Golden words of Vallalaar

"வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்
நல்லோர் மனத்தை – நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு – மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் – தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் – கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு – வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் – கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு – எரியச் செய்தேனோ!
தருமம் பாராது – தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி – வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு – உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு – உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் – பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி – மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய – வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி – குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் – பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை – இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் – குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை – நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் – காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த – கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் – கற்பழித் தேனோ!
கருப்ப மழித்துக் – களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் – கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை – கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் – கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் – பிழை சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் – பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது – கட்டி வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு – உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் – கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் – துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள – குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் – விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் – பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் – போயிடித்தேனோ!
ஆலயக் கதவை – அடைத்து வைத்தேனோ!
சிவனடி யாரைச் – சீறி வைத்தேனோ!
தவஞ் செய்வோரைத் – தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் – தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் – தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து – செருக்கடைந் தேனோ!
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.

"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s