Preaching Advaita-Periyavaa

மஹாப் பெரியவாளின் அத்வைத விளக்கம் !

ஒரு இளம் ஸன்யாஸி. காஞ்சிபுரம் வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார் .

"என்ன பண்ணிண்டிருக்கே?"

" அதிகநாள் எந்த எடத்லையும் தங்கறதில்லே பெரியவா …..இப்டி ஊர் ஊராப் போயிண்டிருக்கேன். பிக்ஷையா எது கெடைக்கறதோ ஸாப்டுட்டு, முடிஞ்ச அளவு நெறைய ஜபம் பண்றேன். சில எடங்கள்ள எதாவுது பேசச் சொன்னா எனக்கு தெரிஞ்ச பகவத் விஷயங்களை சொல்லுவேன். அவ்ளோவ்தான்"

நல்லது. அத்வைதப்ரசாரம் பண்ணேன்!

ஆனா எனக்கு அத்வைதம் பத்தி என்ன தெரியும் பெரியவா?" குரலில் தாபம்.

"அது ஒண்ணும் பெரீய்ய விஷயமில்லே! நா ஒரு கதை சொல்றேன். அதை நீ போற க்ராமத்துலல்லாம் சொல்லு!"-

"பெரியவா சொல்றபடி செய்யறேன்.."

"ஒரு ஊர்ல ராமஸாமி ராமஸாமின்னு ஒர்த்தன். வேலைவெட்டி எதுவுமில்லே. ஆளைப் பாத்தா நன்னா ஆஜானுபாஹுவா ஸாண்டோ மாதிரி இருப்பானா……..அதுனால ஆத்துல எல்லாரும் அவனை "ஏண்டா, இப்டி தீவட்டி தடியனாட்டம் ஒக்காந்து நன்னா ஸாப்டறியே? எதாவுது வேலை பாத்து பொழைக்க வேணாமான்னு திட்ட ஆரம்பிச்சா. அவனுக்கு ரொம்ப ரோஷம் வந்து எங்கயாவுது வேலை கெடைக்குமான்னு தேடிண்டு இருந்தான்.

அந்த ஊர்ல ஒரு ஸர்க்கஸ் கம்பெனி வந்து டேரா போட்டுது. இவன் அந்த ஸர்க்கஸ் மானேஜர்கிட்டபோனான்.

"ஸார் ஸார் எனக்கு ஒரு வேலை போட்டுக் குடுங்கோ" ன்னு கெஞ்சினான்.

அந்த நேரம் ஸர்க்கஸ்ல ஒரு ஆதிவாஸி ஒர்த்தன் வித்தை காமிச்சுண்டு இருந்தான். என்ன வித்தைன்னா……அவன் இங்க்லீஷ் பேசுவான்! ஆதிவாஸி இங்க்லீஷ் பேசறான்னுட்டு அதுக்குன்னே கூட்டம் வரும். அவன் கொஞ்சநாள் முன்னால செத்துப் போய்ட்டான். அதுனால ஸர்க்கஸ் ரொம்ப டல்லா இருந்துது. ராமஸாமி அந்த ஆதிவாஸி மாதிரி ஆஜானுபாஹுவா, நல்ல தாட்டியா இருந்தானா அதுனால, அந்த ஆதிவாஸியாட்டம் நடிக்கற வேலை கெடச்சுது. பழைய படி கூட்டம் வர ஆரம்பிச்சுது.

சர்க்கஸ் மானேஜர் ஒருநாள் ராமஸாமிகிட்டே "ஏம்பா…இப்டி எத்தனை நாள் ஆதிவாஸியா இங்க்லீஷ் மட்டும் பேசி நடிப்பே? ஸர்க்கஸ்ல மீதி வித்தை எல்லாம் இருக்கே! கயறு மேல பாலன்ஸ் பண்ணி நடக்கறது மாதிரி இதெல்லாமும் கத்துக்கோன்னார். கத்துண்டான். அன்னிக்கி ஆதிவாஸி மாதிரி ட்ரெஸ் பண்ணிண்டு மொத மொத, ஜனங்கள் பாக்கறச்சே, கயறு மேல இத்னாம் பெரிய குச்சியை பாலன்ஸ் பண்ணிண்டு இவன் நடந்துண்டு இருக்கான்…….லேஸா கீழ பாத்தா……ஒரு புலி !

"கரணம் தப்பினா மரணம்"ன்னு யாரோ மைக்குல பேசி இவனை உத்ஸாகப் படுத்திண்டு இருக்கா! கரணம் தப்பிடுமோ? மரணந்தானோ?…. புலியைப் பாத்தானோ இல்லியோ, இவனோட கான்சன்ட்ரேஷன் போயிடுத்து. காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. "தீவட்டி தடியனாவே இருந்திருக்கலாமோ! கொஞ்சம் பாலன்ஸ் போச்சுன்னா புலியோட வாய்க்குள்ளன்னா போவோம்!" ன்னு பயம் வந்துதோ இல்லியோ, அடுத்த க்ஷணம் "தொபுகடீர்"ன்னு பாலன்ஸ் தவறி நேரா புலி மேலேயே போய் விழுந்தான்! அவ்ளோவ் கிட்ட புலியை பாத்ததும் ஸப்தநாடியும் ஒடுங்கிப் போய்டுத்து!
அந்தப் புலி மெதுவா இவன்ட்ட வந்து "டேய், ராமஸாமி! பயப்படாதேடா…….நாந்தான் க்ருஷ்ணஸாமி! ஒனக்கு ஆதிவாஸி வேஷம் குடுத்தா மாதிரி, எனக்கு புலி வேஷம் குடுத்திருக்கா……" ன்னு புலிஸாமி பேசினதும், ராமஸாமியோட பயம் போய்டுத்து!

இதான் அத்வைதம்! எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான்! வெளில வேற வேற ரூபம் தாங்கிண்டு இருக்கு. அவ்ளோவ்தான்!

‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்திதா ன்! இதான் அத்வைதம். இந்த கதையை சொல்லு போறும்……" என்று கூறி ஆஸிர்வதித்தார்.

விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி ஒரு பெரிய அத்வைத சித்தாந்தம் சொல்ல மஹா பெரியவாளாலே சுலபமா முடியும்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s