்.

பிரம்மதேவன் ஊர்வசியின் நடனத்தைக் கண்டு அவளழகில் மயங்கித் தன் வீரியத்தை விட அதிலிருந்து அகத்தியர் தோன்றியதாகக் காவிரி புராணம் கூறுகிறது.

குடத்திலிருந்து தோன்றியதால் அகத்தியருக்குக் கும்பமுனி குடமுனி என்னும் பெயர்கள் உண்டாயின.

அகத்தியர் பெயரால் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரமொன்று கடல் நீரை உதயத்தில் வற்றச் செய்யும் என்று கூறப்படுகிறது.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றி பல அரிய சக்திகளைப் பெற்றார்.

இராமபிரானுக்கு சிவ கீதையை போதித்தார். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தைப் போக்கினார். தமக்கு வந்தனை வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்து இருந்த இந்திரத்துய்மனை யானையாகப் போகும்படி சபித்தார்.

அகத்தியர் தென்திசை நோக்கி வரும் வழியில் தன் முன்னோர்கள் (பித்ருக்கள்) மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்கள் அகத்தியரிடம் அவர் திருமணம் செய்து கொண்டு ஒருமகனைப் பெற்றால்தான் தாங்கள் சுவர்க்கம் புக முடியும் என்றார்கள்.

அகத்தியர் எப்பொழுதும் தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். அதனால் அவருக்கு வேறு எதிலும் நாட்டம் ஏற்படவில்லை. திருமணம், மனைவி, மக்கள் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து வந்தார் அதுவரை.

அகத்தியரும் தன் முன்னோர்களின் சாபத்திற்கு அஞ்சி, *"நான்தான் அகத்தியன்"* விரைவில் *இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்திலிருந்து நீக்குகிறேன்"* என்றவர் விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் நடத்திய யாகத்தில் பிறந்த உலோப முத்திரையை அதிகப் பொருள் தந்து மணந்து தென்புலத்தார் கடனைத் தீர்த்தார்.

முருகக்கடவுளின் ஆணைப்படி தமிழுக்கு அகத்தியம் என்னும் இலக்கிய நூலை இயற்றித் தமிழை வளர்த்தார்.அகத்தியர், கலைகளில் சிறந்து விளங்கிய இவருக்கு திரண,

*தூமாக்கினி (தொல்காப்பியர்),* *அதங்கோட்டாசான்,* *துராலிங்கன்,*
*செம்பூட்சேல்,*
*வையாபிகன்,*
*வாய்பியன்,*
*பனம்பாரன்,*
*கழாரம்பன்,*
*அவிநயன்,*
*காக்கைப் பாடினி,*
*நற்றத்தான்,*
*வாமனன்* -போன்ற மாணாக்கர்கள் இருந்தனர்.

அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள *"சமரச நிலை ஞானம்"* என்னும் நூலில் உடம்பிலுள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது.

அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்ற நூலில் கிரிகை நூல் அறுபத்து நான்கு எனும் பகுதியில் பதினெட்டு வகையான மனநோய் பற்றியும், அவற்றின் இயல்புகள் பற்றியும், அவற்றிற்குரிய மருத்துவ முறைகளைப் பற்றியும் தெளிவாக்கியுள்ளார்.

அகத்தியர் அஷ்டமா சித்து என்னும் நூலில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் பற்றிய குறிப்புகளை காட்டியுள்ளார்.

*இவரின் மற்ற நூல்கள்:*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s