Meaning of Saptapadi mantram

Courtesy: Sri.Balasubramanian Vaidyanathan

ஏகம் இஷே விஷ்ணுஸ்த்வா அன்வேது – முதலாம் அடியில் வளத்திற்காக விஷ்ணு உன்னை பின்தொடரட்டும்
த்வே ஊர்ஜே-இரண்டாம் அடியில் வலிமைக்காக(ஊர்ஜே),
த்ரீணி வ்ரதாய – மூன்றாம் அடியில் விரதங்களை (வ்ரதாய) மேற்கொள்ள,
சத்வாரி மாயோபவாய – நான்காம் அடியில் இன்பத்தை (மாயோபவ) அளிக்க,
பஞ்ச பஷுப்ய – ஐந்தாம் அடியில் பசுக்களுக்காக(பஷுப்ய – பசுக்கள் செல்வத்தைக் குறிக்கும்),
ஷட்ருதுப்ய – ஆறாம் அடியில் பருவங்களுக்காக (ருதுப்ய),
ஸப்த ஸப்தப்யோ ஹோத்ராப்யோ – ஏழாம் அடியில் (நல்விஷயத்தை) எழுந்தருளச் செய்யவும் (ஹோத்ராப்யோ – invocation)
விஷ்ணுஸ்த்வா அன்வேது – விஷ்ணு உன்னை பின்தொடரட்டும்.

ஸகா ஸப்தபதா பவ – ஏழு அடிகள் நடந்தவள் என் தோழி ஆகட்டும்
ஸகாயௌ ஸப்தபதா பபூவ – இணைந்து ஏழடிகள் நடந்த நாமிருவரும் நண்பர்களாக இருப்போம்.
ஸக்யம் தே கமேயம் – நட்புடன் உன்னுடன் செல்லவேண்டும்
ஸக்யாத் தே மாயோஷம் – பெண்ணின் (உன்) நட்பினின்று நான் விலகாமல் இருப்பேனாக
ஸக்யான்மே மா யோஷ்டா – என் நட்பினின்று நீ விலகாமல் இருப்பாய்
ஸமயாவ ஸங்கல்பாவஹை ஸம்ப்ரியௌ ரோசிஷ்ணூ ஸுமனஸ்யமானௌ – நல்லமனதுடன் ப்ரியத்துடன் மகிழ்ந்திருக்கும் நம்மிருவராலும் சங்கல்பம் (தீர்மானமான முடிவு) செய்யப்படட்டும்.

இஷமூர்ஜமபிஸம்வஸானௌ ஸம் னௌ மனாம்ஸி ஸம் வ்ரதா ஸமுசித்தானயாகரம் – வளமுடன் வலிமையுடன் நல்ல மனத்துடன் நல்ல வ்ரதங்களை இணைந்து மேற்கொண்டு வாழ்வோம்

த்வம் த்யௌரஹம் ப்ருதிவீ – நீ வானுலகம், நான் பூமி
ரேதோஹம் ரேதோப்ருத்த்வம் – ரேதஸ் (வீர்யம் -Semen) நான், ரேதஸை ஏற்பவள் நீ
மனோஹமஸ்மி வாக்த்வம் – மனம் நான், சொல் நீ
ஸாம அஹம் அஸ்மி, ருக் த்வம் – ஸாம கீதம் நான், அதற்கடிப்படையாக உள்ள ருக் நீ
ஸா மாம் அனுவ்ரதா பவ – அவள் என்னைப் பின்தொடர்பவளாக இருக்கட்டும்

பும்ஸே புத்ராய வேத்தவை ஶ்ரியை ப்ரஜாய வேத்தவ ஏஹி ஸுந்ருதே – ஆண்மை உடைய, ஶ்ரேயசான குழந்தைகளை அடைவோம், மகிழ்வுடன் அருகே வா…

ஸப்தபதி மந்த்ரம் – தைத்ரிய ப்ராஹ்மணம் – ஏகாக்னி காண்டம்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s