Tiruvilayadal puranam 23rd day

*சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
(23)
🌤 திருவிளையாடல் புராணத் தொடர். 🌤
17-வது படலம்.
எளியநடை சரிதம்.
மாணிக்கம் விற்ற படலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கோமேதகத்தின் இலக்கணங்கள்.
வலாசுரனது கொழுப்பு விழுந்த இடங்களில் கோமேதக் கனிமங்கள் தோன்றின.

கோமேதகம் தேன் சொட்டு, கோமயம், உறைந்த நெய் இவை போன்றோ, தெளிவாகவோ இருப்பது சிறந்தது.

கோமேதகம் பாவங்களை நீக்கி மனத்தூய்மை கொடுக்கும். அது கிரஹங்களில் ராகுவுக்குரியன. ராகு தசை, ராகு புத்திகளில் அணிந்தால் கிரகபீடை நீங்கும். அரசர்களுக்கு வெற்றியையும், புகழையும் கொடுக்கும்.

புஷ்பராகம்.
இரண்யாட்சனைக் கொல்லவும், கடலுக்கடியில் ஒளித்து வைத்திருந்த பூமியை மீட்கவும் மகாவிஷ்ணு வராக அவதாரம் கொண்டார்.

வராகம் கோபம் கொண்டு உறுமிக் கொண்டே ஓடும் சமயம் அதன் மூக்கிலிருந்து கபம் விழுந்த இடங்களிலெல்லாம் புஷ்பராகக் கனிகள் தோன்றின. அசுர குலத்தில் பிறந்தாலும் வலன் சிவபக்தி உள்ளவன். நற்குண நற்செய்கைகள் உடைய வலனின் கபமும் புஷ்பராகக் கற்களாகி அரசரும் அணியும் பெருமை பெற்றது.

மேற்பாகம் உருண்டு மனதை ஈர்க்கக்கூடிய புஷ்பராகம் உயர்ந்தது. இதற்கு பதுமராகம் என ஒரு பெயருமுண்டு. பாரியாத்திர மலை உச்சி, மந்தரமலை ஓரங்கள், இங்கெல்லாம் புஷ்பராகங்கள் கிடைக்கின்றன.

பிரகஸ்பதியை வசீகரிக்கக்கூடிய ரத்தினமாதலால் அமராவதியில் ஏராளமாய்க் காணலாம். இந்திரனும் புஷ்பராக நகைகள் நிறைய அணிவான். குருதசை, குரு புத்திகளில் புஷ்பராகம் அணிந்தால் கிரகதோஷங்கள் விலகி மேன்மை பெறலாம்.

வைடூரியம்.
வலாசுரனது உதிர்ந்த உரோமங்களே வைடூரியக் கற்கள். இடி பூமியில் விழுந்தாலும் வைடூரியம் உண்டாகாது.

வலதுபுறம் ஒளி வீசுவது உயர்ந்தது. இதை அணைவரும் அணியலாம். இடதுபுறம் ஒளி வீசுவதை அரசரும், அமைச்சர்களும், அரசியலில் ஈடுபட்டவர்களும் அணிந்தால் தீராத பிரச்சினைகளும் தீரும்.

ஜயமும், கீர்த்தியும் கிடைக்கும். பகைவர்கள் தலையெடுக்க மாட்டார்கள். பின்புறம் ஒளி வீசுவது வணிகர்களுக்கு; முன்புறம் ஒளிவீசுவது துன்பப்படுபவர்களுக்கு; கேதுவின் இரத்தினமான இதை அணிந்தவரை தசையோ, கேதுபுத்திகளோ, ஏழ்மையோ அவஸ்தைபடுத்தாது.

மகதநாட்டிலும், கோரக்கத்திலும்,பாரசீகத்திலும், சிங்களத் தீவிலும், மலயம், திரிகூட் மலைகளிலும் வைடூரியக் கனிமங்கள் இருக்கின்றன.

மூங்கில் இலை, பூனைக்கண், மயில்கழுத்து, இவை போன்றவை சிறந்தவை. வழுவழுப்பாக, பிரகாசிக்கும் மூளியில்லாத வைடூரியங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.

பவளம்.
வலாசுரனது உடல் மாமிசம் பவளமாயிற்று. செவ்வாய் தசை, செவ்வாய் புத்திகளில் அணிபவர் அங்கார பீடைகளிலிருந்து விடுபவர். பவளம் தேயும் குணமுடையது. கன்னிப் பெண்கள் அணிந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி விரைவில் திருமணம் நடைபெறும். பவளம் அணிவதால் அரசர் போரில் எதிரியை சுலபமாய் வெற்றி கொள்வர்.

முன்பு மலைகளுக்கெல்லாம் இறக்கைகள் இருந்தன. அவை நினைத்த போது பறந்து திரிந்து வந்தன. பறந்த மலைகள் திடீரென்று இறங்கியதால் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளானார்கள்.

தேவர்கள் இந்திரனிடம் முறையிடவே, அவன் மலைகளின் இறக்கைகளை வெட்டி விட்டொழித்தான். வெட்டிய இடத்திலிருந்து பெருகிய உதிரமும் பவளக் கனியாயிற்று.

அந்தப் பவளங்கள் மலர்ந்த கிம்சுகப் பூப்போல் இருக்கும். மகாவிஷ்ணு மதுகைடபர்களைக் கொன்ற சமயம் சிந்திய மாமிசங்கள் பவளமாயின.

சூரியனது சாரதியான அருணனை அவன் தாயான வினதையானவள் பூரண வளர்ச்சி அடையுமுன் ஜாடியிலிருந்து எடுத்து விட்டாள். அப்போது சிந்திய இரத்தமும் பவளமாயிப் போயின.

கோவைப்பழம், செம்பருத்தி, கிளிமூக்கு நிறங்களில் இருக்கும் பவளங்கள் சிறந்தவை. பூச்சியரித்தல், ஓட்டை, மண்ஒட்டி இருத்தல் பவளத்தின் குற்றங்கள்.

தோஷமற்ற பவளத்தை அணிவதால் ஆயுள், நன்மக்கள், நோயின்மை, சிறந்த இல்லறம் கிடைக்கும்.

வைரமும், முத்தும் பிராம்மண வர்ணம்.

மாணிக்கமும் பவளமும் சஷத்திரிய வர்ணம்.

புஷ்மராகம்,கோமேதகம்,வைடூரியம் இவைமூன்றும் வைசீய வர்ணம்.

நீலமும் பச்சையும் நான்காம் வர்ணம்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கம் விற்ற படலத்தின்கண், ஈசன் இன்னும் நாளை விவரித்துரைப்பார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s