Muruga as a doctor

*சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌻 வைத்தியம் பார்த்த முருகன். 🌻
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

வடசென்னை.

ஆம் நம் சென்னை மாநகரந்தான்.

முன்னர் இங்கு மகான்கள், ஞானிகள், சிறந்த கவியாளர்கள், மேன்மையான இறையடியார்கள் போன்ற இன்னும் எத்தனை வகையான பேரருளாளர்கள் அருளாடல்களை நடத்திய இடம் இந்த வடசென்னையில்.

கர்நாடக சங்கீத வித்வான் முத்துசுவாமி தீசஷிதரும் அவரின் தந்தையாருக்கும், நாடக கீர்த்தனை பாடிய அருணாசலக்கவிராயருக்கும், கல்வி கற்றுணர்ந்த பூமி இது.

ஏன்!,… பட்டினத்தடிகள், ஞானசம்பந்த மூர்த்தி, அப்பர் பெருமான் போன்றோர்கள் வழிபட்டுத் துதித்த பூமியும் இது.

சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இங்குதான் திருமணம் நடந்தது.

சிவபெருமான் பிரமதேவருக்கு, சிருஷ்டித் தொழிலை நடத்துவதெப்படி என்று அவருக்கு பாடம் எடுத்தியம்பியதுதான் இந்த பூமியான ஆதிபுரி ஆகும்.

மேலும் பட்டினத்தார் போன்ற சித்த புருஷர்கள் வந்து தங்களின் திருமேனியினை ஒடுக்கிக் கோயில் கொண்ட பூமி!. இது.

மொத்தத்தில் ஞானபூமியாம் வடசென்னை ராயபுரத்தில் முருகப் பெருமான் ஒரு திருவிளையாடலை நடத்தியிருக்கிறார்.

இந்த ராயபுரத்தில் சித்தபுருஷர்கள் பலர் வழிபட்டு வந்த அங்காளம்மன் திருக்கோயிலருகிலேயே துரைசாமிக் கவிராயர் என்பவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

இவரின் குடும்ப பரம்பரை முழுவதும் கவி பாடுவதில் கைதேர்ந்தவர்களாவர்கள். ஆக துரைச்சாமி கவிராயருக்கும் இளமையிலேயே கவிப்புலன் அமைந்து இருந்து வந்தது.

பக்தியுடன் பாடல்களை பாடுவது மட்டுமல்ல!, இறை வழிபாடு செய்வதிலும் மிகவும் ஊக்கம் கொண்டவர் கவிராயர்.

கவிராயர் எப்போதுமே பழனியான்டவ முருகன் படத்தை தன்னோடோவே வழக்கமாக வைத்திருப்பார்.

பொழுதேனும் அம்முருகனுக்கு வழிபாடு செய்வார். அம்முருகன் படத்திற்கு மலர்மாலைகளை அணிவிப்பார். பாமாலையும் பாடி வழிபாடு ஒழுகுவார்.

தினமும் இவ்விதமாயின் பூமாலையும் பாமாலையுமாய் வழிபாடு வழக்கம் தொடர்ந்த வண்ணமிருந்தன.

குங்கிலியக்கலய நாயனாருக்கும் கவிராயருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தன.

அடிகளாருக்கு திருவமுது செய்விக்கும் வழிபாட்டை எந்நிலையிலும் நிறுத்தாது தொடர்ந்தவர் குங்கிலியக் கலயரும் அவரதுதம் துணைவியாருமாவார்கள். அதுபோல் கவிராயரும் அனுதினமும் வழிபாடுகளை முடித்து, ஏழை பாழைகளை தேடி அனுகி உணவு வழங்குவார். அதன்பின்பே தாம் உணவை உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார்.

ஒருசமயம் கவிராயரால் ஏழைக்கு உணவளிக்க முடியா நிலையேற்பட்டது. அப்போது கவிராயரின் மனைவி, தன் கழுத்திலிருக்கும் திருமாங்கல்யத்தைக் கழற்றி விட்டு மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டாள்.

