Taste of Bhagavan’s name

மந்திரம்,ஸ்தோத்திரம், ஹோமம் இவை எல்லாவற்றையும் விட, இறைவனின் நாமம் (பெயர்) சொல்வது மிக எளிமையானது. ராமா, கிருஷ்ணா என்று சொல்வதில் என்ன சிரமம்! இது அபரிமிதமான பலன் தரவல்லது என பெரியோர்கள் கூறுகின்றனர்.
* கலியுகத்தைக் கடப்பதற்கு நாமஸ்மரணம் என்னும் இறைநாமத்தை ஜெபிப்பதே சிறந்தது என ஞானிகள் கூறுகின்றனர்.
* நாரதர், சுகபிரம்மம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதிகாலத்தில் இறைநாமத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்தனர்.
* வைகுண்டபதியான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துக்காட்ட கிருஷ்ண சைதன்யராக அவதரித்தார். நாமத்தின் பெருமையை, ""கேட்டதை தரும் கற்பக விருட்சம்” என குறிப்பிடுகிறார்.
* கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், சோகாமேளர், ஜக்குபாய், மீரா முதலிய ஞானிகள் கலியுகத்தில் அவதரித்து நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.
* போதேந்திர சுவாமிகள், சத்குரு ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குருசுவாமி பஜனை சம்பிரதாயத்தை தென்னகத்தில் பரப்பினர்.
* கடலிலேயே பெரிய கடல் பிறவிக்கடல். நாமஸ்மரணத்தில் ஈடுபடுவர்கள் பிறவிக்கடலை சுலபமாக தாண்டி விடுவர். கோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக மட்டுமே, ஒருவரது மனம் இதில் ஈடுபடும் என துளசிதாசர் கூறுகிறார்.
* எங்கெல்லாம் ராமநாமம் ஜெபிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் ராமதூதர் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்புரிவார்.
* ஹரிநாமம் ஜெபிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. காலநேரம் பார்க்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். அந்த வீடே வைகுண்டம் போலாகிவிடும் என்று ஞானேஸ்வரர் குறிப்பிடுகிறார்.
* ராமானுஜர் எல்லோரும் மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக, ""ஓம் நமோ நாராயணாய’ என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருள்செய்தார்.
* ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் பகவான் நாம மகிமையைக் கூற முடியாமல் ஓய்ந்து விட்டதாக ஸ்ரீதர ஐயாவாள் குறிப்பிடுகிறார்.
* எட்டெழுத்து மந்திரமான நாராயணநாமத்தின் பெருமையை திருமங்கையாழ்வார், ""நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்,” என்று போற்றுகிறார்.
* இறைநாமத்தை ஜெபித்தால் உயிரும் உள்ளமும் உருகுவதாக கூறுகிறார் வள்ளலார்.
* இதயத்தின் ஆழத்தில் இருந்து பக்தியுடன் தனியாகவோ, கோஷ்டியாகவோ நாமசங்கீர்த்தனம் செய்யும்போது இறைவன் நம்மைத் தேடி வருவது உறுதி.
* இசையோடு நாமசங்கீர்த்தனம் செய்யும் போது இறைவனும் நம் இசைக்கேற்ப நர்த்தனமாடி வருவான். நம் இதயக்கோயிலில் ரத்தினசிம்மாசனம் இட்டு அமர்வான். அப்போது பரமானந்தம் நம்முள் ஊற்றெடுக்கும்.
* இந்த ஆனந்த அனுபவத்தை பிறருக்கு எடுத்துரைக்க முடியாது. கரும்பின் இனிமையை வார்த்தைகளால் எப்படி வர்ணித்தாலும் கரும்பைச் சுவைத்தவரைத் தவிர மற்றவர்க்கு அதனை உணரமுடிவதில்லை.
* இறைநாமத்தின் சிறப்பை "நாமருசி’ என்று குறிப்பிடுவர். இதனை ரசித்து ருசித்தால் தான், நம் பிறவி அர்த்தமுள்ளதாகும்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

One Response to Taste of Bhagavan’s name

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s