Tiruvilayadal puranam 24th day

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
( 24 )
☘ திருவிளையாடல புராணத் தொடர். ☘
17- வது படலம்.
எளியநடை சரிதம்.
மாணிக்கம் விற்ற படலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

சூரியனது கதிர்கள் பட்டதும் நெருப்பைப் போல் ஜ்வலிக்கும் சூரிய காந்தக்கல் உடல் பலத்தையும், ஆத்ம பலத்தையும் ஏற்படுத்தும். கண்கள் பிரகாசமாகத் தெரியும்.

சந்திரனது ஒளி பட்டதும், பல மடங்கு ஒளி வீசி உடலை குளிர்ச்சியாக்கும் கல்லிற்கு சந்திர காந்தக்கல் என்று பெயர்.

இதை அணிபவருக்குப் புலமை அதிகரிக்கும். நோய் வாய்ப்பட்டிருந்த தாயானாலும் நோய் நீங்கி தீர்க்காயுளோடு வாழ்வாள்.

அரசனானால் கடல் கடந்தும் வெற்றி பெறுவான். அறிவு, ஆனந்தம், கலை, புகழ், ஆற்றல், அழகு, நடுநிலைமை, நறுமணம், சுகபோகம் எல்லாம் கிட்டும்.

இக்கலியுக காலத்தில் மேற்கண்ட இவ்விரண்டு கற்கள் கிடைப்பது அரிதானதாகும்.

ஞாயிறு மாணிக்கத்தையும், திங்கட்கிழமை முத்தையும், செவ்வாயன்று கோமேதகத்தையும் பவளத்தையும், புதன் மரகதத்தையும், வியாழன் புஷ்பராகத்தையும், வெள்ளி வைரத்தையும், சனி நீலத்தையும் வைடூரியத்தையும் வாங்குவது நன்று.

அடேங்கப்பா! இரத்தினம் பார்ப்பதில் இவ்வளவு விஷயங்களா? என அதிசயித்தனர் பாண்டிய அமைச்சர்கள்.

வியாபாரியின் இரத்தின ஞானத்தை நன்று, நன்று என பாராட்டினர்.

பின்னர் பீடம் ஒன்று வரவழைத்து வைசியர் வடக்கு முகமாய் அமர, பீடத்தின்மேல் புதுத் துணி விரித்து நடுவில் மாணிக்கத்தையும், கிழக்கு முதல் எட்டு திசைகளிலும் முத்து முதல் எட்டு இரத்தினங்களையும் வைத்து, நவக்கிரக பூஜை செய்து "சிறுவனுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகும்"
என ஆசீர்வதித்து, அதிக விலையுள்ளவையும், குற்றமற்ற எல்லாப் பெரிய ரத்தினக் கற்களையும் எடுத்துக் கொடுத்தார். அமைச்சர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

சாத்திரப்படி அழகான முடி செய்து ஓமங்கள், தானங்கள் செய்தபின் சிறுவனுக்குப் பட்டாபிஷேகம் செய்தனர்.

அதுவரை வைசியப் பெருமானை இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

முடிசூட்டு விழா நடந்தபின் வைசியருக்கு மரியாதை செய்ய பொன், ஆடைகள் இவற்றோடு அருகில் சென்றால் சென்றால் அவர் புன்சிரிப்புடன் ஒளி வடிவமாகி லிங்கத்துனுள் கலந்து மறைந்தார். அமைச்சர்கள் திகைத்தனர். "இரத்தினங்கள் விற்றவர் இறைவனே" என அறிந்து கொண்டு மகிழ்ந்தனர்.

"இனி இளவரசன் நீண்ட ஆயுளும், கீர்த்தியும் பெறுவான்" என திடமுற்றனர். இறைவனே முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டதால், அபிஷேக பாண்டியன்"எனச் சிறப்புப் பெயர் பெற்றான் சிறுவன்.

உரிய வயது வந்ததும் கொள்ளையிட்டவர்களிடமிருந்து பொருள்களை மீட்டான்.

பின்பு, இறக்கை வெட்டப்படாத மலை ஒன்று உண்டு. ஆஞ்சநேயர் சீதாவைத் தேடி இலங்கை நோக்கிக் கடல்தாண்டிப் போனாரே, அப்போது அவருக்கு உபசாரம் பண்ணவென்று கடல் நடுவே எழுந்ததே மைநாக பர்வதம் அதுதான்.

நாற்படையுடன் மனுச்சக்கரவர்த்தி போல நீண்ட காலம் அரசாண்டான் அபிஷேக பாண்டியன். இந்த பதினோழாம் திருவிளையாடலை படிக்க படிக்க ஷேமமாய் வாழலாம். வாழ்வில் தொடரா.

திருச்சிற்றம்பலம்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s