Billi, soonyam – Periyavaa

நா….ஒண்ணும🕉🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉் மந்திரவாதி இல்ல…🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஜெயராமன் என்பவர் பெரியவாளிடம், அத்யந்த பக்தி கொண்டவர்.

அவருக்கு வந்த ஸோதனையோ மஹா பயங்கரம்! குடும்பத்தையே ஒரே உலுக்காக உலுக்கி எடுத்த பயங்கரம்!

ஸாதாரணமாக எல்லாருக்குமே அவரவர் வீட்டுக்குள் சென்றதும் "அக்கடா" என்றிருக்கும். ‘Home sweet home’ என்றெல்லாம் சொல்லத் தோன்றும்.

ஆனால், பாவம்! ஜெயராமனுக்கோ, அவருடைய குடும்பத்தாருக்கோ, வீட்டுக்குள் நுழைவது என்றாலே குலைநடுக்கமாக இருந்தது!

யார் வைத்த ஏவலோ? என்ன துர்தேவதையோ? பாவம் அவர்கள் பட்ட பாடு கொஞ்ச-நஞ்சமில்லை! அவர் முதலில் அதை அலக்ஷியம் செய்ததும், இன்னும் மோஸமாக ஆனது!

மனிதர்களால் வரும் கஷ்டம் என்றால், போலீஸிடம் போகலாம். ஆனால், இதுவோ, ஆபிசாரம்! ஏவப்பட்ட துர்தேவதைகளின் அட்டகாஸம்!

பெரியவாளைவிட காவல் தெய்வம் யார்?

வீட்டில் திடீர் திடீரென்று கொத்து கொத்தாக தலைமுடி விழுகிறது ! மலம் வந்து விழுகிறது! வேறு என்னென்னவோ துர்நாற்றங்கள்! அலை அலையாக பாலைவன சூறாவளிபோல், எங்கிருந்தோ ஆற்றுமணல் சாரல்கள்!

இந்த துன்பங்களுக்கு முடிவு ஏது?

"ஆபத்பாந்தவா! அனாதரக்ஷகா! தீனபந்தோ!" என்று பெரியவா தங்கியிருந்த ஏதோ ஒரு ஊருக்கு குடும்பத்தோடு சென்று விட்டார். வீட்டுக்குள் யாருக்குமே தனியாக இருக்க தைர்யம் இருந்தால்தானே!

"பெரியவாதான் காப்பாத்தணும்! ஆத்துல இருக்க முடியல.. பெரியவா.! கண்டகண்ட நாத்தம் வருது, ஸாப்ட்டுண்டே இருக்கறச்சே, மலம் வந்து விழறது, ஒரே.. முடியா வந்து விழறது….எங்களைக் காப்பாத்துங்கோ!…"

பாதங்களில் விழுந்து அழுதார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்….

" நா… ஒண்ணும் மந்த்ரவாதி இல்ல! எனக்கு அதப்பத்தில்லாம்…. எதுவும் தெரியாது. ஒன்னோட கஷ்டங்கள… எங்கிட்ட சொல்லி ப்ரயோஜனமில்ல"

என்ன இது?…..பெரியவாளே… இப்டி நிர்தாக்ஷிண்யமா… மறுத்துட்டாரே !

ஜெயராமன் ஏமாற்றத்தின் உச்சிக்கே போய் விட்டார்.

"பெரியவாகிட்ட அழுது அழுது சொன்னதெல்லாம் வீணா? பெரியவாளுக்கு எம்மேல இரக்கம் வராதா? அவதாரபுருஷர், இவர்ட்ட அடைக்கலம்னு வந்தா…. இவரோ, ‘எங்கிட்ட சொல்லி எந்த ப்ரயோஜனமுமில்ல’-ங்கறார் ! என்ன ஆனாலும் ஸெரி ! குடும்பத்தோட வந்தாச்சு ! இனிமே… பெரியவா அனுக்ரஹம் கெடைக்காத வரைக்கும், வீட்டுக்கு திரும்பி போகப் போறதில்ல"

த்ருடமாக தீர்மானித்து விட்டார் !

பெரியவா இவரிடம் எதுவுமே பேசவில்லை. ஆனால், அன்றிலிருந்து மூன்று நாட்கள் காஷ்ட மௌனம்! ஜெயராமனோ, அங்கிருந்தவர்களிடம் புலம்பினார்.

"நாங்க திரும்பி போறதா இல்ல! பெரியவாளோடயே தங்கிடறோம். அந்த ஆத்துக்குள்ள போய் எங்களால குடித்தனம் பண்ண முடியாது"

பிடிவாதமாக அங்கேயே, பெரியவாளின் ஸன்னிதியில், குடும்பத்தோடு தங்கியிருந்தார்.