அடியார்க்கு அமுதுசெய்விக்க பணமில்லாது வறுமையிலிருந்த குங்கிலியக் கலயனாருக்கு, துணைவியார் தன் கழுத்திலுள்ள திருமாங்கல்யத்தை கணவரிடம் கொடுத்து அடியார்க்கு அமுது செய்விக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார் அதுபோலவே,,,,

மாங்கல்யத்தை விற்று பணமாக்கி அதைக்கொண்டு ஏழைக்கு அன்னதானம் செய்வதைத் தொடர்ந்தார்.

கவியாருக்கு முன்வினைப் பயன் இருந்ததுபோல, அவருக்கு விறைவாதநோய் வந்து அவஸ்தை பட்டார்.

கவிராயரால் விறைவாத நோய் வலியினை பொறுக்க முடியவில்லை. மிகவும் துண்பத்துக்குள்ளானார். எல்லா மருத்துவமும் பொய்த்துப் போனது. நோய் குணமாகவில்லை. வலியால் கண்ணீர் விட்டழுதபடியே இருந்தார்.

ஆராக்கியமாக இருப்பதில்தான் ஒருவனுக்கு செல்வமே!" அந்த ஆரோக்கியம் கெட்டுப்போனால் என்ன செய்வோம்!….. இறைவனைத்தேடி ஓடுவோம்!….
அந்த நேரத்தில்தான் ஆண்டவனை முழுமை நம்புவோம். இதுதானே வழக்கமா இருக்கிறது. இப்படிதானே நடந்து கொள்கிறோம் நாம். அதுபோல கவிராயர் என்ன செய்வார் அவருக்கு முன்வினைபாவம் இருந்தது போல…….

விறைவாத நோயால் வலி பொறுக்காமல் கவிராயர் கலங்கினார். கதறி அழுதார். பழனி வேலா!" பழனி வேலா!!" நான் என்ன பாவம் செய்தனோ தெரியவில்லையே?" எனக்கு உன்னை விட்டா யார் உண்டு? ‘பழனிவேலா, உன் சித்தம் என்னவென்று அறியேன் முருகா! முருகா!! எனக் கதறியழுது மயங்கிச் சரிந்து விழுந்தார்.

அப்போது அழகான இளைஞனொருவன் தோளில் மண் குடுவை தாங்கியவாறு வந்தான். குடுவைக்குள்ளிருந்த தைலத்தினையெடுத்து, கவிராயருக்கு நோய் கண்ட இடத்தில் தடவி விட்டான்.

மயக்கத்திலிருக்கும் கவிராயரின் நினைவுக்கு உணர்வு ஏற்படும் வகையில்….அன்பனே! கலங்க வேண்டாம். நோய் வலி இனி இராது! எனக் கூறினான்.

கண் விழித்த கவிராயருக்கு அதிசயமாகத் தெரிந்தது. கூடவே, "நோய் வலி இனி இராது" என மனதுக்கு உரைத்த நிழலாடியது தெரிந்தது.

நோயிருந்த இடத்தில் மருந்து தோயப்பட்டிருப்பதைக் கண்டார்.

நிகழ்வுகளை சடுதியில் உணர்ந்து கொண்ட கவிராயர் பழனி வேலவனை நினைத்து….பழனியாண்டவா!" நினைத் தேடி வந்த தெய்வமே! உனை நாடி நான் காவடி தாங்கி வருவேன் எனக்கூறி பழனிவேலவன் படத்தினின்று கைகூப்பி தொழுதார்.

கவிராயரின் மனதிற்கு உணர்த்திச் சொன்னது போலவே மறுநாள் நோயொழிந்து போனது. இப்போது கவிராயரின் கண்களில் கண்ணீர் மழை. கந்தபெருமானின் கருணையையென்னி கண்ணீர் மழை.

கவிராயர் அருகாகயிருக்கும் அவ்வூர் குயவனானொருவனின் கனவில் தோன்றிய முருகன்…….பக்தா! நீ, கவிராயரைக் கண்டு இரு பானைகளை அவருக்குக் கொடு எனச் சொல்லி மறைந்தார்.

