Vaisvadevam

Courtesy:Sri.Sarma Sastrigal

வைஸ்வதேவம் என்றால் என்ன?
நமது சனாதன தர்மத்தின் விசேஷமான ஒரு அம்சத்தை பறைசாட்டுகின்ற ஒரு நித்ய கர்மா இது.
(”பரிஷேசனம்” புஸ்தகத்திலிருந்து ஒரு பக்கம்)

அதை சற்று பார்ப்போம்.

வைஸ்வதேவம் என்பது க்ருஹஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு நித்ய கர்மா ஆகும். மாத்யாஹ்னத்திற்கு பிறகு செய்ய வேண்டியதாகும் இது. சில க்ருஹ்ய ஸூத்ரங்களின்ப்படி விவாஹமான 15 நாட்களுக்குள் குருமுகமாக ஆரம்பிக்க வேண்டும்.

இக்கால கட்டத்தில் இதை அனுஷ்டிப்பது கஷ்டம்தான். இருந்தாலும் இதை பற்றி சிறிதாவது நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிப்பது விசேஷம்தான்.

”பஞ்சஸூனா க்ருஹஸ்தஸ்ய வர்தந்தே” :
நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ’பஞ்ச ஸூனா’ எனும் ஐந்து தோஷங்கள் நமக்கு வந்து சேருகின்றன. அந்த தோஷ நிவர்த்தியாகத்தான் இது செய்யப்படுகின்றது. கண்டினீ, பேஷணீ, சுல்லீ, உதகும்பம், உபஸ்கரம் ஆகியவைகள்தாம் இந்த ஐந்து விதமான தோஷங்கள். அவைகளை சுருக்கமாக இங்கு பார்ப்போம்.
* கண்டினீ: அரிவாமனை உரல் போனறவைகளை உபயோகப்படுத்தும் போது ஏற்படும் க்ருமி முதலியவைகளின் அழிவு
* பேஷனீ: அம்மி, குழவி, இக்காலத்தில் க்ரைண்டர், மிக்ஸீ மூலம் ஏற்படுகின்ற ஜீவஹிம்ஸை
* சுல்லீ: அடுப்பு (காஸ் ஸ்ட்வ்வாகவும் இருக்கலாம்) மூட்டுகிறோம் அல்லவா அப்போதும் கண்ணுக்குத் தெரியாத சில க்ருமிகள் நாசமடைவதற்கு வாய்ப்புண்டு.
* உதகும்பம்: ஜலம் நிரப்பி வைக்கும் பாத்திரங்கள் மூலம் ஏற்படுவது
* உபஸ்காரம்: அன்றாடம் துடப்பத்தினாலோ அல்லது மற்ற உபகரணங்களினாலோ ‘க்ளீன்’ செய்யும்போது நடக்கும் ஜீவஹிம்ஸை. தான்யத்திலிருந்து அன்னமாகும் வரை பலவிதமான தோஷங்களை போக்குவதற்கும் வைஸ்வதேவம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மகாஸ்வாமிகள்:
இதைப் பற்றி காஞ்சி மகா ஸ்வாமிகளின் அருள்வாக்கு இதோ:
“யோசித்துப் பார்த்தால் இத்தனை ஜீவராசிகளுக்கு உபத்ரவத்தை உண்டாக்கிக் கொண்டு வயிற்றை வளர்க்கிறோமே என்று துக்கம் உண்டாகிறது. ஆனால் இதெல்லாம் நம்மால் தவிர்க்க முடியாத விஷயங்கள். நாம் வேண்டுமென்று இவற்றைக் கொல்லவில்லை. எனவே நம்மை மீறிச் செய்கிற இந்தத் தோஷங்களுக்குப் ப்ராயச்ச்சித்தம் உண்டு. அப்படி செய்கிற ப்ராயச்ச்சித்தமே வைஸ்வதேவம் என்பது”

வைஸ்வதேவம் செய்வது இக்காலகட்டத்தில் அவ்வளவு சுலபமல்ல. நியமங்கள் நிறைய உண்டு. வைஸ்வதேவத்தை ஜ்வலிக்கின்ற ஹோம அக்னியில் செய்ய வேண்டும். ஒளபாஸன அக்னியில் செய்வது ஒரு சம்ப்ரதாயம். தனியாகவும் ஒரு குமிட்டியில் அனுஷ்டிப்பதும் வழக்கத்தில் உள்ளது.

வைஸ்வதேவத்தில் தேவர்கள், மனிதர், பித்ருக்கள் ஆகியவர்களுக்கும், 14 விதமான பிராணிகளுக்கும் பலிதானம் செய்யப்படுகின்றது. அதுமட்டுமல்ல. குயர்கள், ஸித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள், வித்யாதரர்கள், பிசாசர்கள் என்ற 8 தேவ கணங்களுக்கும், ஊர்ந்து செல்வன, வானரர்கள், நான்கு கால் பிராணிகள், பக்ஷிகள், மிருகங்கள் ஆகியவைகளுக்கும், 14 கணங்களுக்கும் மரங்களுக்கும் பலிதானம் செய்யப்படுகின்றது.

வைஸ்வதேவம் செய்வதின் மூலம் அனைத்து ஜீவராசிகளுக்கும் பலி அளித்த பலனையும், புண்யத்தையும்கூட வைஸ்வதேவம் அனுஷ்டிப்பவருக்கு கிடைக்கின்றது.

வைஸ்வதேவம் செய்வதற்கு பிரயோக விதிகள் பொதுவல்ல. ஸூத்ரத்தின் அடிப்படையில் அனுஷ்டானம் மாறும்.
அன்னத்தினால் வைஸ்வதேவம் செய்ய முடியாத நிலையில் ஜலத்தால் தர்ப்பணரூபமாக செய்யலாம். அதுவும் முடியாத சந்ந்தர்ப்பகளில் வைஸ்வதேவ மந்திரங்களையாவது படனம் செய்யலாம் என்பது சில ரிஷிகளின் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

5 Responses to Vaisvadevam

  1. balaji690 says:

    can you please post sutra wise vaisvadeva mantram please to enable those who want perform this? Thank you.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s