நான்காவது நாள். ஸ்நானம் பண்ண பெரியவா ஆத்தங்கரைக்கு போனபோது, ஜெயராமன், குடும்பத்தோடு நெடுஞ்சாண்கிடையாக பெரியவா பாதத்தில் விழுந்தார்.

"எங்களுக்கு பெரியவாளை தவிர வேற கதி கெடையாது.! பெரியவா அனுக்ரஹம் இல்லாம, நாங்க திரும்பி போகமாட்டோம்"

அவர்களை நாலு நாட்கள் பெரியவா, தான் இருக்கும் இடத்தில் தங்கவைத்ததே, பரம கருணையால்தான்! அவர்களுடைய அத்தனை வினைகளையும், தன்.. ஸன்னிதி விஸேஷத்தால் பொஸுக்கி இருக்கிறார்.

தெய்வம் திருவாய் மலர்ந்தது. பாரிஷதரை அழைத்தார்….

" இவன்ட்ட….ஒரு இரும்பு ஆணிய… கொணுந்து குடு"

ஆணி வந்தது…

"ஜெயராமா! இந்த ஆணிய…. ஒங்காத்து உள்ளுக்குள்ள இருக்கற ஏதாவது சொவத்ல [சுவற்றில்] அடிக்கணும்"

"ஸெரி பெரியவா….."

முகமெல்லாம் மலர்ந்தது!

"இரு..இரு…நா…சொல்றதை முழுக்க கேளு.! இந்த ஆணி அடிக்கற வேலைய… யாராவுது ஒத்தை ஆளாத்தான் பண்ணணும்! தொணைக்கி-ன்னு… பத்து பேரைக் கூட்டிண்டு போகப்டாது! தைர்யமா இருக்கணும்! பயங்கர ஶப்தம் கேட்டாக் கூட, பயப்படப்டாது…! அப்றமா….ஆத்துல, பஶுஞ்சாணி போட்டு மொழுகி, வெளக்கேத்துங்கோ! க்ஷேமமா இருங்கோ!"

கையை தூக்கி ஆஸிர்வதித்தார்.

ஆயிரம் கும்பிடு போட்டுவிட்டு "ஆணி" ரூபத்தில் பெரியவாளின் அனுக்ரஹத்துடன் ஊருக்குப் போனார்.

பெரியவா அத்தனை "பாதுகாப்பு" குடுத்தாலும், வீட்டைப் பார்த்ததுமே உதறலெடுத்தது! பாவம், வீட்டுக்குள் போகவே பயந்தார்கள்.

இவர்கள் வீட்டு ‘பயங்கரம்’ தெரிந்த அக்கம்பக்கம் உள்ள நண்பர்கள், பெரியவா சொன்னதைக் கேட்டதும்,

"சும்மா…உள்ள… போங்கோ ஜெயராமன்! பெரியவா இருக்கா…."

வெளியிலிருந்தே தைர்யம் சொன்னார்களே ஒழிய, அவர்களுக்கும் கிலிதான்!

இத்தனை வழிகாட்டிய பகவான்… இதற்கும் வழி காட்டாமலா போவான்?

வந்தார்! தைர்யஶாலியான ஒரு மனிதர்!

ஜெயராமன் "கப்"பென்று அவரை அப்படியே பிடித்து ஆணியும், சுத்தியலுமாக உள்ளே அனுப்பிவிட்டார்.

அவர் வீட்டுக்குள் சென்று, ஸ்விட்சை துழாவி, விளக்கைப் போட்டு, ஆணியை சுவற்றில் அடிக்கத் தொடங்கியதுதான் தாமதம்!……

அங்கிருந்த மேஜை நாற்காலி எல்லாம் குப்புற விழுந்து உருண்டு பறந்தன ! காதே செவிடாகும்படி பயங்கர ஓலம்.. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது ! வீட்டின் மேற்கூரை ஓடுகள் பறந்தன ! ஸமையற்கட்டில், பாத்திரங்கள் உருண்டன!

அவர் உடல் உதறிய வேகத்திலேயே சுத்தியல் தானாகவே ஆணியை அடித்து உள்ளே இறக்கியிருக்கும்! வேலை முடிந்ததும், ஒரே ஓட்டமாக வெளியே ஓடி வந்துவிட்டார்!

ஒரு பத்து நிமிஷம் இந்த அமர்க்களம் இருந்தது.

அப்புறம் கொல்லைப் புறத்தில் ஒரு தென்னை மரம் வேரோடு ஸாய்ந்து விழுந்தது. அதோடு எல்லா ஒலிகளும் அடங்கின.

இந்தமாதிரி மரத்தையோ, கிளையையோ ஸாய்த்துவிட்டு போவதுதான், துர்தேவதைகள் போய்விட்டதற்கான அடையாளம்!

அத்தனை பேரும், அந்த தைர்யஶாலி மனிதருக்கு நன்றி சொன்னார்கள்.