அடுத்ததாக கந்தன் செட்டியார் எனும்.அரிசி வணிகனின் கனவிலே தோன்றிய முருகன்…….கவிராயருக்கு வேண்டிய அரிசியைக் கொடு……எனக் கட்டளையிட்டு விட்டு மறைந்தான்.

கடைசியாக கவிராயரின் கனவிலும் வந்து காட்சி தந்த முருகன், பானையும் அரிசியும் உனைத் தேடிவரும் பெற்றுக்கொள் என கூறியருளினான்.

அன்னக் காவடி பூண்டு ராயபுரத்திலிருந்து புறப்பட்டார் கவிராயர். ராயபுரத்திலிருந்து பழனிக்கு நாற்பத்தைந்து நாட்களாய் நடந்து போனார் கவிராயர்.

கவிராயர் அன்னக் காவடியுடன் நடந்து வரும் வேளையில், அவரை எதிர் கொண்ட கோயில் பொறுப்பாளர்கள் சகலவித மரியாதைகள் செய்தனர். இதற்குக் காரணம்— கோயில் பொறுப்பாளர்களின் கனவிலும் தோன்றிய முருகன், நம் கவிராயர் நமக்காக அன்னக்காவடி பூண்டு வருகிறான் அவருக்கு வரவேற்பு செய்க!……..எனக் கட்டளையிட்டிருந்தான்.

கவிராயர் மலையடிவாரத்தை நெருங்கினார். அனைவரும் கூட்டமாக வந்து நின்று வாத்தியங்களை முழங்கச் செய்தார்கள். மாலைகளை அணிவித்தார்கள். சந்நிதிக்கு அழைத்துப் போனார்கள். முருகனுக்கு வழிபாடெல்லாம் செய்து துதித்து முடித்து, அன்னத்தை விநியோகிக்க மண் பானையைத் திறந்தார் கவிராயர் அடுத்த அதிர்ச்சி…..

காவடிப்பானையின் மூடியை விடுத்தவருக்கு ஆச்சர்யம். அண்ணம் கொதிக்க கொதிக்க இருந்தது. அனைவருக்கும் அன்னத்தைப் பரிமாறினார். பின், முருகனின் திருவிளையாடலை என்னி அதிசயித்தும், வியந்தும் ராயபுரம் திரும்பினார் கவிராயர்.

கவிராயரின் இறுதிக் காலம்; எப்போதும்போல் பழனியாண்டவனின் படத்தை தன்னருகிலேயே வைத்திருந்தார். அவர் பார்வை முழுமையும் பழணியாண்டவரை நோக்கிய வண்ணமேயிருந்தன. உறவுகள் எனச் சொல்லும் அத்தனை பேரும் கவிராயரின் அருகிலேயே அமர்ந்திருந்தனர். இவர்களோடு இன்னும் நெருக்கமாக கவிராயரின் பேரனானவன், விராயர் நீட்டிய கால்களுக்கருகில் அமர்ந்திருந்தான். தன்னை நோக்கிப் பார்த்தவர்களுக்கு, அவர்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கிக் கொண்டிருந்த கவிராயர் முருகனின் திருவடிகளை அடைந்தார்.

அந்நேரத்தில், கவிராயர் பலகாமமாக தன்னோடவே வைத்துக் கொண்டிருந்த பழணியாண்டவன் திருவுருவப் படத்திலிருந்தும் கண்ணீர் கறை தெரிந்தது. அந்தக் கண்ணீர் கறை வழிந்தோடி முருகனின் இதயத் தாமரை வரை நீண்டிருந்தது. அந்த முருகப் பெருமானின் திருவுருப் படத்திலுள்ள அக்கண்ணீர் கறை சில நாளாய் மறையாதிருந்து பின்பு மறைந்து போயிருந்தன.

கவிராயரின் பக்கத்திலிருந்த சிறுவனான பேரன்தான், இருபதாம் நூற்றாண்டில் இமவான் பேரனை நேருக்கு நேராகத் தரிசித்த பாம்பன் ஸ்சுவாமிகளின் பிரதான சீடரான பாலசுந்தர ஸ்சுவாமிகள் ஆவார்.

திருச்சிற்றம்பலம்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s