Perur temple part31

**சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*( 31 )*
🍂 *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* 🍂
●●●●●●●●●●●●●●◆●●●●●●●●●●●●●●●●●
🍂 *அங்கிரன் கதிபெறு படலம்.* 🍂
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
வங்க தேசத்திலுள்ள வனத்தில் அங்கிரனென்னும் வேடன் மனைவி, மக்கள், சுற்றங்கள் சூழப் பெருஞ் செல்வமுற்றுப் படைக் கலங்களோடு பலரும் தன்னைப் போற்றும்படி, வழிச் செல்வோர் பொருள்களை அபகரித்து வாழ்ந்து வந்தார்.

மாமக தீர்த்த ஸ்நானஞ் செய்யவும், மணங்கள் செய்யவுஞ் சுற்றத்தவர்களோடு பிராமணர்கள் அக்காட்டின் வழியே நடந்து வரலாயினர்.

நடவழி சென்று கொண்டிருந்த முடுக்கரை அடுத்தவுடனேயே, அவர்களைனைவரையும் கொன்று இரத்தினாபரணங்களையும், பொன்னணிகளையும், பீதரம்பராதி துணி மூட்டைகளையும், பொதிசுமக்கும் எருதுகளின் மீது ஏற்றிய திரவிய மூட்டைகளையும் கொள்ளை கொண்டு தனதிடத்தை வந்தடைந்தான்.

அப்பொழுது மக்கள் முதலானோர் ஒருங்குகூடி *"பொருள்களை மாத்திரம் அபகரியாமல் அனைவரையுங் கொலை செய்தமையால் அரசர் அறிந்து குலத்தோடு எங்களை ஒழிப்பார்"* என்று தம்முள்ளே துணிந்து, அவ்வங்கிரனை விலக்கினர்.

விலக்கிய அன்றைய நாளிலிருந்து அர்த்த ராத்திரியில், மக்களையும், சுற்றத்தாரையும் கொன்று, அவ்விடத்தைவிட்டு தட்சிண கைலாசத்தின் புறத்திற் சேர்ந்தான்.

அங்கும் பல மிருகங்களையும், பட்சிகளையுங் கொன்று பட்சித்து வரும்போது ஒருநாள், ஓரந்தணன் பத்தினியோடு வர அவ்வேதியனைக் கொலை செய்து அவன் பத்தினியைக் கைப்பற்றி இன்பம் நுகர்ந்தான்.

பின்பு, வேட்டமாட விரும்பி வில்லோடு காட்டில் உழன்றமையால், பசியும் தாகமுற்றுத் திரும்பும் போது காஞ்சிமா நதியைக் கண்டு சமீபித்து அந்நீரையுண்டு கரையிலேறுங்கால், ஒரு பாம்பு தீண்டி மாண்டனன்.

அவனை யமதூதர் கொண்டு சென்றனர். அச்சமயத்தில் சிவகணங்கள் அத்தூதர்களைத் தண்டித்து அங்கிரனை விமானத்தில் ஏற்றி திருக் கைலாசத்திற் சேர்ந்தனர்.

இதனையுணர்ந்த இயமன் திருக்கைலாசபதியை அடுத்து வடங்கி நிகழ்ந்தவைகளை விண்ணப்பஞ் செய்தான்.

அதற்கு சிவபெருமான் *"அங்கிரன் சிறிதும் புண்ணியம் புரியாத பெரும் பாதகனேயாயினும்,* திருப்பேரூரின் கண்ணதாகிய நமதுருவான வெள்ளியங்கிரியை அடுத்து நித்தமுந் தரிசித்தமையாலும், காஞ்சிமாநதி நீரைப் பருகிக் கரையில் இறந்த அவனுருவம் அந்நதி நீரில் உருண்டு விழ, அதனை நரிகள் உருட்டி திருநீற்று மேட்டில் இட்டமையாலும் பாவங்களெல்லாம் போய்ப் புண்ணியவானாய் நமது கயிலை மலையை அடைந்தான்.

ஆதலால், திருப்பேரூர் எல்லையின்றி மற்றைய எல்லையில் மரித்தோர் மாட்டு உனது அதிகாரத்தைச் செலுத்துவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே இயமன் வணங்கி விடை பெற்றுத் தன் பதியை எய்தி அதிகாரஞ் செலுத்திவருவாயினான்.

. திருச்சிற்றம்பலம்.

*கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

*அவனருள் தானே வரும்!*
*அவன் அருள் தானே வரும்!.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s