MGR & Periyavaa

M.G.R-ருக்காக….

கலவையில் ஒருநாள் விடியக்காலம் ரெண்டு மணி. பெரியவா எழுந்து தன்னுடைய அனுஷ்டானங்களை நிதானமாக முடித்துக்கொண்டு, குரு,பரமகுருவின் அதிஷ்டானங்களின் தாழ்வாரத்தில் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

முடிந்ததும், கூண்டு வண்டியை பிடித்துக் கொண்டு, ஸ்ரீகண்டன், ஸுந்தரமூர்த்தி உடன்வர எங்கோ வெளியே புறப்பட்டார்.

எங்கே?

சித்தம் போக்கு ஶிவன் போக்கா?

பழைய ஶிவன் கோவில் பக்கம் போகும் வழியில், ஒரு நீரோடை வரும். அதைத் தாண்டியதும் வரும் ஶிவன் கோவிலை ஒட்டியிருந்த ஓடைக்கரையில் அமர்ந்து விட்டார்.

விடியக்காலம் நாலு மணி.

ஒரு கார் வரும் ஶப்தம் கேட்டது.

எழுத்தாளர் மணியனும், அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் அதிலிருந்து இறங்கினார்கள் !

பெரியவா அமர்ந்த இடத்தின் முன்னால், பாரிஷதர் ஒருவர்….ஜலமோ தெளித்து ஶுத்தம் பண்ணி வைத்திருந்தார்.

பெரியவாளின் முன், ஈரமான அந்தத் தரையில், ஸாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரும், மணியனும் நமஸ்காரம் பண்ணினார்கள்.

"பெரியவாகிட்ட…கொஞ்சம் தனியா….பேசணும்.."

எம்.ஜி.ஆர் தன் ஆவலை வெளியிட்டார்.

உடனே மற்றவர்கள் விலகிப் போனார்கள். ஸுமார் அரைமணிநேரம் ஸம்பாஷணை நடந்தது.

என்ன பேசினார்களோ? அவர்களுக்கே வெளிச்சம்…!

ப்ரஸாதம் பெற்றுக் கொள்ளும்போது…..

"பெரியவா உத்தரவு போடற கார்யங்கள… கட்டாயம் செய்யறேன்"

வணக்கத்துடன் கூறினார் எம்.ஜி.ஆர்.

"நீ… இப்போ பண்ணிண்டு இருக்கற கார்யமே எனக்கு த்ருப்தியா இருக்கு..! க்ஷேமமா இரு"

ஆஶிர்வதித்தார்.

MGR கிளம்புவதற்குள் பலபலவென்று….பொழுது விடிந்து விட்டது.

பார்த்தால்…! ஓடைக்கரையில் கூட்டம் அலைமோதியது !

"பாரு! இத்தன ஜனங்களும்… ஒன்ன…. பாக்கத்தான் நின்னுண்டிருக்கா!…"

பெரியவா சிரித்துக் கொண்டே சொன்னதும், எம்.ஜி.ஆரும் சிரித்தார்.

எம்.ஜி.ஆர் கிளம்பிப் போனதும், ஶிஷ்யர்களிடம் பெரியவா சொன்னார்….

"ராமச்சந்த்ரன், தான் வரப்போறது தெரிஞ்சா, கூட்டம் கூடிடும்…….ங்கறதால, பாவம்… ராத்ரி ரெண்டு மணிக்கெல்லாம் பட்ணத்துலேர்ந்து பொறப்ட்டு வந்தான்…! அதான்… கலவை அதிஷ்டானத்ல இல்லாம, ஊருக்கு வெளில… அவனை பாக்கறதுக்காக, ராவோட ராவா இங்க வந்தேன். பாரேன்! இங்கியே இவ்வளவு கூட்டம்னா………அதிஷ்டானத்ல.. எப்டி இருந்திருக்கும்? ஊரே தெரண்டு கூடியிருக்குமோன்னோ !"

எளிமை எளிமை எளிமை ! அதன் உருவம் நம்ம பெரியவாதானே!

இதில் அழகு என்னவென்றால், எம்.ஜி.ஆரை ஊருக்கு வெளியில் போய் ஸந்திக்கணும் என்பதால், தன்னுடைய அனுஷ்டானத்தை குறைக்கவோ, மாற்றவோ இல்லை. அதற்கு பதிலாக, தனக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச ஓய்வையும் குறைத்துக் கொண்டு விட்டார்.

கும்பகர்ண பரம்பரையில் வந்த நாம், இனியாவது எதற்காகவும் நம் அனுஷ்டானங்களை விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்க பெரியவாளை ப்ரார்த்திப்போம்.

ஶ்ரீ MGR-ம், ‘கடவுள் என்பவர்…. மனித ஶக்திக்கெல்லாம் அப்பாற்பட்டவர், கடவுள் நம்பிக்கை என்பது, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் பிறப்புரிமை, அதில் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது!’ என்பதை உணர்ந்து, "அரஸியல்வாதி என்றாலே…அதுவும், தமிழ்நாட்டில்….!! அவர்கள் ‘secularism’ என்ற போர்வையில், ஹிந்து மத நம்பிக்கைகளையும், தெய்வங்களையும் மட்டுமே கேலி பேச வேண்டும் என்ற பொய்யான முகமூடி அணியாமல், ‘திருப்பி அடிக்க மாட்டான்!’ என்ற "திட நம்பிக்கையோடு" ப்ராஹ்மணர்களை மட்டும் ஹிம்ஸை செய்யும் எண்ணம் துளியுமின்றி, தைர்யமாக, ஆன்மீகமும், தேஸீயமும் என் இரு கண்கள் என்பதை, தானே… உதாரணமாக இருந்து வாழ்ந்து காட்டியவர்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s