‘பெரியவா! பெரியவா!’ என்று புலம்பினார்கள், விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

ஜெயராமனின் மனைவி வீட்டை பெருக்கி, பஶுஞ்சாணி போட்டு மெழுகி, கோலம் போட்டு, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, நைவேத்யம், தீபாராதனை பண்ணினாள்.

அன்று முதல் அந்த வீட்டில் எந்த தொல்லையும் இல்லை. பயமின்றி வாழ்ந்தனர்.

"யாமிருக்க பயமேன்" என்று பெரியவா அபயம் குடுத்தபின், எந்த துர்ஶக்தி அங்கே எதிர்த்து நிற்க முடியும்?

Om Sri Guru Raghavendraya Namaha, 🙏🙏🙏🙏🙏

என்னுடைய சிறு வயஸில், இதே மாதிரி ஒரு பயங்கர ஸம்பவம், மதுரையில் நடந்திருப்பதாக கேள்விப்பட்டிருக்கேன்.

டி.வி.எஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒருவருடைய வீட்டில், இதே மாதிரி துர்தேவதைகளின் அட்டஹாஸம் கொடிகட்டிப் பறந்தது!

அந்த வீட்டின் குழந்தைகள், வீட்டில் கஷ்டப்பட்டு செய்து கொண்டு போன ‘ஸைன்ஸ் ப்ராஜக்ட்’, ஸ்கூலுக்கு சென்று டீச்சர் முன்னால் காட்டும்போது, அந்தப் பக்கங்கள் எல்லாம் கோடு கோடாக, யாரோ ப்ளேடால் கீறியது போல் கிழிந்திருக்குமாம்! முடி பொஸுங்கிய துர்வாடை, வீடு பூரா வீசுமாம்! ஸாப்பிட உட்கார்ந்தால், கண்ட கண்ட பதார்த்தங்கள் வந்து இலையில் விழுமாம்! பாவம்… எந்த பூஜையும், பாராயணமும் எந்த வித பலனையும் தரவில்லை.

அப்போது ஶ்ருங்கேரி மஹா ஸந்நிதானம் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர் ஸ்வாமிகள், மதுரையில் முகாமிட்டிருந்தார்.

இந்த வீட்டில் உள்ளவர்கள் ஸ்ரீ பெரியவாளிடம் சென்று தாங்கள் படும் கஷ்டங்களை கூறி அழுதனர். பெரியவாளை அவர்களுடைய வீட்டுக்கு வரும்படி மன்றாடினார்கள்.

பெரியவா அவர்களிடம், அவர்களுடைய வீட்டின் முன்பக்க வாஸல் கதவையும், பின்பக்க புழக்கடைக் கதவையும் நன்றாக திறந்தே வைக்கச் சொன்னார்.

அப்போதெல்லாம் வீட்டின் வாஸலில் நின்றால், புழக்கடை வரை பின்னால் உள்ள தெரு கூட தெரியும்.

அவரும், பெரியவா சொன்னபடி ரெண்டு பக்கத்து வாஸல் கதவுகளையும் நன்றாக மட்டமல்லாக்க திறந்து வைத்தார்.

அன்று ஶ்ருங்கேரி பெரியவா அவருடைய வீடு இருக்கும் தெரு வழியாக நடந்து சென்றார். இந்த பக்தரின் வீட்டுக்கு முன்னால் வந்ததும், கோலம் போடும் இடத்தில் நின்று கொண்டு, ஒரே ஒரு நிமிஷம் தன்னுடைய திவ்ய த்ருஷ்டியை வீட்டின் புழக்கடை வாஸலையும் தாண்டி ஓட விட்டார்!

அவ்வளவுதான்! அந்த இடத்திலிருந்து சென்று விட்டார், பெரியவா!

ஆனால், அதன் பின் அந்த வீட்டின் பயங்கரம், துர்தேவதைகள் அட்டஹாஸம் எல்லாம் போன இடம் தெரியாமல் மறைந்தது!

ஶ்ருங்கேரியோ, காஞ்சீபுரமோ அல்லது வேறு எந்த ஸமயமோ, மதமோ…. மஹாபுருஷர்கள் எல்லோருமே அன்பிலும், அனுக்ரஹத்திலும், ஆத்மஶக்தியிலும் ஒன்றாகவே இருந்திருக்கிறார்கள்; இன்றும் இருக்கிறார்கள்.

நம்முடைய மனஸில் ஆட்டம் போடும் கோபம், போட்டி, பொறாமை, பொய், வஞ்சனை போன்ற பல துஷ்டஶக்திகளை ஓட ஓட விரட்டியடிக்க, நாமும் நம் மனஸை, எப்போதும் திறந்தே வைப்போம்! பெரியவாளின் திவ்யமங்களமான ஸ்மரணம் எனும் த்ருஷ்டியை, உள்ளே வாங்கிக் கொள்வோம்!🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

One Response to Billi, soonyam – Periyavaa

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s