Sambrani during pooja

பு+ஜையின்போது சாம்பிராணி காட்டுவது ஏன்?

வாசம் மிகுந்தது சாம்பிராணி. இந்த சாம்பிராணியை, பூஜை செய்யும் போது நெருப்பில் போட்டு புகையை விட்டு இறைவனுக்கு காட்டுவார்கள்.

🔔 பாறை போல் இறுகி கிடக்கும் சாம்பிராணி கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், மனிதனின் புதாகாரமாக, மிகக் கடினமாக கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிடைத்தவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.

🔔 இன்றைய கால கட்டத்தில் கட்டி சாம்பிராணியை அதிகம் பயன்படுத்துபவர்கள் இல்லை. கம்ப்யுட்டர் சாம்பிராணியை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு ஏற்பவே ஒரு கதை உண்டு.

🔔 கூரத்தாழ்வானின் திருமகனார் பராசர பட்டர். இவர் ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு வைணவ உலகின் தலைமை பொறுப்பில் திகழ்ந்தவர். இவர், இறைவனுக்கு எந்த புகையும், பூவும் சமர்ப்பிக்கலாம், கண்டகாலிப் பூவும் சுட்டலாம் என்று உரை அளித்தார்.

🔔 இதை கேட்டுக் கொண்டிருந்த சீடர் ஒருவருக்கு வருத்தம் ஏற்பட்டது. ‘இறைவனுக்கு வாசனை மிகுந்த பூக்களும் புகையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறும்போது, நீங்கள் இப்படி உரை செய்யலாமா?" என்று கேட்டுவிட்டார்.

🔔 அதற்கு பட்டர், இறைவன் எனக்கு இதைத்தான் நீ சூட்ட வேண்டும், காட்ட வேண்டும் என்று விதிக்கவில்லை. கண்டகாலிப்பு சாத்துவதற்காகப் பறிக்கப் போனால், அதில் உள்ள முட்கள் பக்தனின் கையை பதம் பார்த்துவிடும்.

🔔 எனவே அடியார்கள் மீது கருணை கொண்டே அவற்றை வேண்டாம் என்று மறுத்தாரே ஒழிய இறைவனுக்கு விருப்பமானது விருப்பமில்லாதது என்று எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

🔔 பெரும்பாலும் சாம்பிராணியை வாங்கி நெருப்பில் போட்டு புகைப்பது நன்மையை தரும். வாசனை மட்டுமல்லாமல் பூச்சிகள் கூட சாம்பிராணி வாசனைக்கு வராது இறைவனுக்கு எதை படைத்தாலும் மன நிறைவுடன் செய்தால் அதுவே போதும் …

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s